இதுவரை வெளியான 15 சிறந்த யமஹா பைக் மாடல்கள்: சிறப்புத் தொகுப்பு

Written By:

ஸ்டைல், செயல்திறன் என்று அசரடிக்கும் யமஹா பைக்குகள் இந்திய பைக் பிரியர்களின் கனவு பிராண்டு என்றால் மிகையில்லை. கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பைக் மார்க்கெட்டில் யமஹா பைக் மாடல்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அழுத்தமானவை.

1970 அல்லது 80களில் பிறந்தவர்கள் என்றால் யமஹா பைக்குகளை சொந்தமாக வாங்கி வைத்திருந்தோ அல்லது ஓட்டியோ பார்த்தோ பெருமைப்பட்ட முதல் தலைமுறை மக்களாக இருந்திருப்பர்.

கையாளுமை, செயல்திறனில் அசரடிக்கும் யமஹா பைக்குகளில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த ஆர்எக்ஸ்100, ஆர்எக்ஸ்135, ஆர்டி350 போன்றவற்றை இந்தியர்கள் ருசித்து, ரசித்திருப்பர். அதனுடன் சேர்த்து கடந்த காலத்தில் யமஹா வெளியிட்ட 15 சிறந்த பைக் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. யமஹா ஒய்டி2 பைக்

01. யமஹா ஒய்டி2 பைக்

மாடல்: யமஹா ஒய்டி2

அறிமுக ஆண்டு: 1959

எஞ்சின்: 247சிசி

பவர்: 14.5 பிஎச்பி

எடை: 140 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 113கிமீ

Photo Credit: Yamaha Community

 யமஹா ஒய்டி2 பைக் தொடர்ச்சி...

யமஹா ஒய்டி2 பைக் தொடர்ச்சி...

யமஹாவின் முதல் 2 ஸ்ட்ரோக் இரட்டை சிலிண்டர் கொண்ட மோட்டார்சைக்கிள். ஜெர்மனியை சேர்ந்த அட்லர் நிறுவனத்தின் எம்பி250 பைக்கை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட மாடல். மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் யமஹா பைக்கும் இதுதான். எலக்ட்ரிக் ஸ்டார்ட், மூடிய செயின்கார்டு போன்ற சிறப்பம்சங்களை கொண்ட மாடலாக இது வெளியிடப்பட்டது. யமஹா ஒய்டி1 பைக்கிற்கு மாற்றாக, 1959ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.---

 02. யமஹா ஒய்டி எஸ்3சி Big Bear

02. யமஹா ஒய்டி எஸ்3சி Big Bear

மாடல்: யமஹா ஒய்டி எஸ்3சி Big Bear

அறிமுக ஆண்டு: 1965

எஞ்சின்: 246சிசி

பவர்: 21 பிஎச்பி

எடை: 159 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 142 கிமீ

Photo credit: Bonhams

யமஹா ஒய்டி எஸ்3சி Big Bear தொடர்ச்சி...

யமஹா ஒய்டி எஸ்3சி Big Bear தொடர்ச்சி...

யமஹாவின் முதல் ஆட்டோமேட்டிக் ஆயிலிங் சிஸ்டம் கொண்ட ஒய்டிஎஸ்3 பைதக் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடல் இது. மேலும், இந்த பைக்தான் யமஹாவின் முதல் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் வகை மோட்டார்சைக்கிள் மாடல். 1964ம் ஆண்டு நடந்த ரோடு ரேஸிங் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் யமஹா முதல்முறையாக வெற்றி பெறுவதற்கு ஒய்டிஎஸ்3 பைக்தான் முக்கிய காரணம். அதிலிருந்து வெளிப்பட்ட இந்த Big Bear மாடல் பைக் பிரியர்களிடத்தும், ரேஸ் பிரியர்களிடத்தும் பெரும் செல்வாக்கை பெற்றது.

Photo credit: Bonhams

 03. யமஹா டிஆர்3

03. யமஹா டிஆர்3

மாடல்: யமஹா டிஆர்3

அறிமுக ஆண்டு: 1974

எஞ்சின்: 347சிசி

பவர்: 58 பிஎச்பி

எடை: 107 கிலோ

அதிகபட்ச வேகம்: தகவல் இல்லை

Photo credit: Wiki Commons/PekePON

 யமஹா டிஆர்3 தொடர்ச்சி...

யமஹா டிஆர்3 தொடர்ச்சி...

1960களின் பிற்பகுதியில் சர்வதேச பைக் பந்தய போட்டிகளிலிருந்து ஜப்பானை சேர்ந்த பல அணிகள் பின்வாங்கத் தொடங்கின. இதனால், யமஹாவின் 2 ஸ்ட்ரோக் இரட்டை சிலிண்டர் எஞ்சின் கொண்ட மாடல்கள் பைக் பந்தயங்களில் ஆதிக்கம் செலுத்த துவங்கின. புளோரிடாவில் நடக்கும் டேடோனா 200 பைக் பந்தயத்தில் குறைவான சிசி எஞ்சினுடன் சாம்பியன் பட்டம் பெற்ற ஒரே மாடல் இதுதான். ஆம், 750சிசி மோட்டார்சைக்கிளுடன் போட்டி போட்டு வென்ற இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டியவர் டான் எம்டே என்ற பைக் பந்தய வீரர்.

Photo credit: Bonhams

04. யமஹா ஒய்இசட்250

04. யமஹா ஒய்இசட்250

மாடல்: யமஹா ஒய்இசட்250

அறிமுக ஆண்டு: 1974

எஞ்சின்: 246சிசி

பவர்: 21 பிஎச்பி

எடை: 159 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 141 கிமீ

 யமஹா ஒய்இசட்250 தொடர்ச்சி...

யமஹா ஒய்இசட்250 தொடர்ச்சி...

1973ல் மோட்டோக்ராஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் யமஹா நிறுவனம் ஒய்இசட்250 உள்பட பல மோட்டார்சைக்கிள்களில் மோனோ ஷாக்அப்சார்பர் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. மேலும், ரேஸர்களிடமும், பைக் பிரியர்களிடமும் சிறந்த மோட்டோக்ராஸ் பைக் என்ற பெருமையை ஒய்இசட்250 பைக் பெற்றது.

05. யமஹா ஆர்டி350பி

05. யமஹா ஆர்டி350பி

மாடல்: யமஹா ஆர்டி350பி

அறிமுக ஆண்டு: 1973

எஞ்சின்: 347சிசி

பவர்: 39 பிஎச்பி

எடை: 154 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 169 கிமீ

 யமஹா ஆர்டி350பி தொடர்ச்சி...

யமஹா ஆர்டி350பி தொடர்ச்சி...

1973ல் யமஹாவின் 124சிசி முதல் 347சிசி வரையிலான 2 ஸ்ட்ரோக் இரட்டை சிலிண்டர் எஞ்சின் கொண்ட மோட்டார்சைக்கிள்களை மேம்படுத்தியது. அந்த மேம்படுத்தப்பட்ட மாடல்களின் பெயருக்கு முன்னால் RD என்ற அடைமொழியை சேர்த்தது. மேலும், இந்த மாடல்கள் ரீட் வால்வுகளும் பொருத்தப்பட்டு வெளியிடப்பட்டன. இதன்மூலம், அதிக அழுத்தத்திலும் எஞ்சின் சிறப்பாக செயல்படும் வகையில் இருந்ததுடன், அதிக செயல்திறனையும் வெளிப்படுத்தின. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் பெரிய வரவேற்பை பெற்றன.

Photo credit: Wiki Commons/Bergfalke2

இந்திய ஆர்டி350 மாடல்...

இந்திய ஆர்டி350 மாடல்...

இந்தியர்களுக்கு பெர்ஃபார்மென்ஸ் எனும் சுவையை ஊட்டிய பைக் மாடல்களில் ஒன்று யமஹா ஆர்டி350. 1983ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் மாடல். அப்போது ரூ.18,000 விலையில் விற்பனைக்கு வந்தது. 1983 முதல் 85 வரை இந்த பைக்குகளை இந்தியாவில் எஸ்கார்ட்ஸ் நிறுவனம் அசெம்பிள் செய்து விற்றது. 1986 முதல் முழுவதுமாக இந்தியாவிலேயே பாகங்களை சப்ளையை பெற்று எஸ்கார்ட்ஸ் உற்பத்தி செய்தது. முதலில் அசெம்பிள் செய்யப்பட்ட பைக்குகளில் இருந்த எஞ்சின் 39 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது. பின்னர், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் 30.5 பிஎச்பி பவரை அளிக்கும் வகையில் ஒரு மாடலும், 27 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மற்றொரு மாடலும் அறிமுகம் செய்யப்பட்டன. 1990 வரை இந்த பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. யமஹா ஆர்டி350பி மாடலை இந்தியாவில் ராஜ்தூத்350 பிராண்டில் லைசென்ஸ் பெற்று யமஹா விற்பனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. எமது எடிட்டர் ஜோபோ குருவில்லாவிடம், 39 பிஎச்பி பவரை அளிக்கும் யமஹா ஆர்டி350 மாடல் இருக்கிறது. படத்தில் இருப்பது அவருடைய பைக்தான். பல சூப்பர் பைக் மாடல்களுடன் சளைக்காமல் இன்றும் வார இறுதியில் நீண்ட தூர ட்ரிப் சென்று வருகிறது.

