உலகின் விந்தையான சாலை விதிகள்: சுவாரஸ்யமான தொகுப்பு

By Saravana

சாலைகளில் ஒழுங்கை கடைபிடிக்கும் விதத்தில் சாலை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சில நாடுகளில் விந்தையான சில சாலை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன.

அதில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த விந்தையான விதிகள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.


யுரேகா, அமெரிக்கா

யுரேகா, அமெரிக்கா

அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணம் மற்றும் நகரங்களில் வெவ்வேறு விதமான விந்தையான சில சாலை விதிகள் அமலில் உள்ளன. அதுபோன்று, யுரேகா பகுதியில் சாலையில் படுப்பதும், உறங்குவதும் சட்டவிரோதமானது.

மாசாசூட்ஸ், அமெரிக்கா

மாசாசூட்ஸ், அமெரிக்கா

அமெரிக்காவின் மாசாசூட்ஸில் மனித குரங்கை காரின் பின் இருக்கையில் வைத்து அழைத்து செல்வது சட்டவிரோதமானது.

சுவீடன்

சுவீடன்

சுவீடன் நாட்டில் வாகனங்களில் ஹெட்லைட்டுகளை எப்போதுமே ஒளிர விட்டு செல்ல வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது.

அலாஸ்கா, அமெரிக்கா

அலாஸ்கா, அமெரிக்கா

காரின் கூரையின் மீது நாயை கட்டி அழைத்து செல்வது அலாஸ்காவில் குற்றமாக கருதப்படுகிறது.

டப்ளின், அமெரிக்கா

டப்ளின், அமெரிக்கா

விளையாட்டு மைதானங்களில் வாகனங்களை ஓட்டுவது டப்ளினில் சட்டவிரோதமானது.

டென்மார்க்

டென்மார்க்

காரை கிளப்புவதற்கு முன் ஒவ்வொரு முறையும் காரின் அடிப்பகுதியில் ஏதேனும் இருக்கிறதா என்று சோதித்து பிறகே கிளப்ப வேண்டும் என்பது டென்மார்க்கில் இருக்கும் சாலை விதிகளுள் ஒன்று.

கிளென்டேல், அமெரிக்கா

கிளென்டேல், அமெரிக்கா

அமெரிக்காவில் 65 மைல் வேகத்திற்கு மேல் காரிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானில் ஓட்டுனர் மட்டுமின்றி, பயணிகளும் மது அருந்துவது சட்ட விரோதமானது.

ஆட்டோபான், ஜெர்மனி

ஆட்டோபான், ஜெர்மனி

ஜெர்மனியிலுள்ள ஆட்டோபான் நெடுஞ்சாலையில் காரில் எரிபொருள் இல்லாமல் நின்று போனால், அது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படுகிறது. எனவே, ஆட்டோபான் சாலையில் செல்வதற்கு முன்பாக எரிபொருள் முழுமையாக உள்ளதாக என்று சோதித்த பிறகே செல்ல வேண்டும்.

ஓஹியோ, அமெரிக்கா

ஓஹியோ, அமெரிக்கா

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வாடகைக் காரின் கூரை மீது அமர்ந்து செல்வது சட்டவிரோதமானது.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவில் அழுக்கான அல்லது சுத்தமில்லாத காரை பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

விந்தை

விந்தை

இதேபோன்று, பல நாடுகளில் விந்தையான சாலை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. உங்களுக்கு இதுபோன்று தெரிந்த விந்தையான சாலை விதிகளை கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

Most Read Articles
Story first published: Monday, May 5, 2014, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X