தாக்குதலில் திறன் வாய்ந்த உலகின் டாப் 10 ராணுவ ஹெலிகாப்டர்கள்!

By Saravana

போர் விமானங்களை எல்லா சூழல்களிலும், எல்லா இடங்களிலும் பயன்படுத்த இயலாது. அத்தகைய சூழல்களில் தாக்குதல் திறன் படைத்த ஹெலிகாப்டர்கள் வான் பாதுகாப்பையும், தரை தாக்குதல்களையும் நிகழ்த்துவதில் முக்கிய பங்காற்றும்.

அதுபோன்று, ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட உலகின் சிறந்த 10 போர் ஹெலிகாப்டர்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. இசட்-10

10. இசட்-10

2012ம் ஆண்டு சீன ராணுவத்தில் இந்த ஹெலிகாப்டர் சேர்க்கப்பட்டது. குறுகலான உடல்கூடு அமைப்பு, ஒன்றன்பின் ஒன்றான இருக்கை அமைப்பு போன்றவை இதன் சிறப்பம்சங்கள். இதனால், ரேடார்களில் எளிதாக சிக்காது. இந்த ஹெலிகாப்டரில் 30மிமீ விட்டமுடைய துப்பாக்கி, பீரங்கியிலிருந்து ஏவப்படும் ஏவுணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள், வான் இலக்குகளை வானிலிருந்தபடியே, தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருக்கிறது. சீனாவின் வான் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்திலும் இது பயன்பாட்டில் இருக்கிறது. இதனை கப்பலிலும் தரை இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Picture credit: Shimin Gu/Wiki Commons

09. எம்ஐ 24

09. எம்ஐ 24

ரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் மிக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத்தில் சேவையாற்றி வருகிறது. இந்த ஹெலிகாப்டரின் மிக முக்கிய அம்சம், ராணுவ துருப்புகளை ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, எதிரி நாட்டு இலக்குகளை தாக்குதல் நடத்தவும் பயன்படுத்த முடியும். பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்கும் அதிகாரி இந்த ஹெலிகாப்டரில் இருப்பர். அதிகபட்சமாக மணிக்கு 335 கிமீ வேகத்தில் பறக்கும். 450 கிமீ தூரம் வரை பயணிக்கும். 750 ரவுண்டுகள் சுடக்கூடிய இரட்டைக் குழல் துப்பாக்கி, 1,470 ரவுண்டுகள் சுடக்கூடிய 12.7மிமீ விட்டமுடைய துப்பாக்கி, எந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்துவது, ராக்கெட் லாஞ்சர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறந்த தாக்குதல் ஹெலிகாப்டர்களில் முக்கியமானது.

Picture credit: Igor Dvurekov/Wiki Commons

08. ஏஎச்-2 ரூய்வாக்

08. ஏஎச்-2 ரூய்வாக்

தென் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த டெனெல் நிறுவனத்தின் தயாரிப்பு. மொத்தம் 12 ஏஎச்-2 ரூய்வாக் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 309 கிமீ வேகத்தில் செல்லும். 740 கிமீ தூரம் வரை பயணிக்கும். 700 ரவுண்டுகள் சுடக்கூடிய 20மிமீ விட்டமுடைய துப்பாக்கி, பீரங்கிகளை குறிவைத்து தாக்குதவதற்கான நீண்ட தூர ஏவுகணைகள், வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

Picture credit: Danie van der Merwe/Wiki Commons

07. பெல் ஏஎச்-1டபிள்யூ சூப்பர் கோப்ரா

07. பெல் ஏஎச்-1டபிள்யூ சூப்பர் கோப்ரா

இரட்டை எஞ்சின் கொண்ட அமெரிக்க தயாரிப்பு. 2 பைலட்டுகள் இயக்குவர். மணிக்கு 352 கிமீ வேகத்தில் பறக்கும். 576 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரில் 750 ரவுண்டுகள் சுடக்கூடிய 20 மிமீ விட்டமுடைய துப்பாக்கி, 14 ராக்கெட்டுகளை ஏவுவதற்கான லாஞ்சர்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 06. ஏ-129/டி-129[இத்தாலி/துருக்கி]

