சிறந்த சேவையளிப்பதில் இந்தியாவின் டாப் - 10 விமான நிறுவனங்கள்

Written By:

பெருகி வரும் வர்த்தக தொடர்புகள், சுற்றுலாத் துறை போன்றவற்றால், இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், விமான சேவைகளின் எண்ணிக்கையும், தரமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில், கட்டணம், உணவு, பொழுதுபோக்கு, நேரம் தவறாமை, இருக்கையின் சொகுசுத் தன்மை, ஆய்வுகள் மேற்கொள்ளும் நேரம், லக்கேஜை திரும்ப ஒப்படைக்கும் கால அளவு, விமானத்தின் பராமரிப்பு தரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஆண்டில் இந்தியாவின் 10 சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான விமான நிறுவனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

10. விஸ்தாரா ஏர்லைன்ஸ்

10. விஸ்தாரா ஏர்லைன்ஸ்

டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 2013ல் துவங்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி முதல் சேவையை வழங்கி வருகிறது. நாட்டின் 10 நகரங்களுக்கு வாரத்திற்கு 245 சர்வீஸ்களை வழங்குகிறது. இந்த நிறுவனத்திடம் 6 ஏர்பஸ் ஏ320-232 விமானங்கள் உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக, சாதாரண வகுப்பில் சொகுசு இருக்கைகளை அறிமுகப்படுத்தியது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம்தான். டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் உருவான நிறுவனம்தான் விஸ்தாரா ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 09. ஏர் கோஸ்டா

09. ஏர் கோஸ்டா

ஆந்திர மாநிலம், விஜயவாடாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 2013ம் ஆண்டு துவஹ்கப்பட்டது. இந்த நிறுவனம் இரண்டு எம்ப்ரேயர் இ-170 விமானங்களை வைத்து சேவையை துவங்கிய நிலையில், தற்போது 4 விமானங்களுடன் 9 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. புதிதாக பல விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களை குறிவைத்து சேவையை அளிக்கிறது.

08. ஏர்ஏசியா இந்தியா

08. ஏர்ஏசியா இந்தியா

கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2014ம் ஆண்டில் சேவையை துவங்கியது. பெங்களூர் விமான நிலையத்தை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 5 விமானங்களுடன் 10 நகரங்களுக்கு சேவையை வழங்கி வருகிறது.

07. ஜெட்கனெக்ட்

07. ஜெட்கனெக்ட்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் குறைந்த கட்டண விமான நிறுவனம்தான் ஜெட்கனெக்ட். மும்பையை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திடம் 9 விமானங்கள் உள்ளன. 43 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

Picture credit: Laurent ERRERA/Wiki Commons

06. கோ ஏர்

06. கோ ஏர்

2005ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த விமான நிறுவனம் மும்பையை மையமாக கொண்டு செயல்படுகிறது. நாட்டின் 22 நகரங்களுக்கு தினசரி 140 சர்வீஸ்களை வழங்குகிறது.

05. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

05. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

2004ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சேவையை வழங்கி வருகிறது. கொச்சியை தலைமையிடமாகவும், திருவனந்தபுரம் விமான நிலையத்தை கேந்திரமாகவும் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

04. ஏர் இந்தியா

04. ஏர் இந்தியா

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பெரிய அளவிலான பங்களிப்பை ஏர் இந்தியா பெற்றிருக்கிறது. 1932ல் ஜே.ஆர்.டி.டாடாவால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இரண்டாம் உலகப்போருக்கு பின் இந்திய அரசின் நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் 107 விமானங்களுடன் 85 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

03. ஜெட் ஏர்வேஸ்

03. ஜெட் ஏர்வேஸ்

1992ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 1993 முதல் சேவையளித்து வருகிறது. பயணிகளை கையாள்வதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம். மும்பையை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திடம் 116 விமானங்கள் உள்ளன. மொத்தம் 74 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. ஜெட்லைட் என்ற பெயரில் குறைந்த கட்டண சேவை நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.

02. ஸ்பைஸ்ஜெட்

02. ஸ்பைஸ்ஜெட்

2005ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் சென்னை, டெல்லி, ஹைதராபாத் நகரங்களை முதன்மை நகரங்களாக கொண்டு சேவையாற்றி வருகிறது. இந்த நிறுவனத்திடம் 34 விமானங்கள் உள்ளன 41 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

01. இண்டிகோ

01. இண்டிகோ

இந்தியாவின் பிரபலமான குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம். கடந்த ஆண்டில் வாடிக்கையாளர்களின் அளித்த கருத்துக்களின் அடிப்படையில் சிறந்த சேவையளிக்கும் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. குறிப்பாக, சரியான காலத்தில் விமானங்களை இயக்கும் நிறுவனமாக தெரிவிக்கப்படுகிறது. குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த ஆண்டில் 35.8 சதவீத மார்க்கெட் பங்களிப்பை கோ ஏர் நிறுவனம் பெற்றுள்ளது. 5 சர்வதேச நகரங்கள் உள்பட மொத்தம் 38 நகரங்களுக்கு இணைப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் 98 ஏர்பஸ் ஏ320 விமானங்கள் உள்ளன.

 
English summary
Here is list of top 10 best airlines in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark