“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

ஒரு ட்விட் தான், தனது பணிகளை விடப்போகிறேன் என்ற ஒரே ஒரு ட்விட் தான், எலான் மஸ்க்கிற்கு ஆயிரக்கணக்கில் குவிந்து டுவிட்டரில் ஆறுதல் கூற ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள். அப்படி அந்த டுவிட்டர் பதிவில் என்ன தான் இருந்தது? தொடர்ந்து பார்ப்போம்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் செயல்பாட்டுடன் இருப்பவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். குறிப்பாக டுவிட்டரில் இவர் பதிவிடும் ட்விட்கள் பலமுறை பல அர்த்தங்களை கொண்டவையாக இருக்கக்கூடியவை, சிலமுறை சர்ச்சைக்குரியவைகளாக இருக்கக்கூடியவை. இருப்பினும் எலானை பின் தொடருப்பவர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

இதானலேயே டுவிட்டரில் இவர் பதிவிடும் கருத்துகளுக்கும், மற்றவர்களின் பதிவுகளுக்கு இவர் பதிவிடும் பதில்களுக்கும் லைக்ஸும், கமெண்ட்ஸும் சில நிமிடங்களிலேயே குவியும். அவ்வப்போது டுவிட்டரில் யாரையாவது கலாய்த்து விட்டு செல்லும் எலான், சமீபத்தில் கூட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸின் டுவிட்டர் பதிவில், நீங்க இன்னும் உயிரோடதான் இருக்கீங்களா? என கேட்டு அதிர வைத்திருந்தார்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

இந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள ட்விட் ஒன்று வைரலாகியுள்ளது மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ‘பேசாமல் எனது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு முழு நேர இன்ஃப்ளூயன்சராகி விடலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீர்கள்' என்பதுதான் அந்த ட்விட் ஆகும். அதனை கீழே காணலாம்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

இதனை கண்ட நெட்டிசன்கள் உடனே ஒவ்வொருவராக தங்களது கருத்துகளை கூற ஆரம்பித்துவிட்டனர். இதில், "எலான், பேசாமல் நீங்க யூடியூப் சேனல் ஆரம்பியுங்கள். நான் சப்ஸ்கிரைப் செய்கிறேன்" என ஒருவரது கமெண்ட் பதிவு பலரை சிரிக்க வைத்துள்ளது. இவ்வாறு எலானின் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்களின் கருத்துகள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

உண்மையிலேயே எலான் தனது பணிகளை எல்லாம் விட போகிறாரா அல்லது விளையாட்டாக இந்த பதிவை பதிவிட்டாரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் வெறுமனே பணிகள் என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த பணிகள்? வீட்டு பணிகளா? அல்லது அலுவலக பணிகளா? என்பது தெரியவில்லை. எலான் மஸ்க், சமீப காலமாகவே, "மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறும் காலம், நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் விரைவாக வரும்" என மிகவும் தொலைநோக்கு பார்வையுடன் பேசி வருகிறார்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

ஆகையால் அவரது கருத்துகளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் சிலர் அவரது சமீபத்திய ட்விட்டிற்கு, "நீங்கள் ஏற்கனவே எத்தனையோ துறைகளில் தாக்கங்களை பலருக்கு ஏற்படுத்திவிட்டீர்கள், இதற்குமேல் பெரிய இன்ஃப்ளூயன்சர்ஸ் யாரும் வரப் போவதில்லை" என சீரியஸாக பாராட்டி வருகின்றனர். இத்தகையவர்கள் பல்ப் வாங்கவுள்ளனரா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

இதற்குமுன் ஒரு பதிவில், தான் டெஸ்லா நிறுவனத்தில் இன்னும் சில வருடங்களுக்கு தலைமை பொறுப்பை வகிப்பேன் என எலான் தெரிவித்திருந்தார். உலகளவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் டெஸ்லா முன்னிலையில் இருப்பதை நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே தனது தயாரிப்பு வாகனங்களை இந்த அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்கிறது.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

இவ்வளவு ஏன், மிகவும் சிக்கலான மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாத சீனாவில் கூட டெஸ்லா கார்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. நம் இந்தியாவில் இன்னும் டெஸ்லா கால் பதிக்கவில்லை. இத்தகைய பிரபலமான பிராண்டை எலான் மஸ்க் தான் அமெரிக்காவில் நிறுவினார். அதுமட்டுமின்றி ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் நிறுவனத்திற்கும் இவர் தான் சிஇஓ ஆவார்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

உலகின் பெரும் பணக்காரராக இருந்தாலும், எலானிடம் தற்போதைக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என்றால் நம்ப முடிகிறதா. தனது அலுவலங்களை தான் பெரும்பாலும் இவர் வசிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார். பலர் எலானை விசித்திரமானவர் என கூறுகின்றனர். என்னை கேட்டால் அவர் எதிர்காலத்தில் இருந்து வந்த மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும். மிக சிறந்த பிஸ்னஸ்மேன், மிகவும் ரிஸ்க்கான முடிவுகளை முழு தைரியத்துடன் மேற்கொள்ளக்கூடியவர்.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

வரும் காலங்களில் உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் சாலைகளில் அதிகளவில் உலாவரக்கூடிய கார்களாக எதிர்பார்க்கப்படும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் நம் இந்திய சாலைகளிலும் உலாவரும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் இந்த அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலை பணிகளை துவங்க பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

“எல்லா பணிகளையும் விட்டு விலகவுள்ளேன்” எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்விட் தான் - பரபரப்பாகிய டுவிட்டர்!!

இதற்கு உதாரணமாக இதற்குமுன் ஏகப்பட்ட ஸ்பை படங்களையும், வீடியோக்களையும் நம் செய்திதளத்தில் பார்த்துள்ளோம். இந்த வகையில் சமீபத்தில் நமக்கு கிடைத்திருந்த ஸ்பை படங்கள், டெஸ்லா இந்தியாவில் அதன் சார்ஜிங் நெட்வொர்க்கையும் உருவாக்க ஆரம்பத்துவிட்டது என்பதை தெரியப்படுத்தி இருந்தன. ஏனெனில் அந்த ஸ்பை படங்களில், மூடிய கட்டடம் ஒன்றிற்குள் டெஸ்லாவின் விரைவு சார்ஜர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

Most Read Articles

English summary
Tesla ceo elon musk wants to quit all his jobs and to become an influencer full time
Story first published: Saturday, December 11, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X