புதிய கார் டெலிவிரி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கடந்த மாதம் டெல்லியில் ரெனோ கார் நிறுவனத்தின் டீலர்ஷிப்பில், ரீ- பெயிண்ட் செய்யப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி டெலிவிரி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இரவு நேரத்தில் டெலிவிரி எடுத்துச் சென்ற அந்த வாடிக்கையாளர் மறுநாள் காலையில் ஆசையாய் காரை சுற்றிப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

வலதுபக்கமிருக்கும் பின்புற கதவின் வண்ணமும், காரின் வண்ணத்திலிருந்து வித்தியாசமாக தெரிந்தது. அது ரீ- பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதும் அவரை அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். இதையடுத்து, காரை டீலர்ஷிப்புக்கு எடுத்துச் சென்று கேட்டபோது இதுவரை சரியான பதில் தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்முறையாக கார் வாங்க செல்வோரிடம் அதிக மோசடிகள் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, புதிய கார் வாங்கும்போது சில தேவையற்ற பிரச்னைகளிலிருந்து தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், டீலர்ஷிப் யார்டில் காரை தேர்வு செய்யும்போதும், டெலிவிரி எடுக்கும்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


முக்கிய விஷயங்கள்

முக்கிய விஷயங்கள்

காரை டெலிவிரி எடுக்கும் சமயத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கார் தேர்வு

கார் தேர்வு

டீலர்ஷிப் யார்டில் காரை தேர்வு செய்யும்போது அதன் பெயிண்ட் ஒரேமாதிரி இருக்கிறதா என்பதை உற்றுநோக்கவும். சிராய்ப்புகள், டென்ட் எதுவும் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். கூடவே, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை அழைத்துச் செல்வது நல்லது. எந்த நாளில், நேரத்தில் டெலிவிரி எடுக்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடுவதும் அவசியம். காரின் சேஸீ நம்பரை மொபைல்போனில் படம் பிடித்து வைத்துக் கொள்வது அவசியம். சிலவேளை யார்டு அதிக தூரத்தில் இருந்தால், டெலிவிரி எடுக்கும்போது காரை முழுவதுமாக சோதித்து விட்டு பணம் செலுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ளவும்.

ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

காரை தேர்வு செய்த பின் அல்லது காரை பார்த்தபின்பு டெலிவிரி கொடுக்க தயார் நிலையில் ஷோரூமுக்கு வந்துவிடும். காரை டெலிவிரி எடுப்பதற்கு முன், நீங்கள் முன்பதிவு செய்த வேரியண்ட்தானா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளவும். பின்னர். அந்தகாரில் இருக்கும் ஆக்சஸெரீஸ்கள் சரியாக இருக்கிறதா, கூடுதல் ஆக்சஸெரீஸ்களும் சரியாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினை ஆன் செய்து பார்க்கவும். கூடுதலாக அல்லது வித்தியாசமாக ஏதெனும் சப்தம் வருகிறதா என்பதை கவனிக்கவும். எஞ்சின் ஆயில் மற்றும் கூலண்ட் அளவுகள் சரியாக இருப்பதையும் கவனிக்கவும். ஓடோமீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பார்த்துக் கொண்டு அதில், எத்தனை கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்கிறது என்பதையும் கவனித்துக் கொள்ளவும். அதிக தூரம் ஓடியிருந்தால், டெஸ்ட் டிரைவுக்காக பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு.

இதர சாதனங்கள்

இதர சாதனங்கள்

ஏசி, பவர் விண்டோஸ், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள், வைப்பர்கள், போன்றவை நன்றாக வேலை செய்கிறதா என்பதை இயக்கிப் பார்க்கவும். ஹெட்லைட், இன்டிகேட்டர்கள் எல்லாம் சரியாக இயங்குகிறதா என்பதையும் சோதித்துவிடுங்கள். சைல்டு லாக், ஹெட்ரெஸ்ட் சரியாக இயங்குகிறதா என்பதையும் சோதித்துக் கொள்ளவும்.

டயர் தேய்மானம்

டயர் தேய்மானம்

சில வேளைகளில் டெஸ்ட் டிரைவுக்கு பயன்படுத்தியிருந்தால், டயர்களில் தேய்மானம் அதிகமிருக்கும். எனவே, பட்டன்கள் தேய்மானம் இல்லாமல் புதிதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

இன்டிரியர் சுத்தம்

இன்டிரியர் சுத்தம்

இன்டிரியர் சுத்தமாக இருக்கிறதா, இருக்கைகளில் அழுக்கு இல்லாமல் தூய்மையாக உள்ளனவா என்பதை பார்த்துக் கொள்ளவும். மேலும், ஏற்கனவே பயன்படுத்திய காராக இருந்தால், நிச்சயம் அது இன்டிரியர் சுத்தத்தை வைத்து நீங்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

 சாதனங்களை இயக்கும் முறை

சாதனங்களை இயக்கும் முறை

இன்ஃபோடெயின்ட் சிஸ்டம்,ஏசி, சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகளை எவ்வாறு இயக்குவது என்பதை விற்பனை பிரதிநிதியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். அவரின் விசிட்டிங் கார்டையும் வாங்கி வைத்துக் கொள்வதோடு, சர்வீஸ் பிரிவில் உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும் மெக்கானிக் அல்லது சர்வீஸ் எஞ்சினியரின் மொபைல் எண்ணையும் வாங்கி பதிவு செய்துகொள்ளுங்கள்.

டூல் கிட்

டூல் கிட்

டூல் கிட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து ஸ்பேனர்கள் மற்றும் உபகரணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். ஸ்டெப்னி மற்றும் ஜாக், முதலுதவிப் பெட்டி ஆகியவையும் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும்.

வின் நம்பர்

வின் நம்பர்

யார்டில் தேர்வு செய்த அல்லது நீங்கள் பார்த்து ஒப்புதல் தெரிவித்த கார்தான் டெலிவிரி கொடுக்கப்படுகிறதா என்பதை சேஸீ அல்லது எஞ்சின் நம்பரை வைத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஓடிய காரா?

ஓடிய காரா?

ஓடோமீட்டரில் 50 கிமீ தூரம் வரை ஓடியிருந்தால் பரவாயில்லை.

 ஆவணங்கள்

ஆவணங்கள்

காரின் இன்வாய்ஸ், வாரண்டி, இன்ஸ்யூரன்ஸ், எமிசன் சான்று போன்றவற்றை வாங்கி, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சேஸீ, எஞ்சின் நம்பர் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். டீலரில் ஃபார்ம் - 22 சான்றை வாங்கிப் பார்த்து காரின் தயாரிப்பு தேதிக்கும், டெலிரிவிரி கொடுக்கப்படும் தேதிக்கும் உள்ள கால அளவை பார்த்துக் கொள்வதும் அவசியம். ஏனெனில், சில டீலர்களில் ஓல்டு ஸ்டாக் காரை கொடுப்பதாகவும் புகார் இருக்கிறது.

பகலில் டெலிவிரி

பகலில் டெலிவிரி

இரவு நேரத்தில் டெலிவிரி எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். பகல் நேரத்திலேயே டெலிவிரி எடுப்பது சில தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

உஷார்

உஷார்

கார் உங்களது பெயரில் பதிவு செய்வதற்கு முன்பாக புகார் இருந்தால் டீலரில் தெரிவித்துவிடவும். கார் பதிவு செய்யப்பட்ட பின், காரில் பெரிய அளவில் பிரச்னை இருந்தால் எதுவும் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளளவும். கூடுதல் தகவல்கள் இருந்தால் கருத்துப் பெட்டியில் பகிர்ந்துகொள்ளலாம்.

Most Read Articles
English summary
It’s usually a very happy time when you take delivery of that shiny new addition to your garage. But nothing should be taken for granted, especially considering the number of zeroes involved in new car purchase transactions these days. That’s why we got our heads together and put down a checklist for you for when the time comes to pick up your new car. There are a few things you can do yourself to safeguard against potential hiccups for what should be a smooth and pleasant process. After all, you’ve earned it! Let’s take a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X