ரெனோ க்விட் கார் உருவான கதை... சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

இந்திய மார்க்கெட்டில் பெரும் ஹிட்டடித்த கார் மாடல்களின் வரிசையில் ரெனோ க்விட் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ரெனோ நிறுவனத்தின் கேம் சேஞ்சர் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கார், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 6 மாதங்களில் ஒரு லட்சத்த்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று இமாலய சாதனை புரிந்திருக்கிறது.

பட்ஜெட் விலையில் டிசைன், வசதிகள், மைலேஜ் என அனைத்து விதத்திலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பும், சிறப்பும் வாய்ந்த இந்த கார் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை மிக கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் உருவாக்கத்திற்கு தலைமை தாங்கியவர் பற்றியும், இந்த கார் உருவான சில விதம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 திட்டத் தலைவர்

திட்டத் தலைவர்

ரெனோ க்விட் கார் உருவாக்கும் திட்டத்தை ஏற்று வெற்றிகரமாக முடித்துகொடுத்தவர் ஜெரரார்டு டீட்டுர்பெட்தான். ஓய்வு பெறும் காலத்தில் இந்த மிக குறைவான விலை கார் திட்டத்தை ஜெரார்டு வசம் ஒப்படைத்தவர் ரெனோ- நிசான் கூட்டணி நிறுவனத்தின் தலைவர் கார்ல் கோஸன். இந்த திட்டம் உருவான விதம் குறித்து ஜெரார்டு டீட்டுர்பெட் சொல்லும் சுவாரஸ்யங்களை தொடர்ந்து காணலாம்.

லோஹன் கார் தயாரிப்பு

லோஹன் கார் தயாரிப்பு

1997ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய மார்க்கெட்டுக்காக 6,000 டாலர் விலை கொண்ட லோஹன் கார் தயாரிப்புத் திட்டத்தை அப்போதைய ரெனோ நிறுவனத்தின் தலைவராக இருந்த லூயிஸ் ஸ்வெட்சர் என்னிடம் வழங்கினார். அப்போதைய காலக்கட்டத்தில் அது மிக குறைவான கார் திட்டம் என்பதால், மிக சவாலுடன் அந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு முடித்தேன். ஆனால், ரெனோ க்விட் கார் அதைவிட சவால் நிறைந்தது.

சர்ப்ரைஸ்...

சர்ப்ரைஸ்...

நான் ஓய்வு பெறும் நிலையில் இருந்தபோதுதான், ரெனோ க்விட் கார் திட்டத்தை ஏற்கும் புதிய பொறுப்பை எங்களது சிஇஓ., கார்ல் கோஸன் என்னிடம் ஒப்படைத்தார். வெறும் 30 வினாடிகளில் முடிவு செய்து, ரெனோ க்விட் கார் திட்டத்தை ஏற்றுக் கொண்டேன்.

கடும் சவால்

கடும் சவால்

1997ல் லோஹன் கார் 6,000 டாலர் விலையில் தயாரிக்க கேட்டுக் கொண்டனர். ஆனால், தற்போது ரெனோ க்விட் காரை வெறும் 4,000 டாலரில் உருவாக்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தின் சிஇஓ., கார்ல் கோஸன் கேட்டுக் கொண்டார். இது மிக சவாலாக இருந்தபோதும், அதனை மிகச் சிறப்பான முறையில் மேற்கொண்டோம்.

மாருதியின் ஆளுமை...

மாருதியின் ஆளுமை...

விலை மட்டும் என்றில்லை, மிக மிக வலுவான மார்க்கெட்டை கொண்டிருக்கும் மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், லோஹன் காரில் இருந்து கற்றுக் கொண்ட அனுபவங்களை வைத்து இந்த காரை மிகச் சிறப்பான முறையில் தயாரிக்க திட்டமிட்டேன்.

தெளிவான நோக்கம்

தெளிவான நோக்கம்

புதிய பட்ஜெட் கார் டிசைனில் ஸ்டைலாக இருக்க வேண்டும், சிறப்பான இடவசதி, அதிக மைலேஜ் தரும் மாடலாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வடிவமைப்புப் பணிகளை துவங்கினோம்.

சரியான கால அளவு

சரியான கால அளவு

கடந்த 2012ல் ரெனோ க்விட் காரின் வடிவமைப்புப் பணிகளை துவங்கினோம். சரியான திட்டமிடல் காரணமாக, 4 ஆண்டுகளில் காரை தயாரிப்பு நிலைக்கு கொண்டு சென்றோம். எல்லாப் பணிகளுமே குறித்த காலத்தில் செய்ததும் வெற்றிக்கான காரணம்.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

வடிவமைப்புப் பணிகள் துவங்கியபோது, விலை குறைப்புக்காக, ரெனோ சான்டேரோ காரின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டோம். அதேபோன்று, ஏற்கனவே இருந்த பிளாட்ஃபார்ம்களையும் ஆய்வு செய்தோம். ஆனால், அது சாத்தியப்படாது என்று முடிவு செய்து ரெனோ- நிசான் கூட்டணியின் புதிய சிஎம்எஃப் பிளாட்ஃபார்மில் புத்தம் புதிய மாடலாக உருவாக்க முடிவு செய்தோம். அதேபோன்று, எஞ்சின், கியர்பாக்ஸ் போன்றவையும் புதிதாகவே உருவாக்க முடிவு செய்து, அதன்படி பணிகளை விரைவுப்படுத்தினோம்.

சிக்கனம்

சிக்கனம்

இந்திய எஞ்சினியர்களை கொண்டு உள்ளூரிலேயே காரை உருவாக்குவதன் மூலமாக 4ல் ஒரு பங்கு செலவீனத்தை குறைத்தோம். இதன்மூலமாக, விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய லாபம் மிகச் சிறப்பாக அமையும் என்று முன்னரே கணித்து அதன்படி திட்டத்தை செயல்படுத்தினோம்.

 400 பேரின் உழைப்பு

400 பேரின் உழைப்பு

ரெனோ க்விட் காருக்கான உதிரிபாகங்களை வாங்கும் பிரிவு, சப்ளையர்கள், கியர்பாக்ஸ் மற்றும் உற்பத்திப் பிரிவு என ஜப்பான், கொரியா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த 400 பணியாளர்கள் எனது கீழ் பணியாற்றினார்கள். நான் மட்டும் நேரடியாக சிஇஓ., கார்ல் கோஸனுக்கு திட்டம் குறித்தத் தகவல்களை அளித்தேன். இதன்மூலம், முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடிந்தது.

உதிரிபாக சப்ளை

உதிரிபாக சப்ளை

காருக்கான பாகங்களை சப்ளை செய்வதற்காக, ஒவ்வொரு பாகத்திற்கும் 5 சப்ளையர்களிடம் கொட்டேஷன் கேட்டு, அதில் தரமாகவும், நியாயமான விலையில் தருபவர்களை தேர்வு செய்தோம். இதன்மூலமாக, காரின் உற்பத்தி செலவீனம் நாங்கள் எதிர்பார்த்தது போலவே அமைந்தது.

சவாலான மார்க்கெட்

சவாலான மார்க்கெட்

இந்தியா மிகவும் சவாலான கார் மார்க்கெட். இந்தியாவுக்காக ஒரு காரை உருவாக்கி வெற்றி பெற செய்துவிட்டால், உலகில் எந்தவொரு மார்க்கெட்டிலும் நாம் வெற்றி பெறுவது எளிதான காரியமாகவே கருதுகிறேன் என்கிறார் ஜெரார்டு.

6 நாட்கள் மட்டுமே விடுப்பு

6 நாட்கள் மட்டுமே விடுப்பு

ரெனோ க்விட் கார் உருவாக்கத் திட்டத்தின்போது, கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 6 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்ததாகவும் ஜெரார்டு தெரிவித்துள்ளார். அந்தளவு இந்த கார் திட்டத்தை வெற்றிப் பெற செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டிருக்கிறார் ஜெரார்டு.

குளோபல் மாடல்

குளோபல் மாடல்

ரெனோ க்விட் இந்தியாவுக்கான மாடல் மட்டுமாக உருவாக்கவில்லை. உலகின் இதர நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான மாடலாக வடிவமைத்துள்ளோம். இதற்காக, உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன் மற்றும் இதர அம்சங்களை உன்னிப்பாக கவனித்து இந்த காரை உருவாக்கியிருக்கிறோம்.

பல மாடல்கள்

பல மாடல்கள்

ரெனோ க்விட் பிளாட்ஃபார்மில் எஸ்யூவி, ஹேட்ச்பேக், செடான், 7 சீட்டர் எம்பிவி மற்றும் பிக்கப் டிரக் என பல புதிய மாடல்களை உருவாக்க இயலும். இதன் மூலமாக, அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பிளாட்ஃபார்மை பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மாடல்களின் மூலமாக ஒரு மில்லியன் கார்களை தயாரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.

மாருதிதான் பெரும் சவால்...

மாருதிதான் பெரும் சவால்...

இந்தியாவில் மாருதி நிறுவனம் மிக வலுவான மார்க்கெட்டை கொண்டிருக்கிறது. அதனை உடைப்பது மிக சவாலான விஷயம். அதே சமயம், இந்தியாவை விட்டு பிற நாடுகளுக்கு செல்லும்போது, அங்கு மாருதியின் சவால் இருக்காது என்பதால், மிக சவுகரியமாக மார்க்கெட்டில் முன்னிலை பெறுவது சுலபமமாக இருக்கும்.

நம்பி கொடுக்கலாம்...

நம்பி கொடுக்கலாம்...

ரெனோ க்விட் மட்டுமில்லை, முதல் தலைமுறை லோஹன், ரெனோ டஸ்ட்டர், ரெனோ லாட்ஜி ஆகிய கார் மாடல்களை உருவாக்கியதன் பின்னணியில் முன்னணி மனிதராக ஜெரார்டு இருந்துள்ளார் என்பது குறிபிடப்படத்தக்கது.

வச்ச குறி தப்பாது...

வச்ச குறி தப்பாது...

ரெனோ க்விட் கார் உருவாக்கத்தின்போது, ஜெரார்டு போட்ட ஒவ்வொரு கணக்கும் மிகச்சரியாக அமைந்ததற்கும் ஒரு சுவராஸ்யமான காரணம் இருக்கிறது. ஆம், ஜெரார்டு டீட்டுர்பெட் ஆட்டோமொபைல் துறைக்கு வருவதற்கு முன்பு கணித பேராசரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பணி...

சென்னையில் பணி...

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெரார்டு சென்னையிலுள்ள ரெனோ- நிசான் அலுவலகத்தில்தான் பணியாற்றுகிறார். 69வயதாகும் இவருக்கு, கடந்த ஆண்டு ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்தின் மேன் ஆஃப் தி இயர் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்திய சப்ளையர்கள் மத்தியில் புதிய கோணத்தில் சிந்திக்க வைத்த மனிதர் என்று இவரை புகழ்கின்றனர்.

சென்னைக்கு பெருமை

சென்னைக்கு பெருமை

ரெனோ க்விட் கார் சென்னையில் உருவாக்கப்பட்ட கார் என்பதுடன், சென்னை அருகேயுள்ள ஒரகடத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோன்று, சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் முதல்முறையாக பிரேசில் நாட்டிற்கு ரெனோ க்விட் கார் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

ரெனோ க்விட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ரெனோ க்விட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Story Behind Renault Kwid.
Story first published: Monday, February 22, 2016, 10:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark