இதுதான் இந்தியாவின் பவர்ஃபுல் ஹூண்டாய் க்ரெட்டா கார்!

Written By:

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் சக்கை போட்டு வருகிறது ஹூண்டாய் க்ரெட்டா. கடந்த மாதம் மற்றுமொரு படி மேலே போய் 13,000 கார்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து, பட்ஜெட் வகை கார்களுக்கே சவால் விட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா மீதான ஈர்ப்புக்கு காரணம், அதன் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய டிசைனும், வசதிகளும்தான்.

சொகுசு காருக்கு இணையான தோற்றத்தில் வசீகரித்து வரும் ஹூண்டாய் க்ரெட்டா காரை கேரளாவை சேர்ந்த கார் மாடிபிகேஷன் நிறுவனம் ஒன்று, எஞ்சினில் மாறுதல்களை செய்து கூடுதல் சக்தி கொண்டதாக காராக மாற்றியிருக்கிறது. இந்தியாவின் சக்திவாய்ந்த ஹூண்டாய் க்ரெட்டா கருதப்படும், அந்த காரின் படங்கள், விரிவானத் தகவல்கள் இதோ உங்களுக்காக...

இப்படித்தான் இருக்கணும்...

இப்படித்தான் இருக்கணும்...

ஹூண்டாய் க்ரெட்டா காரை வாடிக்கையாளர்கள் உச்சி முகர்ந்து போற்றி வரும் நிலையில், இந்த காரின் உரிமையாளர் இதுபோன்ற கார் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே கேரளாவை சேர்ந்த பீட்ஸ் ஆட்டோமேட்டிவ் என்ற நிறுவனத்தின் மூலமாக தனது காரில் மாறுதல்களை செய்துள்ளார்.

டிசைன் மாறுதல்கள்

டிசைன் மாறுதல்கள்

காரின் டிசைனில் அதிக மாறுதல்களை செய்யவில்லை. அதேநேரத்தில், க்ரில், பம்பர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கருப்பு வண்ணத்தை தீட்டி கறுஞ்சிறுத்தை போல மாற்றியிருக்கின்றனர். மேலும், ராலி ரேஸ் கார்களில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிலரி ஹெட்லைட்டுகள் முன்பக்கத்திற்கு செம கெத்தான தோற்றத்தை கொடுக்கிறது.

பாலிஷ்

பாலிஷ்

புதிய ரிம் மற்றும் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், காரின் அனைத்து பாகங்களையும் கருப்பு நிறத்திற்கு மாற்றியிருப்பதுடன், ஸ்மார்ட்வேக்ஸ் என்ற விசேஷ மெழுகு பூச்சு கொடுத்திருப்பதால், கார் பளபளப்பதுடன், அந்த கறுப்பு வண்ணத்திற்கு கூடுதல் பொலிவு சேர்த்துள்ளது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

ஹூண்டாய் க்ரெட்டா கார் 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதில், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில்தான் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கூடுதல் பவர்

கூடுதல் பவர்

126 பிஎச்பி பவரை வழங்க வல்ல ஹூண்டாய் க்ரெட்டா காரின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினின் சாஃப்ட்வேரில் மாறுதல்களை செய்து 150 பிஎச்பி பவரை வழங்கும் வகையில், எஞ்சின் ரீமேப் செய்யப்பட்டிருக்கிறது.

கட்டணம்

கட்டணம்

தற்போது ஹூண்டாய் க்ரெட்டா காரின் 1.6 லிட்டர் டீசல் மாடலுக்கு மட்டுமே பீட்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் எஞ்சின் ரீமேப்பிங் வசதியை வழங்குகிறது. இதற்கு ரூ.19,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வாரண்டி

வாரண்டி

இதுபோன்று எஞ்சின் ரீமேப் செய்யும்போது வாரண்டி கிடைக்காது என்பதையும் மனதில் வைக்க வேண்டும். எஞ்சினுக்கு மட்டுமல்ல, டர்போசார்ஜர், சூப்பர்சார்ஜர் மற்றும் க்ளட்ச் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றிற்கும் வாரண்டி கிடைக்காது.

பராமரிப்பு

பராமரிப்பு

வாரண்டி கிடைக்காது என்பதுடன், இதுபோன்று மாறுதல்கள் செய்யும்போது காருக்கு கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். இவற்றை மனதில் வைத்து காரில் மாடிஃபிகேஷன் செய்வது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பமாகவே கருதப்படும். அதனால், ஏற்படும் பாதிப்புகளுக்கு கார் நிறுவனங்கள் பொறுப்பை ஏற்காது.

 
English summary
This Pete's Tuned Creta Is Something Hyundai Should Have Imagined.
Story first published: Wednesday, August 10, 2016, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark