அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் டெரஃப்யூஜியா டிரான்சிஷன் பறக்கும் காரின் வணிக ரீதியிலான உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. தற்போது பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, கூடுதல் சக

By Saravana Rajan

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் டெரஃப்யூஜியா டிரான்சிஷன் பறக்கும் காரின் வணிக ரீதியிலான உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

அமெரிக்காவை சேர்ந்த டெரஃப்யூஜியா நிறுவனம் டிரான்சிஷன் என்ற 2 பேர் செல்வதற்கான பறக்கும் காரை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. இந்த கார் பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றிபெற்றதாகவும் தெரிவித்ததுடன் விலையையும் அறிவித்தது. வர்த்தக ரீதியில் இந்த பறக்கும் காரை சந்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கார் சாலையிலும், வானிலும் செல்வதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இரண்டு துறைகளிமிருந்து அனுமதி பெறுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

இந்த நிலையில், டிரான்சிஷன் பறக்கும் காரில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக டெரஃப்யூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னர் பெட்ரோல் எஞ்சினில் அறிமுகம் செய்யப்பட்ட டிரான்சிஷன் கார் தற்போது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் துணையுடன் இயங்கும் ஹைப்ரிட் மாடலாக வர இருக்கிறது.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரமானது லித்தியம் அயான் பாஸ்பேட் என்ற நவீன வகை பேட்டரியிலிருந்து பெறப்படும். இதர லித்தியம் அயான் பேட்டரியை விட இந்த லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரி மிகச் சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

தரையில் ஓடும்போது ஹைப்ரிட் மோடில் வைத்து இயக்க முடியும். அதேபோன்று, பறக்கும்போது பூஸ்ட் மோடு மூலமாக கூடுதல் சக்தியை பெறுவதற்கான வாய்ப்பும் இப்போது கொடுக்கப்பட்டு இருப்பதாக டெரஃப்யூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

இந்த பறக்கும் காரில் புதிய இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மிகவும் சவுகரியமான உணர்வை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பறக்கும் காரில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்களும் மேம்படுத்தப்பட்டு இருப்பதால், ஓட்டுபவர் மிக எளிதாக இந்த பறக்கும் காரை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

தரையில் செல்லும்போது அதிக பாதுகாப்பை வழங்கும் விதத்தில், காரை சற்றிலும் ஓட்டுனர் பார்ப்பதற்காக 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட சீட் பெல்ட்டுகள் மற்றும் ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன. பயணிகளின் உடைமைகளை வைப்பதற்கு அதிக இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!

புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் டிரான்சிஷன் கார் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, வரும் ஆண்டு இந்த பறக்கும் காரை வணிக ரீதியிலான உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளதாக டெரஃப்யூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது புதிய மின்சார பறக்கும் காரையும் அந்நிறுவனம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Terrafugia Transition Flying Car slated for 2019 production.
Story first published: Thursday, July 19, 2018, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X