Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அன்னைக்கு குஷ்பூவை மறந்துட்டீங்களே... இன்னைக்கு பார்த்துடுவோம்!
தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து வரும் இந்த சூழலில், முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் முதல் ஹரிநாடார் வரையில் தங்களது கார்கள் மதிப்பு குறித்த சிறப்புத் தொகுப்பை அண்மையில் வழங்கி இருந்தோம். இதில், பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் குஷ்பூ உள்ளிட்டோரை விட்டுட்டீங்களே என்று கருதுபவர்களுக்காக இந்த தொகுப்பில் பிரபலமான சில வேட்பாளர்களின் கார்கள் மதிப்பு குறித்த விபரங்களை வழங்கி இருக்கிறோம்.

பணக்கார வேட்பாளரிடம் இருக்கும் சிறிய கார்!
தமிழகத்தின் மிகவும் பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் மாறி இருக்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.206 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் தனது பெயரில் ரூ.1.62 லட்சம் மதிப்புடைய மாருதி ஏ ஸ்டார் கார் மட்டும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
ராயபுரம் தொகுதியில் ஆறுமுறை வெற்றி பெற்றுள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரூ.39.14 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது மனைவி பெயரில் ரூ.93.93 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இருவரின் பெயரிலும் எந்த ஒரு மோட்டார் வாகனமும் இல்லை என்று பதிவு செய்துள்ளார்.

செல்லூர் ராஜூ
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பெயரில் ரூ.39.05 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துக்களும், ரூ.13 லட்சம் மதிப்புடைய அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி ஜெயந்தி பெயரில் ரூ.2.70 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்களும், ரூ.3.26 கோடி மதிப்புடைய அசையா சொத்துக்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கார் இல்லையா?
அமைச்சர் செல்லூர் ராஜு தனது பெயரில் கார் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரில் ரூ.5.46 லட்சம் மதிப்புடைய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரும், ரூ.14.64 லட்சம் மதிப்புடைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி
திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களில் ஒருவராக பார்க்கப்படும் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி தனது பெயரில் ரூ.97.93 லட்சம் அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கார்கள் மதிப்பு
தனது பெயரில் ரூ.11.56 லட்சம் மதிப்புடைய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், ரூ.11.62 லட்சம் மதிப்புடைய டொயோட்டா இன்னோவா கார் மற்றும் ரூ.1.15 லட்சம் மதிப்புடைய டெம்போ டிரக் இருப்பதாக தெரிவித்துள்ளார். கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதாகவும் அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரில் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சைதை துரைசாமி
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சென்னை மாநாகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தனது பெயரில் ரூ.4.81 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்களும், தனது மனைவி பெயரில் ரூ.4.35 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அம்பாசடர் பிரியர்
தனது பெயரில் 1983ம் ஆண்டு வாங்கப்பட்ட ரூ.29,750 மதிப்புடைய அம்பாசடர் கார், 2006ல் வாங்கப்பட்ட ரூ.45,441 மதிப்புடைய ஹோண்டா இருசக்கர வாகனம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரில் ரூ.2.36 லட்சம் மதிப்புடைய அம்பாசடர் கார், ரூ.8.35 லட்சம் மதிப்புடைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி, ரூ.23.84 லட்சம் மதிப்புடைய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி, ரூ.15.87 லட்சம் மதிப்புடைய டொயோட்டா இன்னோவா கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக வேட்பாளர் குஷ்பூ
நடிகையும், பாஜகவின் நட்சத்திர வேட்பாளருமான குஷ்பூ, சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனுவில் தனது பெயரில் ரூ.4.55 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்களும், தனது கணவர் சுந்தர் சி பெயரில் ரூ.1.83 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில், 8.55 தங்க நகைகள், 87 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கார்களின் மதிப்பு
மேலும், தனது பெயரில் ரூ.33.12 லட்சம் மதிப்புடைய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, ரூ.5.50 லட்சம் மதிப்புடைய மாருதி ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் பெயரில் ரூ.74.70 லட்சம் மதிப்புடைய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு எஸ்யூவியும், ரூ.28.18 லட்சம் மதிப்புடைய டொயோட்டா கேம்ரி காரும், ரூ.12.98 லட்சம் மதிப்புடைய கியா சொனெட் கார்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.