துபாயில் விற்பனையான உலகின் காஸ்ட்லி மோட்டார் இல்லம்!

By Saravana

செல்வ வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளை குறிவைத்தே விலையுயர்ந்த கார்களை தயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்கள் வர்த்தகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆடம்பரத்துக்கு பெயர் போன வளைகுடா நாடுகளில் குறிப்பாக விலையுயர்ந்த கார்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏக வரவேற்பு இருக்கிறது. தனிநபர் மட்டுமின்றி, அரசு துறைகளிலும் ஆடம்பர கார்கள் வைத்திருப்பது அங்கு சகஜம்.

உலகின் மிகவும் விலையுயர்ந்த கார்களை துபாய் போலீசார் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், உலகின் மிக விலையுயர்ந்த மோட்டார் இல்லம் துபாயில்தான் விற்பனையாகியுள்ளது. 3 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் அந்த மோட்டார் இல்லம் வாடிக்கையாளரிடம் கைமாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

இந்திய மதிப்பில் ரூ.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் எலிமென்ட் பலாஸோ மோட்டார் இல்லத்தின் படங்களையும், சிறப்பம்சங்களையும் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

தங்க பூச்சு

தங்க பூச்சு

இந்த மோட்டார் இல்லத்தின் வெளிப்புறத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவே, இந்த மோட்டார் இல்லத்தின் விலையை இந்தளவு உயர்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

 சாலை கப்பல்

சாலை கப்பல்

சாலையில் மிதந்து வரும் கப்பல் போன்று இருக்கிறது இதன் டிசைன். முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட இந்த மோட்டார் ஹோம் மல்டி ஆக்ஸிலில் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் முன்புற டிசைனை பலர் குறைகூறியுள்ளனர்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த நடமாடும் வீட்டை 530 பிஎச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின்தான் உயிர் கொடுக்கிறது. மேலும், இதன் பிரத்யேக காற்றியக்கவியல் வடிவமைப்பு மூலம் 20 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

மாடல்கள்

மாடல்கள்

எலிமென்ட் பிளாசோ நடமாடும் வீடுகள் மூன்று மாடல்களில் வருகின்றன. முதல் மாடலில் தானியங்கி முறையில் திறக்கும் பார், லாஞ்ச் பகுதி, மாஸ்டர் பெட்ரூம் என அனைத்து வசதிகளும் இருக்கும். மேலும், இந்த மோட்டார் இல்லத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் அலுவலகம்

நடமாடும் அலுவலகம்

இரண்டாவது மாடல் வர்த்தகர்களுக்கு ஏற்ற வகையிலானது. கூட்ட அறை, மஸாஜ் வசதிகள் என இதிலும் வசதிகள் ஏராளம். உலகின் மிக சொகுசான நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது.

 எலிமென்ட் விஷன்

எலிமென்ட் விஷன்

முன்மாதிரி வசதிகள் கொண்ட இந்த மாடல் மார்க்கெட்டிங் மற்றும் கண்காட்சிகளுக்கு பயன்படுத்தப்படுத்தலாம். பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு 200 சதுர அடி பரப்பு கொண்ட தரைத்தளம் உள்ளது.

 வசதிகள்

வசதிகள்

வெப்பப்படுத்திக் கொள்ளும் வசதி கொண்ட தரை, ப்ளாட் ஸ்கிரீன் டெலிவிஷன், மொபைல் இன்டர்நெட், கண்காணிப்பு கேமரா உள்பட ஏராளமான வசதிகளை இந்த மோட்டார் இல்லம் கொண்டிருக்கிறது.

 தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

ஆஸ்திரியாவை சேர்ந்த மார்சி மொபைல் நிறுவனம் இந்த மோட்டார் இல்லத்தை தயாரித்து வழங்கியுள்ளது.


Most Read Articles
English summary
The world's most expensive mobile home has gone on sale in Dubai for $3 million, approximately INR 18 crores.
Story first published: Saturday, August 9, 2014, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X