 06. யமஹா டிஇசட்250

06. யமஹா டிஇசட்250

மாடல்: யமஹா டிஇசட்250

அறிமுக ஆண்டு: 1973

எஞ்சின்: 247சிசி

பவர்: 53 பிஎச்பி

எடை: 108கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 225கிமீ

Photo credit: Bonhams

 யமஹா டிஇசட்250 தொடர்ச்சி...

யமஹா டிஇசட்250 தொடர்ச்சி...

1973ம் ஆண்டு யமஹாவின் TD வரிசைக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட TZ வரிசை மாடல். ரேஸ் வீரர்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த பைக்கில் 108 டிகிரி கோணத்திலான கிராங்சாஃப்ட் பொருத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த TZ வரிசை தொடர்ந்து மேம்படுத்தி வெளியிட்டு வந்தது யமஹா. 1973ல் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் 250சிசி பிரிவில் இந்த பைக் மாடலை பயன்படுத்தி சாம்பியன் பட்டம் பெற்றார் டெய்ட்டர் பிரவுன்.

Photo credit: Bonhams

07. யமஹா ஒடபிள்யூ48

07. யமஹா ஒடபிள்யூ48

மாடல்: யமஹா ஒடபிள்யூ48

அறிமுக ஆண்டு: 1970

எஞ்சின்: 498சிசி

பவர்: 130 பிஎச்பி

எடை: 145 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 290 கிமீ

Photo credit: Yamaha

யமஹா ஒடபிள்யூ48 தொடர்ச்சி...

யமஹா ஒடபிள்யூ48 தொடர்ச்சி...

உலக அளவிலான பைக் பந்தயங்களில் பல வெற்றிகளை குவித்த மாடல் இது. கென்னி ராபர்ட்ஸ் மற்றும் கியாகோமா அகோஸ்டினி போன்ற பைக் பந்தய ஜாம்பவான்களின் கைகளுக்கு சவால் கொடுத்த மாடல். இந்த பைக்கில் மிகுனி இரட்டை கார்புரேட்டர் சிஸ்டம் கொண்டது. மணிக்கு 290 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய மாடலாக வெளியிடப்பட்டது.

Photo credit: Wiki Commons/Rikita

08. யமஹா ஆர்டி250 எல்சி

08. யமஹா ஆர்டி250 எல்சி

மாடல்: யமஹா ஆர்டி250 எல்சி

அறிமுக ஆண்டு: 1980

எஞ்சின்: 247சிசி

பவர்: 35 பிஎச்பி

எடை: 139 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 171 கிமீ

 யமஹா ஆர்டி250 எல்சி தொடர்ச்சி...

யமஹா ஆர்டி250 எல்சி தொடர்ச்சி...

தனது டிஇசட் வரிசை ரேஸ் பைக்குகளின் லிக்யூடு கூல்டு 250சிசி எஞ்சின் மற்றும் மோனோஷாக் அப்சார்பர்கள் கொண்ட சாதாரண விற்பனைக்கு ஏற்ற மாடலாக இதனை யமஹா வெளியிட்டது. க்ராண்ட் ப்ரீ பந்தயங்களில் பங்கேற்க பயிற்சி எடுத்த பல ரேஸர்கள் இந்த பைக்கில் பயிற்சி எடுத்தனர். 80களில் பைக் பிரியர்கள் மற்றும் இளைஞர்களின் கனவு மாடலாக திகழ்ந்தது.

 09. யமஹா ஆர்இசட்500

09. யமஹா ஆர்இசட்500

மாடல்: யமஹா ஆர்இசட்500

அறிமுக ஆண்டு: 1984

எஞ்சின்: 499சிசி

பவர்: 87 பிஎச்பி

எடை: 180 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 216 கிமீ

Photo credit: Flickr/Mitch Mcpherson

 யமஹா ஆர்இசட்500 தொடர்ச்சி...

யமஹா ஆர்இசட்500 தொடர்ச்சி...

ரேஸ் மோட்டார்சைக்கிளின் சாதாரண சாலை பயன்பாட்டு வகை மாடலாக யமஹா ஆர்இசட்500 பைக் வெளியிடப்பட்டது. இந்த பைக்கில் வி4 2 ஸ்ட்ரோக் ஸ்ட்ரோக் லிக்யூடு கூல்டு எஞ்சின் இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பிராண்டு பெயரில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டது. ஜப்பானில் RZV500 என்றும், வட அமெரிக்காவில் RZ500 என்றும், இங்கிலாந்தில் RD500 என்ற பெயரிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த பைக்கில் பக்கவாட்டில் இரு சைலென்சர்களும், இருக்கைக்கு கீழே இரண்டும் இருப்பது தனித்துவமானது.

Photo credit: Flickr/El Caganer

10. யமஹா வி- மேக்ஸ்

10. யமஹா வி- மேக்ஸ்

மாடல்: யமஹா வி- மேக்ஸ்

அறிமுக ஆண்டு: 1985

எஞ்சின்: 1198சிசி

பவர்: 145 பிஎச்பி

எடை: 270 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 230 கிமீ

யமஹா வி- மேக்ஸ் தொடர்ச்சி...

யமஹா வி- மேக்ஸ் தொடர்ச்சி...

அதிசக்திவாய்ந்த விரைவான ஆக்சிலேரசனை வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இந்த மோட்டார்சைக்கிள், ஹேண்டிலிங்கில் சொதப்பலான யமஹா மாடலாக குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனையாகும் மாடல்களின் அதிகபட்ச பவர் வெளிப்படுத்தும் திறன் 95 பிஎச்பி என்ற அளவில் குறைக்கப்பட்டது. 1985ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் 2007ம் ஆண்டு வரை சிறிய மாற்றங்களுடன் விற்பனை செய்யப்பட்டது.

11. யமஹா எஃப்இசட்ஆர்1000

11. யமஹா எஃப்இசட்ஆர்1000

மாடல்: யமஹா எஃப்இசட்ஆர்1000

அறிமுக ஆண்டு: 1987

எஞ்சின்: 1002சிசி

பவர்: 125பிஎச்பி

எடை: 240 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 269 கிமீ

Photo credit: Wiki Commons/Kuro8124

 யமஹா எஃப்இசட்ஆர்1000 தொடர்ச்சி...

யமஹா எஃப்இசட்ஆர்1000 தொடர்ச்சி...

1987ல் அறிமுகம் செய்யப்பட்டப்போது, யமஹா நிறுவனத்தின் அதிக சிசி கொண்ட சூப்பர்ஸ்போர்ட் வகை மாடல் இதுதான். பின்னர், 1989ல் இதன் எஃப்இசட்ஆர் எக்ஸ்அப் என்ற புதிய மாடலையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பைக்கில் லிக்யூடு கூல்டு 4 சிலிண்டர் எஞ்சின் இருந்ததுடன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வந்தது.

Photo credit: Wiki Commons/Marcos 88

 12. யமஹா ஜிடிஎஸ் 1000

12. யமஹா ஜிடிஎஸ் 1000

மாடல்: யமஹா ஜிடிஎஸ்1000

அறிமுக ஆண்டு: 1993

எஞ்சின்: 1002சிசி

பவர்: 100 பிஎச்பி

எடை: 251கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 213 கிமீ

Photo credit: Bonhams

 யமஹா ஜிடிஎஸ்1000 தொடர்ச்சி...

யமஹா ஜிடிஎஸ்1000 தொடர்ச்சி...

1993ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடலின் முக்கிய சிறப்பம்சம் என்ன தெரியுமா? இது ஹப் சென்டர் ஸ்டீயரிங் என்ற புதிய திருப்பு அமைப்பு கொண்ட மாடலாக வெளியிடப்பட்டது. இது நிலையான ஓட்டுதலுக்கு துணை புரிந்தாலும், ஓட்டுபவருக்கு ஒரு கனமான உணர்வை தந்தது. முன்புறத்தில் சிங்கிள் சைடு ஸ்விங் ஆரம் கொண்டதாகவும் வந்தது. இதன் வாட்டர் கூல்டு எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வந்தது. இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தையும் கொண்டிருந்தது.

Photo credit: Bonhams

13. யமஹா ஒய்இசட்எஃப் 600 ஆர்6

13. யமஹா ஒய்இசட்எஃப் 600 ஆர்6

மாடல்: யமஹா ஒய்இசட்எஃப் 600 ஆர்6

அறிமுக ஆண்டு: 1998

எஞ்சின்: 599சிசி

பவர்: 98..7 பிஎச்பி

எடை: 169 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 250கிமீ

 யமஹா ஒய்இசட்எஃப்600 ஆர்6 தொடர்ச்சி...

யமஹா ஒய்இசட்எஃப்600 ஆர்6 தொடர்ச்சி...

1990களில் 600சிசி மோட்டார்சைக்கிள் மீதான ஆர்வமும், வரவேற்பும் வெகுவாக அதிகரித்தது. அவர்களை மையப்படுத்தி யமஹா வெளியிட்ட மாடல்தான் இது. சமாதானம் கிடையாது என்ற கொள்கையுடன் வெளியிடப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் செயல்திறனிலும், கையாளுமையிலும் மிகச்சிறப்பானதொரு யமஹா பைக் என்ற பெயரை பெற்றது.

14. யமஹா ஒய்இசட்எஃப் 600 ஆர்1

14. யமஹா ஒய்இசட்எஃப் 600 ஆர்1

மாடல்: யமஹா ஒய்இசட்எஃப்600 ஆர்1

அறிமுக ஆண்டு: 1998

எஞ்சின்: 998சிசி

பவர்: 150 பிஎச்பி

எடை: 190 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 266 கிமீ

 யமஹா ஒய்இசட்எஃப்600 ஆர்1 தொடர்ச்சி...

யமஹா ஒய்இசட்எஃப்600 ஆர்1 தொடர்ச்சி...

எவ்விதத்திலும் சமரசம் கிடையாது என்ற டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்ட மற்றொரு மாடல் இது. 1998ல் இந்த சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை யமஹா அறிமுகம் செய்தது. ஹோண்டாவின் ஃபயர்பிளேடு மோட்டார்சைக்கிளை வீழ்த்துவதற்காக யமஹா களமிறக்கப்பட்ட மாடல் இது. தற்போது இருக்கும் ஆர்1 மாடல் 200 பிஎச்பி பவரை அளிப்பதாகவும், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வந்து கொண்டிருக்கிறது.

 15. யமஹா ஆர்எக்ஸ்100

15. யமஹா ஆர்எக்ஸ்100

மாடல்: யமஹா ஆர்எக்ஸ்100

அறிமுக ஆண்டு: 1985

எஞ்சின்: 98சிசி

பவர்: 77 பிஎச்பி

எடை: 95 கிலோ

அதிகபட்ச வேகம்: மணிக்கு 113 கிமீ

Photo credit: Youtube

 யமஹா ஆர்எக்ஸ்100 தொடர்ச்சி...

யமஹா ஆர்எக்ஸ்100 தொடர்ச்சி...

1985ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் மாடல் 1996 வரை உற்பத்தியில் இருந்தது. பெர்ஃபார்மென்ஸ் பைக்குகள் என்றால் எப்படியிருக்கும் என்று பட்ஜெட் பைக் வாடிக்கையாளர்களை அறிய வைத்த மாடல். இன்றைக்கும் இந்த மோட்டார்சைக்கிளுக்கு ஒரு தனி மவுசு இருக்கிறது. மேலும், இதுவரை நான் ஓட்டிய மோட்டார்சைக்கிள்களில் என்னை மிக மிக கவர்ந்த மாடல்களில் இதுவும், இதன் வழித்தோன்றலான ஆர்எக்ஸ்135 பைக்கும் முக்கிய இடமுண்டு. இதன் கையாளுமையும், பெர்ஃபார்மென்சும் யமஹா பிராண்டு மீதான மதிப்பை உயர்த்தின என்றால் மிகையாகாது.

Photo credit: Capt. Das

பிரத்யேக பைக்குகள் தொடர்பான செய்திகள்

பிரத்யேக பைக்குகள் தொடர்பான செய்திகள்

01. உலகின் பிரத்யேகமான பைக் மாடல்கள்...

02. இந்தியாவின் அதிவேக சூப்பர் பைக்குகள்...

03. உலகின் காஸ்ட்லி பைக் மாடல்கள்...

 

English summary
Here is a list of the Top 15 of the meanest Yamaha machines ever created. If you have owned or ridden any of these gems, do drop us a line sharing your experience.
Story first published: Tuesday, May 5, 2015, 17:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more