கவர்ச்சிக்கு மட்டுமா அலாய் வீல்கள்... எத்தனை நன்மைகள்...!!

காரின் தோற்றத்தையும், மதிப்பையும் பன்மடங்கு கூட்டுவதில் அலாய் வீல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், அலாய் வீல் மோகம் கார் பிரியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிக ஆர்வம் இருக்கிறது.

சரி, அலாய் வீல்கள் காரின் தோற்றத்தையும், மதிப்பையும் கூட்டுவதற்கான ஆக்சஸெரீயாக மட்டுமே கூற முடியாது. இவற்றை தாண்டி பல்வேறு நன்மைகளை அலாய் வீல்கள் வழங்குகின்றன. அந்த கூடுதல் நன்மைகளை தெரிந்துகொண்டால் அதனை வாங்கி பொருத்தும்போது அதிக மனநிறைவு உங்களிடம் ஏற்படும். அலாய் வீல்களின் சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.


சாதக, பாதகங்கள்

சாதக, பாதகங்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் அலாய் வீல்களின் சாதகங்கள் மற்றும் பாதக அம்சங்களை பட்டியலிட்டுள்ளோம்.

அலாய் வீல்கள் தயாரிப்பு

அலாய் வீல்கள் தயாரிப்பு

அலாய் அல்லது மேக் வீல்கள் அலுமினியம் அல்லது மெக்னீசியத்தில் தயாரிக்கப்படுகின்றன. சில சமயம் இரண்டும் கலந்த கலவையிலும் தயாராகின்றன. விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த அலாய் வீல்கள் தற்போது சாதாரண கார்களிலும் கிடைக்கின்றன.

காஸ்ட் அலுமினியம் வீல்கள்

காஸ்ட் அலுமினியம் வீல்கள்

பெரும்பாலான அலாய் வீல்கள் அலுமினிய உருக்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சில அலாய் வீல்கள் மெக்னீசியத்திலிருந்து உருவாக்கப்படுகின்றன. இவை மிகவும் உறுதித்தன்மையும், அதிக நீட்சித்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.

கவர்ச்சி

கவர்ச்சி

அலாய் வீல்கள் காருக்கு அதிக கவர்ச்சியை தருகிறது. பல்வேறு டிசைன்களுடன் வருவதால் நம் விருப்பத்திற்கும், காருக்கும் தக்கவாறு அலாய் வீல்களை வாங்கி பொருத்திக் கொள்ள முடியும்.

வெப்பத்தை கடத்தும் திறன்

வெப்பத்தை கடத்தும் திறன்

ஸ்டீல் வீல்களைவிட அலாய் வீல்கள் அதிக வெப்பக் கடத்தும் திறன் கொண்டது. இதனால், சூடாகும் தன்மை குறைவாக இருக்கும். இதன்காரணமாக, சிறந்த பிரேக் செயல்திறனை பெற முடியும். மேலும், பிரேக் ஃபெயிலியர் ஆபத்தும் குறைவு.

சஸ்பென்ஷன் செயல்பாடு

சஸ்பென்ஷன் செயல்பாடு

ஸ்டீல் வீல்களைவிட அலாய் வீல்கள் அதிக வெப்பக் கடத்தும் திறன் கொண்டது. இதனால், சூடாகும் தன்மை குறைவாக இருக்கும். இதன்காரணமாக, சிறந்த பிரேக் செயல்திறனை பெற முடியும். மேலும், பிரேக் ஃபெயிலியர் ஆபத்தும் குறைவு.

அதிக மைலேஜ்

அதிக மைலேஜ்

அலாய் வீல்கள் இலகு எடை கொண்டதாக இருப்பதால் காரின் மொத்த எடை குறைவதால், சற்றே கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு உதவுகின்றன.

உறுதித்தன்மை

உறுதித்தன்மை

உறுதியான அலுமினியம்-மக்னீசியம் கலவையில் தயாரிக்கப்படுவதால் சாதாரண ஸ்டீல் வீல்களை விட அலாய் வீல்கள் அதிக உறுதிகொண்டது. இதனால், அதிக பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும். தெறிப்புகள் மற்றும் உடையும் ஆபத்துக்கள் குறைவு.

இவங்களுக்கு பெட்டர்

இவங்களுக்கு பெட்டர்

ஸ்டீல் வீல்களை போன்று அலாய் வீல்கள் துருப்பிடிக்காது. குறிப்பாக, கடற்கரையோரங்களில் கார் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு அலாய் வீல் சிறந்த சாய்ஸ்.

டயர் ஆயுள்

டயர் ஆயுள்

சிறந்த வெப்பக் கடத்தும் திறன் இருப்பதால், டயர்களும் வெப்பமடைவது குறையும் என்பதால், நீடித்த ஆயுளை தரும். பிரேக் தொழில்நுட்பத்திற்கும் அலாய் வீல்கள் சிறந்த நண்பனாக திகழ்கிறது. அதிக காற்றோட்டம் இருப்பதுதான் காரணம். மேலும், டயர்கள் வெப்பமாவதும் குறையும்.

ஜோடி பொருத்தம்

ஜோடி பொருத்தம்

ட்யூப்லெஸ் டயர்களுக்கு அலாய் வீல்தான் சிறந்த ஜோடி. ஏனெனில், அலாய் வீல்கள் அதிக உறுதித்தன்மை கொண்டிருப்பதோடு, சிறந்த வடிவமைப்பு பெற்றுள்ளதால், அலாய் வீல்களில் ட்யூப்லெஸ் டயர்கள் கச்சிசமாக பொருந்தும். டயருக்குள் காற்றின் அழுத்தமும் சீராக இருக்கும்.

விலை அதிகம்

விலை அதிகம்

ஸ்டீல் வீல்களை விட அலாய் வீல்கள் மும்மடங்கு விலை அதிகம். இதற்காக, கார் வாங்கும்போது கூடுதல் முதலீடை செய்ய வேண்டியதிருக்கும்.

பெரும்பாலும் சேதமடையாது. ரூ.2,500 முதல் ரூ.50,000 வரையிலான விலையில் ஒரு ரிம் விற்பனை செய்யப்படுகிறது.

வேற வழியில்லை

வேற வழியில்லை

இருப்பினும், கரடு முரடான சாலைகளி்ல் செல்லும்போது தெறிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது உடைந்தாலோ அலாய் வீல்களை பழுதுபார்க்க முடியாது. அப்படியே தூக்கிபோட்டுவிட்டு புதியது மாற்ற வேண்டியதுதான்.

திருட்டு பயம்

திருட்டு பயம்

அறிமுகம் இல்லாத இடங்களில் அல்லது வெளியில் பார்க்கிங் செய்யும்போது அலாய் வீல்களுக்கு லாக்கிங் நட்டுகளை பொருத்துவது அவசியம்.

உங்கள் சாய்ஸ்

உங்கள் சாய்ஸ்

பொதுவாக அலாய் வீல்களில் சாதகமான அம்சங்கள் அதிகம். எனவே, சிறந்த பிராண்டு அலாய் வீல்களை வாங்கி பொருத்துங்கள்.

Most Read Articles
English summary
There's something really attractive about your neighbour's car, but you can't put your finger on it. You look harder, and realise that the wheels on his car are really attractive and lend the car improved visual impact and character. That's because he's probably had alloy wheels fitted to his car. I need to get me a set too, you think to yourself. But is there anything you need to know before spending the usually formidable sums of money to have them installed? We answer these questions and more in this important story.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X