ஹூண்டாய் க்ரெட்டா காரை ஈஸியாக ஆட்டையை போட்டுச் செல்லும் திருடர்கள்!

Written By:

பல லட்ச ரூபாய் முதலீட்டில் வாங்கும் கார்களை பராமரிப்பதைவிட, அதனை பத்திரமாக பாதுகாப்பது இப்போது பெரும் தலைவலியாக உள்ளது. திருடர்கள் கை வைக்க முடியாத அளவுக்கு உயர் பாதுகாப்புடன் வரும் கார்கள் கூட இப்போது திருடு போகிறது. அந்தளவுக்கு தொழில்நுட்பத்தில் கார் திருடர்களும் அப்டேட்டாகி வருகின்றனர்.

இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரை திருடர்கள் எளிதாக திருடி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி கார் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

அதாவது, வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா காரை மிக துணிச்சலாக அவர்கள் அரை மணிநேரத்திற்குள் திருடிச் செல்கின்றனர். இவை அனைத்தும் சிசிடிவி வீடியோ பதிவு மூலமாக தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

முதலில் வரும் திருடன் ஒருவன் காரின் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் காரின் அடையாள எண்ணை செல்போனில் படம்பிடித்து செல்கிறான். அதனை வைத்து காரின் இம்மொபைலைசருக்கான குறியீட்டு எண்ணை கம்ப்யூட்டர் மூலமாக தெரிந்து கொண்டு, அதனை டூப்ளிகேட் சாவியில் பதிவு செய்து, அந்த காரை சில நிமிடங்களில் திருடிச் செல்கின்றனர்.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

இவையெல்லாம் அடுத்த 15 நிமிடங்களில் நடந்துவிடுகிறது. இதுபோன்று டூப்ளிகேட் சாவி மூலமாக திறக்கும்போது, குறியீட்டு எண் ஒத்துப்போவதால் கார் கதவுகள் திறப்பதுடன், எஞ்சினும் ஸ்டார்ட் ஆகிறது. காரில் இருக்கும் அபாய ஒலி சாதனமும் இயங்காது.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

ஒவ்வொரு கார் சாவிக்கும் ஒரு ரகசிய குறியீட்டு எண் கொடுக்கப்பட்டு இருக்கும். இதனை டீலர்களில் உள்ள ஒரு சிலரால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அவை எல்லாம் மிகவும் ரிஸ்க் பிடித்த வேலை என்பதால், இப்போது இதுபோன்று காரின் கதவில் இருக்கும் வின் நம்பரை வைத்து கம்ப்யூட்டர் மூலமாக ரகசிய எண்ணை கண்டுபிடித்திருப்பது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு ஹூண்டாய் க்ரெட்டா காரும் திருடி வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேமும் எமக்கு எழுகிறது. ஏனெனில், ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு இப்போது மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருப்பதால், அந்த கும்பல் ஹூண்டாய் க்ரெட்டா கார்களை குறிவைத்து திருடியிருக்க வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

எனவே, இம்மொபைலைசர் உள்பட அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரக இருந்தாலும் கூட, பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்தி வைப்பது அவசியம். தெருவோரத்தில் நிறுத்தி வைப்பர்கள் தெருவிளக்கு உள்ள இடத்தில் நிறுத்தி வைத்தால் ஓரளவு இந்த பிரச்னையிலிருந்து விடுபட வாய்ப்புண்டு.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

மேலும், காரை கவர் போட்டு மூடிவைப்பதும், திருடர்கள் எளிதாக காரை நெருங்க முடியாத நிலையை உருவாக்கும். மேலும், கார் நிறுத்தியிருக்கும் இடத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தி வைப்பதும் விசாரணைக்கு உதவலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

இதுதவிர, கார் திருடு போகும்போது, அதனை கண்டுபிடிப்பதற்கான ஜிபிஎஸ் டிராக்கர் சாதனத்தையும் வாங்கி பொருத்துவதும் பலன் தரும். போலீசார் கார் இருக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொண்டு, காரை மடக்க முடியும். இப்போது குறைந்த விலையில் கார் ஜிபிஎஸ் டிராக்கர் சாதனங்கள் கிடைக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா கார் நூதன திருட்டு!

குறிப்பாக, விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பவர்கள் அதற்கான கூடுதல் பாதுகாப்பு வசதிகளை செய்து வைப்பது இவ்வேளையில் அவசியம். ஏனெனில், கார் திருடுபோகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாக இருக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A Hyundai Creta with state of the art safety and security features did not stop these professional thieves from stealing the SUV.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more