முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் குறித்த ருசிகர தகவல்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. மேலும், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்தும் காரசாரமான விவாதங்களால் சமூக வலைத்தளங்கள் அனல் பறக்கிறது. இந்த நிலையில், சொத்து மதிப்பில் பல வேட்பாளர்கள் வைத்திருக்கும் கார்களின் மதிப்பும் கவனிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

சில ஸ்டார் வேட்பாளர்கள் சொந்த கார் இல்லை என்று குறிப்பிட்டிருப்பதும் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. இந்த நிலையில், பிரபலமான சில வேட்பாளர்கள் எவ்வளவு மதிப்புக்கு கார்களை வைத்திருக்கின்றனர் என்பது குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி தொகுதியில் களம் காணும் முதல்வர் பழனிச்சாமி, கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.4.66 கோடி அசையா சொத்துக்களும், ரூ.3.14 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது அவர் ரூ.2.10 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.4.68 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

சொந்த கார் இல்லை?

இந்த முறை மகன் மற்றும் மருமகள் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பை அவர் சேர்க்கவில்லை இதனால், அவரது சொத்து மதிப்பு சற்று குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, கடந்த தேர்தலைவிட தற்போது அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது. மேலும், விவசாயி என்று கூறி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வேளாண் நிலம் எதுவும் குறப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொந்தமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பயன்படுத்தி வருகிறார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

போடிநாயக்கனூர் தொகுதியில் களம் காணும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.55 லட்சமாக இருந்த அசையும் சொத்துக்களின் மதிப்பு தற்போது ரூ.5.19 கோடியாக அதிகரித்துள்ளது. அசையா சொத்தும் அதிகரித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ரூ.98 லட்சமாக இருந்த அசையா சொத்து மதிப்பு இப்போது ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளது. பூர்வீக சொத்து, நிலங்கள் இல்லை என்றும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்புடைய சொத்துக்கள் உள்ளதாகவும் அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

கார்கள் மதிப்பு

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் இரண்டு டொயோட்டா இன்னோவா கார்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒன்று ரூ.17.85 லட்சம் மதிப்புடையதாகவும், மற்றொரு இன்னோவா கார் ரூ.25.44 லட்சம் மதிப்புடையதாக தெரிவித்துள்ளார். ரூ.5.54 லட்சம் மதிப்புடைய மஹிந்திரா ஜெனியோ பிக்கப் டிரக் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மனைவி பெரில் இரண்டு டெம்போ டிராவலர் வேன்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு டெம்போ டிராவலர் ரூ.25.30 லட்சம் மதிப்புடையதாகவும், மற்றொன்று ரூ.18.04 லட்சம் மதிப்புடையதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.43.34 லட்சத்திற்கு வாகனங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக.,வின் முதல்வர் வேட்பாளரான முன்னிறுத்தப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410 மதிப்பிலான அசையா சொத்துக்களும், தன்னுடைய மனைவி துர்கா பெயரில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 283 மதிப்புடைய அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

கார் இல்லையா?

மு.க.ஸ்டாலினிடம் அசையும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 19 லட்சத்து 6 ஆயிரத்து 202 ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 68 லட்சத்து 99 ஆயிரத்து 137 என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம், ஸ்டாலின் தன்னிடம் சொந்த கார் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பல கோடி மதிப்புடைய ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவியை அவர் பயன்படுத்தி வரும் நிலையில், கார் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுவில் கொடுத்துள்ள பிரமாணப்பத்திரத்தில் ரூ.21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 மதிப்புடைய அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தனது மனைவி கிருத்திகா பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 730 மதிப்புடைய தங்கம் உள்பட ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புடைய சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

அப்பாடா, இருக்கு?

உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் ரூ.1 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 736 மதிப்புடைய ரேஞ்ச்ரோவர் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது தந்தையைவிட மூன்று மடங்கு கூடுதல் சொத்து மதிப்பை உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதும் சுவாரஸ்யமான விஷயம்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

கமல்ஹாசன் சொத்து மதிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் அந்தஸ்தை பிடித்துள்ளார். அவர் தனது வேட்புமனுவில் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புடைய அசையா சொத்துக்களும், ரூ.45 கோடியே 9 லட்சத்து ஓராயிரத்து 476 மதிப்புடைய அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு ரூ.49 கோடி 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு வருவாய் ரூ.22 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் அதிக சொத்து மதிப்புடைய ஸ்டார் வேட்பாளர்களில் கமல்ஹாசனும் இடம்பிடித்துள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

கார் பிரியராச்சே...

கமல்ஹாசன் தன்னிடம் ரூ.98 லட்சத்து 73 ஆயிரத்து 444 மதிப்புடைய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார், லெக்சஸ் எல்எக்ஸ்570 சொகுசு கார்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோவை சிங்காநல்லூர் வேட்பாளராக போட்டியிடும் தொழிலதிபர் மகேந்திரன் ரூ.170 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

துரைமுருகன் கார் விபரம்

திமுக பொதுச் செயலாளரர் துரைமுருகன் காட்பாடியில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவிற்கான சொத்து பிரமாணப் பத்திரத்தில் அவரின் பெயரிலும், அவரது மனைவியின் பெயரிலும் மொத்தமாக ரூ.29.62 கோடி மதிப்புக்கு அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவில், தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் ரூ.7 கோடியே 85 லட்சத்து 95 ஆயிரத்து 215 மதிப்புடைய அசையும் சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 325 மதிப்புடைய அசையா சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்த சொத்து மதிப்பு ரூ.10 கோடியே 87 லட்சத்து 15 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

டிடிவி தினகரன் கார்கள் மதிப்பு

டிடிவி தினகரன் தனது வேட்புமனுவில் ரூ.7 லட்சம் மதிப்புடைய டாடா சஃபாரி (பழைய மாடல்) மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புடைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் தனது மனைவி பெயரில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

சீமான் சொத்து மதிப்பு

திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் களம் காண்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் ரூ.31.06 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி கயல்விழி பெயரில் ரூ.63.25 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

கார்கள் விபரம்

சீமான் தனது வேட்புமனுவில் தனக்கு சொந்தமாக ரூ.26 லட்சம் மதிப்புடைய காரும், மனைவி பெயரில் இரண்டு சொகுசு கார்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். சீமான் தனது சொந்த பயன்பாட்டிற்கு இசுஸு எம்யூ-7 எஸ்யூவி மாடலை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

தலைசுற்ற வைக்கும் ஹரிநாடார்

ஆபரணங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு மிரள வைத்து வரும் பனங்காட்டுப்படை நிறுவனரான ஹரி நாடார் ஆலங்குளத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவில், 11,200 கிராம் தங்க நகைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மதிப்பு ரூ.4 கோடியே 73 லட்சத்து 76 ஆயிரம். அசையும் சொத்து மதிப்பு மட்டும் ரூ.12.61 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் நிலம் இல்லை, தலைவரிடம் கார் இல்லை... தமிழக தேர்தலில் 'ஸ்டார்' வேட்பாளர்களின் கார்கள் விபரம் குறித்த ருசிகர தகவல்கள்!

ஹரியின் கார் கலெக்ஷன்

ஹரிநாடார் தனது வேட்புமனுவில் ரூ.45.61 லட்சம் மதிப்புடைய டொயோட்டா ஃபார்ச்சூனர், ரூ.29.34 லட்சம் மதிப்புடைய இன்னோவா க்ரிஸ்ட்டா கார், ரூ.15.36 லட்சம் மதிப்புடைய டெம்போ டிராவலர், ரூ.9.50 லட்சம் மதிப்புடைய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி, ரூ.4.50 லட்சம் மதிப்புடைய டாடா சஃபாரி, ரூ.7.50 லட்சம் மதிப்புடைய மஹிந்திரா பொலிரோ கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
we compiled some interesting things about familiar tn political party candidates and their car details. Read in Tamil.
Story first published: Wednesday, March 17, 2021, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X