தற்போது சேவையில் உள்ள உலகின் அபாயகரமான விமானங்கள்!

தொழில்நுட்ப வளர்ச்சியால் விமான பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும், இனிமையாகவும் மாறிவருகின்றன. அதேவேளையில், பிற போக்குவரத்து சாதனங்களை காட்டிலும் விமான பயணங்கள் ஆபத்துக்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது.

அதிலும், சில குறிப்பிட்ட விமானங்கள் மிக அபாயகரமானதாக அதன் பயண வரலாறிலிருந்து தெரிய வருகிறது. அதுபோன்று, தற்போது சேவையில் இருக்கும் அபாயகரமானதாக கருதப்படும் சில விமானங்களை பற்றியத் தகவல்களை பார்க்கலாம்.


உலகின் அபாயகரமான விமானங்கள்

மிக மோசமான விபத்துக்களில் சிக்கிய வரலாறு கொண்ட விமானங்களை கண்டறிவதற்காக ஏர்லினரேட்டிங்.காம் மற்றும் ஏவியேஷன்சேஃப்டி.நெட் தளங்கள் நடத்தி ஆராய்ச்சிகளின் முடிவின் அடிப்படையில் விமானங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

10. டுபலெவ் டியூ-154

10. டுபலெவ் டியூ-154

ரஷ்ய தயாரிப்பான இந்த விமானம் கடந்த 1968ல் உற்த்தி துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை உற்பத்தியில் இந்த விமானம் அதிவேக விமானங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இது மணிக்கு 850 கிமீ வேகம் வரை செல்லும். மொத்தம் 1,026 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது போயிங் 727 விமானத்துக்கு போட்டியாளராக விளங்குகிறது. இதுவரை 39 மோசமான விபத்துக்களில் இந்த விமானம் சிக்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2006முதல் 2009ம் ஆண்டு வரை நடந்த விபத்துக்களில் 170 பேர் பலியானதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த விமானத்தை பயன்படுத்தும் பல நாடுகள் இதனை சரக்கு விமானங்களாக மாற்றிவிட்டன.

Picture credit: Alexander Mishin via Wiki Commons

9.அன்டநோவ்- 32

9.அன்டநோவ்- 32

1976ல் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் மோசமான வானிலைகளிலும் சிறப்பாக செயல்படக்கூடியத. அதிசக்திவாய்ந்த எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானத்தில் 50 பேர் பயணிக்க முடியும். உலகின் பல நாடுகள் இதனை ராணுவ பயன்பாட்டிற்காக விரும்பி வாங்கின. இந்த விமானமும் ஏராளமான விபத்துக்களில் சிக்கியிருக்கிறது. 2008ல் மால்டோவாவில் தரையிறங்கும்போது தீப்பிடித்தில் பலர் கருகி பலியாகினர்.

Picture credit: Paul Spijkers via Wiki Commons

8. அன்டநோவ் 28

8. அன்டநோவ் 28

குறைந்த தூர பயன்பாட்டு வசதி கொண்ட இந்த விமானம் 1986ல் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 8 விபத்துக்களை சந்தித்ததுடன் பலரின் உயிரையும் பலிவாங்கியுள்ளது.

Picture credit: Dmitriy Pichugin via Wiki Commons

7.போயிங் 737

7.போயிங் 737

கடந்த 1968ல் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த போயிங் விமானத்தில் 215 பேர் பயணிக்க முடியும். மணிக்கு 800 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. 4,000 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்லும். கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த விபத்தில் 127 பேர் பலியாகினர். பாதுகாப்பு குறைவான விமானங்கள் பட்டியலில் இந்த விமானமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: Outanxio via Wiki Commons

6.டிசி9/எம்டி-80

6.டிசி9/எம்டி-80

1965ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த குறைந்த தூர பயன்பாட்டு விமானம் மணிக்கு 900 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. 1980ம் ஆண்டில் இந்த விமானத்தின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகமானது. இதில் 170 பயணிகள் செல்ல முடியும் என்பதோடு ரேஞ்சும் அதிகரிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு நைஜீரியாவில் நடந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணித்த 153 பேர் பயணித்தனர். இதுபோன்று, பல விபத்துக்களில் சிக்கிய வரலாறு கொண்டது.

Picture credit: Gary Watt via Wiki Commons

5. சிஏசிஏ சி-212

5. சிஏசிஏ சி-212

1974ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்பெயின் நாட்டு தயாரிப்பும் பல மோசமான விபத்துக்களில் சிக்கியுள்ளது. 26 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த விமானம் ராணுவ பயன்பாட்டிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இதுவரை மொத்தம் 45 மோசமான விபத்துக்களில் சிக்கி ஏராளமானோரை பலிவாங்கியுள்ளது.

4.அன்டநோவ்- 12

4.அன்டநோவ்- 12

1959ம் ஆண்டு முதல் சேவையில் உள்ளது. 85 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த விமானம் 3,600 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது. ஏராளமான விபத்துக்களில் சிக்கி பலரை பலிவாங்கியிருக்கும் இந்த விமானமும் ராணுவ பயன்பாட்டிலிருந்து சரக்கு போக்குவரத்துக்காக மாற்றப்பட்டது.

Picture credit: Patrick Mutzenberg via Wiki Commons

3.இலுஷின் 76

3.இலுஷின் 76

1974ல் சேவைக்கு இந்த விமானம் 46 முதல் 60 டன் எடையை சுமந்து பறக்கும் திறன் கொண்டது. ராணும் மற்றும் பொது போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல மோசமான விபத்துக்களில் சிக்கியிருக்கும் இந்த விமானம் கடந்த 2003ல் நடந்த விபத்தில் மிக மோசமான வரலாறை பதிவு செய்தது. அந்த விபத்தில் 275 பேர் பலியாகினர்.

Picture credit: SRA STEVE THUROW via Wiki Commons

2.டிஹவிலேண்ட் ட்வின் ஓட்டர்

2.டிஹவிலேண்ட் ட்வின் ஓட்டர்

1966ல் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானத்தில் 19 பேர் பயணிக்கலாம். ராணுவ பயன்பாட்டில் இருக்கும் இந்த விமானம் இதுவரை 19 மோசமான விபத்துக்களில் சிக்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Picture credit: User:402SQC-1 via Wiki Commons

1.எல்இடி எல்-410

1.எல்இடி எல்-410

உலகின் மிக அபாயகரமான விமானங்களில் ஒன்றாக இது விளங்குகிரது. 19 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த விமானம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விபத்துக்களில் சிக்கியுள்ளது. ஏராளமானோரை பலிவாகியிருக்கும் இந்த மாடல் ஸ்கைடைவிங் விளையாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Picture credit: Karelj via Wiki Commons


Most Read Articles
English summary
Here are given details of most dangerous civilian aircrafts in use today. The data is based on a research done by Airlinerating.com and Aviationsafety.net and assesses which aircraft had the most fatal crashes over the last decade.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X