காரில் சென்ற கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் கைது.. காரணம் இது தான்..!!

Written By:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் போதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து காணலாம்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ். கிரிக்கெட்டில் சச்சின் போன்று கோல்ஃப் விளையாட்டில் ஜாம்பவனாக திகழ்பவர்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

40 வயதாகும் டைகர் உட்ஸ் கோல்ஃப் விளையாட்டில் செய்த சாதனைகள் ஏராளம். தனது 20 வயது முதலாகவே கோல்ஃப் விளையாட்டில் தொழில்முறையாக ஈடுபட்டு வருகிறார் உட்ஸ்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பல ஆண்டுகளாக தக்கவைத்து வந்த டைகர் உட்ஸ்-க்கு 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு இறங்குமும் தான்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

கோல்ஃப் விளையாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் பல சர்வதேச பட்டங்களை குவித்த டைகர் உட்ஸ் கடைசியாக 2008ல் தான் சர்வதேச பட்டம் பெற்றார். அதன் பிறகு அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும், உடல்நலக் கோளாறுகளாலும் அவரால் களத்தில் திறம்பட செயல்படமுடியாமல் போனது.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

டைகர் உட்ஸ் சில மாதங்களுக்கு முன்னர் புளோரிடாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார், இதில் அவரது முகத்தில் சிராய்ப்புகள், வெட்டுக்காயங்களும் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களாகவே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

இந்நிலையில் புளோரிடா மாக‌ணத்தில் உள்ள ஜூபிடர் நகரில் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார் டைகர் உட்ஸ்.

அப்போது அந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கினர்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

சோதனையில் உட்ஸ் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்ட டைகர் உட்ஸ், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக எழுத்து மூலம் அறிவித்ததனால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

விடுதலையான பிறகு, தான் மதுபோதையில் வாகனத்தை செலுத்தவில்லையென்றும், தனக்கு நோய் காரணிக்காக கொடுக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொண்ட போது என்னை அறியாத மாற்றம் ஏற்பட்டதாகவும் டைகர் உட்ஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

கோல்ஃப் உலகையே கோலோய்ச்சி வந்த டைகர் உட்ஸ் தற்போது வாகன விபத்தின் காரணமாக எடுத்து வந்த சிகிச்சையினால் அவப்பெயரை சம்பாதித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

காரில் சென்ற போது அவர் மாத்திரையினால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்தாரா அல்லது மது போதையில் இருந்தாரா என்ற விவரம் விசாரணையில் தான் தெரியவரும்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்: கைதும்.. பின்னணியும்..!!

இந்த சம்பவம் மது போதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. விஐபி என்றாலும் சாலையில் சென்றால் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது நமது கடமையாகும் என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்.

English summary
Read in Tamil about golf player tiger woods arrested for drund driving charges
Story first published: Tuesday, May 30, 2017, 15:14 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark