இதெல்லாம் உங்க உசுர எடுக்குற எமனா கூட இருக்கலாம்! இப்பவே கழட்டித் தூர வீசுங்க...

கார்களில் அழகு என நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் நமக்கே ஆபத்தாக மாறிவிடும். இப்படியாக நாம் கார்களில் எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் அது நமக்கே ஆபத்தாக மாறி விடும். எதை எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும் உள்ளிட்டவற்றைத் தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம்.

இந்தியர்கள் பலர் காரை வெறும் வாகனமாக மட்டும் பார்ப்பது இல்லை அதை ஒரு உணர்வாக பார்க்கின்றனர். பலர் காரை தனது நண்பன், அல்லது தன் உடன் பிறந்தவர்கள் போல பாசத்தைக் காட்டுகின்றனர். இதன் வெளிப்பாடாகக் காரை அழகுபடுத்துவதற்காகவும், சில நேரங்களில் வசதிக்காகவும் காரில் சில ஆக்சரீஸ்களை வைத்திருப்பார்கள். பெரும்பாலான மக்கள் அவர்கள் கடவுள் நம்பிக்கையின் காரணமாக காரின் டேஷ்போர்டில் அவர்களுக்குப் பிடித்த கடவுளின் படங்கள் அல்லது சிறிய சிலைகளைக் கூட வைத்திருப்பார்கள்.

இதெல்லாம் உங்க உசுர எடுக்குற எமனா கூட இருக்கலாம்! இப்பவே கழட்டித் தூர வீசுங்க...

இது எல்லாம் செண்டிமெண்டான விஷயம், ஆனால் நாம் கார் ஓட்டும் போது கவனம் ரோட்டில் இருக்க வேண்டும். அப்படியாக நமது கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் ஏதாவது ஒரு ஆக்ஸசரீஸ் உங்கள் காரின் இருந்தால் அது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விட வாய்ப்பு இருக்கிறது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது பெரும் விபரீதமாக மாறிவிடும். இப்படியாகக் கட்டாயம் நாம் கார்களில் தவிர்க்க வேண்டிய சில ஆக்ஸசரீஸ்களை பற்றி இங்கே விரிவாகக் காணலாம்

கார் புல் பார்

பெரிய பெரிய காரின் முன்பக்கம் புல் பார் வைத்திருப்பார்கள். இது கார் ஏதாவது சிறிய பொருளின் மீது உரசினால் காரில் ஸ்கிராட்ச் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகப் பொருத்துவார்கள். இது பார்க்கவும் காருக்கு ஒரு கம்பீரமான ஒரு லுக்கை கொடுக்கும். ஆனால் இது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இன்றைய கார்களில் ஏர்பேக் இருக்கிறது.

இந்த ஏர்பேக்கை செயல்படுத்த வைப்பதற்கான சென்சார் காரின் முகப்பு பகுதியில் தான் இருக்கும். இந்த புல் பார் போட்ட கார் விபத்தில் சிக்கினால் கார் விபத்தில் சிக்கியது இந்த புல் பார் காரணமாக சென்சாருக்கு தெரியாமல் போய்விடும். இதனால் காரின் ஏர்பேக் சரியான நேரத்தில் இயங்காது.இதனால் விபத்தில் காருக்கும் இருப்பவர்களுக்குப் பெரிய அளவில் காயம்/சேதம் ஏன் உயிர் போக கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த புல் பார்களை பயன்படுத்த வேண்டாம்.

டேஷ்போர்டு பொம்மைகள்

கார்களில் டேஷ் போர்டில் சிலர் பொம்மைகள் அல்லது அவர்களுக்கு பிடித்தமான கடவுள் உள்ளிட்ட ஏதேனும் சிலைகளை வைத்திருப்பர். இது காருக்குள் ஒரு அழகைக் கூட்டும் அவர்களுக்கு ஒரு விதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதால் அதை வைத்திருப்பர். இதுவும் ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

இந்த சின்ன பொம்மை எப்படி உயிருக்கு ஆபத்தாக அமையும் என நினைக்கலாம். உதாரணமாக இப்படியாகப் பொம்மைகள் பல மெட்டல் பொம்மைகளாக இருக்கிறது. இப்படியான பொம்மையுடன் ஒரு கார் விபத்தில் சிக்கினால் இந்த பொம்மை காரில் முன்பக்க சீட்டில் இருப்பவர்களுக்கு பெரும் காயம் அல்லது அவர்களது உயிரை போக்கக் கூடிய அளவிற்கு அடியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால் இவ்வாறான பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது.

ஹேங்கிங் டாலர்

சிலர் காரின் ரியர் வியூ கண்ணாடியில் ஏதாவது ஒரு விஷயத்தை தொங்கப்போட்டு வைத்திருப்பர். அவர்களுக்குப் பிடித்த டாலர், அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை அழகான செயின் அல்லது கயிற்றில் தொங்கவிட்டு வைத்திருப்பர். இதுவும் ஆபத்தானது தான். இது கார் வேகமாகப் பயணிக்கும் போது அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். இது ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்ப வாய்ப்புள்ளது. இதனால் கார் விபத்தில் சிக்க நேரிடும்.

இப்படியாக கார் விபத்தில் சிக்கும் போது தொங்கும் டாலர் ஏதாவது மெட்டலால் ஆனதாக இருந்தால் அது விபத்து நேரத்தில் டிரைவர் சீட்டில் இருப்பவருக்கோ அல்லது பக்கத்துச் சீட்டில் இருப்பவருக்கோ தலையில் பெரும் காயத்தை ஏற்படுத்தும். இதுவும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். ஆக இது போன்ற விஷயங்கள் ஏதாவது உங்கள் காரில் இருந்தால் இப்பொழுதே அகற்றிவிடுங்கள். இது எல்லாம் ஆபத்தை ஏற்படுத்தும் கவனமாக இருக்கவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
These accessories in your car may dangerous to your life
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X