06. ஏ-129/டி-129[இத்தாலி/துருக்கி]

இத்தாலியை சேர்ந்த அகஸ்ட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர். மேற்கு ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட முதல் தாக்குதல் ஹெலிகாப்டர் மாடல் இதுதான். மணிக்கு 352 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 510 கிமீ தூரம் வரை பயணிக்கும். 500 ரவுண்டுகள் சுடக்கூடிய 20 மிமீ விட்டமுடைய மூன்று குழல்களை கொண்ட துப்பாக்கி, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

Picture credit: gynti_46/Wiki Commons

 05. பெல் ஏஎச்-1இசட் வைப்பர்

05. பெல் ஏஎச்-1இசட் வைப்பர்

பன்முக திறன் கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டர். மணிக்கு 411 கிமீ வேகத்தில் பறக்கும். 685 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரையும் இரண்டு பைலட்டுகள் இயக்குவர். இந்த ஹெலிகாப்டரில் 750 ரவுண்டுகள் சுடக்கூடிய 20 மிமீ விட்டமுடைய துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளன.

Picture credit: Wiki Commons

 04. யூரோகாப்டர் டைகர்

04. யூரோகாப்டர் டைகர்

ஜெர்மனியை சேர்ந்த யூரோகாப்டர் நிறுவனத்தின் தயாரிப்பு. டைகர் என்று குறிப்பிடப்படுகிறது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த ராணுவ ஹெலிகாப்டர் 2003ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. மணிக்கு 290 கிமீ வேகம் வரை பறக்கும். 800 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரில் 30 மிமீ விட்டமுடைய துபாக்கி, வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.

Picture credit: besopha/Wiki Commons

03. எம்ஐ-28எச் ஹாவோக் - ரஷ்யா

03. எம்ஐ-28எச் ஹாவோக் - ரஷ்யா

இரவு பகல் என எந்த நேரத்திலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டது. இது முழுக்க முழுக்க தாக்குதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். ராணுவ தளவாடங்கள் மற்றும் துருப்புகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட இரண்டாம் நிலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு பைலட், ஒரு நேவிகேட்டர் உதவியுடன் இயக்கப்படும். அதிகபட்சமாக 324 கிமீ வேகத்தில் செல்லும். 435 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஹெலிகாப்டரில் 30 மிமீ விட்டமுடைய துப்பாக்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் கொண்டது.

Picture credit: Wiki Commons

02. காமோவ் கேஏ50/கேஏ52

02. காமோவ் கேஏ50/கேஏ52

இதுவும் ரஷ்யாவின் தாக்குதல் ஹெலிகாப்டர். இது ஒற்றை இருக்கை அமைப்பு கொண்டது. எனவே, முழுவதும் ஆயுதங்களால் நிரம்பி வழிகிறது. இந்த ஹெலிகாப்டரில் உள்ள துப்பாக்கிகளை பைலட்டே இயக்க முடியும். பல நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டது. மணிக்கு 350 கிமீ வேகத்தில் பறக்கும். 250 கிமீ சுற்றளவுக்கு போர் புரியும் திறன் கொண்டது.

Picture credit: Vlsergey/Wiki Commons

01. ஏஎச் - 64டி அப்பாச்சி லாங் போ

01. ஏஎச் - 64டி அப்பாச்சி லாங் போ

போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு. வளைகுடா போரில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. பகல் மற்றும் இரவு வேளைகளில் பயன்படுத்த முடியும். 16 ஏவுகணைகள், 70 மிமீ விட்டமுடைய 76 ராக்கெட்டுகள், 1200 ரவுண்டுகள் சுடக்கூடிய 30 மிமீ விட்டமுடைய எந்திர துப்பாக்கி போன்றவை உள்ளன.

ஏவுகணையை துல்லியமாக செலுத்தி அசத்திய இந்தியாவின் புதிய ராணுவ ஹெலிகாப்டர்!

ஏவுகணையை துல்லியமாக செலுத்தி அசத்திய இந்தியாவின் புதிய ராணுவ ஹெலிகாப்டர்!

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Top 10 Best Attack Helicopters in The World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X