அம்பானி, மல்லையாவுடன் உலகின் டாப்-10 கார் சேகரிப்பாளர்கள்!!

நாணயங்கள், தபால் தலைகளை சேகரிப்பது போன்றே உலகின் கோடீஸ்வரர்கள் பலர் கார் சேகரிப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கார் சேகரிப்பு கலையில் ஈடுபாடு கொண்டவர்கள் பணத்தை பற்றி கவலைப்படாமல், விலை மதிப்பற்ற பல கார் மாடல்களை தங்களது கேரேஜில் வைத்து பராமரித்து பாதுகாக்கின்றனர்.

அதுபோன்று, உலகிலேயே அதிக கார்களையும், விலை மதிப்பற்ற கார்களையும் சேகரித்து வைத்திருப்பவர்களில் டாப்-10 பட்டியலில் இருப்பவர்களின் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

 1. புருனே சுல்தான் ஹசானல் போல்கியா

1. புருனே சுல்தான் ஹசானல் போல்கியா

உலகிலேயே அதிக கார்களை சேகரித்து வைத்திருப்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர் புரூனே சுல்தான் ஹசானல் போல்கியாதான். இவர் 7,000 கார்களை சேகரித்து வைத்துள்ளார். இந்த பட்டியலில் 209 பிஎம்டபிள்யூ கார்களும், 574 பென்ஸ் கார்களும், 452 ஃபெராரி கார்களும், 179 ஜாகுவார் கார்களும், 382 பென்ட்லீ கார்களும் அடங்கும். தவிர, அஸ்டன் மார்ட்டின், லம்போர்கினி, கோனிக்செக் உள்பட பல அரிய கான்செப்ட் கார்களும் இவரது கேரேஜில் உள்ளன.

 2. அபுதாபி ரெயின்போ ஷேக்

2. அபுதாபி ரெயின்போ ஷேக்

ஏற்கனவே இவரை பற்றிய செய்தியை வழங்கியிருக்கிறோம். இவரிடம் 400 க்கும் அதிகமான கார்கள் உள்ளன. இதுதவிர, உலகின் மிக பிரம்மாண்டமான டிரக் ஒன்றையும் தனது கேரேஜின் அடையாளமாக நிறுத்தி வைத்திருக்கிறார். இவர் தனது திருமணத்தின்போது 7 பென்ஸ் கார்களை வாங்கி, ஒவ்வொரு காருக்கும் வானவில்லின் ஒவ்வொரு வண்ணத்தை தீட்டி அழகு பார்த்தவர். இதன் காரணமாகவே இவருக்கு ரெயின்போ ஷேக் என்று பெயர் வந்தது.

 3. ஜே லெனோ

3. ஜே லெனோ

அமெரிக்காவின் பிரபல டாக் ஷோ தொகுப்பாளரான ஜே லெனோ கார் சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். 200க்கும் மேற்பட்ட கார்களை மிக சிறப்பாக வைத்து பராமரித்து வருகிறார். உலகின் குறைந்த விலை காரான நானோவும் இவரது கேரேஜில் உள்ளது. இவர் சேகரிப்பில் 22 நீராவி வாகனங்கள், 25 விண்டேஜ் கார்களும் அடக்கம்.

 4. கென் லிங்கென்பெல்டர்

4. கென் லிங்கென்பெல்டர்

பெர்ஃபார்மென்ஸ் எஞ்சினியரிங் நிறுவனத்தின் உரிமையாளரான லிங்கர்பெல்டர் 40,000 சதுர அடி பரப்பளவில் தனது கார் கேரேஜை அமைத்துள்ளார். இவரது கேரேஜில் 150க்கும் மேற்பட்ட மஸில் ரக கார்கள் உள்ளன. புகாட்டி, லம்போர்கினி, கார்வெட், மஸ்டாங், போர்ஷே என இந்த பட்டியல் நீள்கிறது.

5. முகேஷ் அம்பானி

5. முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியும் கார் சேகரிப்பில் ஆர்வம் உடையவர். இவரது கேரேஜில் நூற்றுக்கணக்கான கார் மாடல்கள் அழகு சேர்த்து வருகின்றன. பென்ட்லீ, மேபேக், புகாட்டி, மெர்சிடிஸ், பென்ஸ் போன்ற பிராண்டுகளின் பல மாடல்கள், விண்டேஜ் கார்கள் போன்றவை இவரது கேரேஜில் உள்ளன.

 6. விஜய் மல்லையா

6. விஜய் மல்லையா

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் கார் சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவரிடம் 250க்கும் மேற்பட்ட கார்கள் கேரேஜில் உள்ளன. இதில், சுவையான வரலாறு கொண்ட பல விண்டேஜ் கார்களை தனது கேரேஜில் வைத்துள்ளார். இவை விலை மதிப்பில்லாதவைகளாக குறிப்பிடப்படுகின்றன.

 7. ஜெரார்டு லோபஸ்

7. ஜெரார்டு லோபஸ்

லோட்டஸ் ஃபார்முலா-1 அணியின் தலைவர் ஜெரார்டு லோபஸும் கார் சேகரிப்பில் முனைப்புடன் செயல்படுவர். டாப் கியர் இதழின் சிறந்த கார் சேகரிப்பாளர் என்ற பெருமையை பெற்றவர். விண்டேஜ் கார்களையும், மஸில் ரக கார்களையும் சேகரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். போர்ஷே, பீஜோ, புகாட்டி போன்ற பல உயர்ரக கார்கள் இவரது கேரேஜை அலங்கரித்து நிற்கின்றன.

8. டிமிட்ரி லோமகோவ்

8. டிமிட்ரி லோமகோவ்

கார்களுக்கான ஒரு பிரத்யேக மியூசியத்தை உருவாக்கி கார் சேகரிப்பின் உன்னத கலையின் மாண்பை பரைசாற்றி வருபவர் டிமிட்ரி லோமகோவ். கடந்த 40 ஆண்டுகளில் பல அரிய கார்களை தேர்வு செய்து சேகரித்துள்ளார். ஹிட்லர் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஏலத்தில் எடுத்தபோது உலக அளவில் இவரது பெயர் பிரபலமானது.

9. ஜே கே

9. ஜே கே

கிராமி விருது பெற்ற பிரபல பாடகர் ஜே கே கார் சேகரிப்பில் தீராத காதல் கொண்டுள்ளார். இவரிடம் 68க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. ரோல்ஸ்ராய்ஸ், லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ், மஸராட்டி, அஸ்டன் மார்ட்டின் என நீள்கிறது இந்த பட்டியல்.

10. ரால்ஃப் லாரன்

10. ரால்ஃப் லாரன்

அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் டிசைனர் ரால்ஃப் லாரனும் கார் சேகரிப்பில் பிரபலமானவர். இவிடம் பல அரிய வகை கார்கள் உள்ளன. ஆல்ஃபா ரோமிடோய, புகாட்டி, பென்ட்லீ, மெக்லாரன் என இவரது கேரேஜில் பல உயர் வகை கார்களும், விண்டேஜ் கார்களும் உள்ளன. இவரது கேரேஜில் இருக்கும் கார்களில் 98 சதவீதம் சிவப்பு நிற வண்ணம் கொண்டவை என்பது குறி்பபிடத்தக்கது. மேலும், இவரது கேரேஜ் முழுதும் கருப்பு நிற விரிப்பு போடப்பட்ட தரையில் வெள்ளை நிற மேடைகளில் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X