கார்களுக்கான டாப் - 10 'ஹைடெக்' பாதுகாப்பு வசதிகள் - சிறப்புத் தொகுப்பு!

By Saravana

கார்களுக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வெகுவேகமாக மேம்பட்டு வருகின்றன. விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பதற்கு இந்த புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியமாகி வருகின்றன. ஒரு நேரத்தில் விலையுயர்ந்த கார்களில் காணப்பட்ட பல வசதிகள் தற்போது சாதாரண கார்களில் நிரந்தரமாகவோ அல்லது ஆப்ஷனலாகவோ வழங்கப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பல புதிய பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் விலையுயர்ந்த கார்களில் தற்போது வழங்கப்படுகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த ஹைடெக் தொழில்நுட்பங்களை எல்லா கார்களிலும் காண முடியும் என்று எதிர்பார்க்கலாம். டாப் - 10 ஹைடெக் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை ஸ்லைடரில் காணலாம்.


டாப் - 10 தொழில்நுட்பங்கள்

டாப் - 10 தொழில்நுட்பங்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கார்களில் பயன்படுத்தப்படும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை காணலாம்.

1.அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

1.அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

நெடுஞ்சாலை பயணங்களின்போது ஆக்சிலேட்டரை அழுத்தாமல், காரை சீரான வேகத்தில் செலுத்துவதற்கு பயன்படும் வசதிதான் க்ரூஸ் கன்ட்ரோல். இதன் மேம்பட்ட தொழில்நுட்பம்தான் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல். காரின் வேகத்தை சீராக இருப்பதோடு மட்டுமின்றி, முன்னால் மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்களை சென்சார்கள் மூலமாக அறிந்துகொண்டு ஓட்டுனரின் உதவியில்லாமல் காரின் வேகத்தை குறைத்து கூட்டுவது மற்றும் அவசர சமயங்களில் பிரேக் பிடித்து காரை நிறுத்துவது போன்ற வசதிகளை கொண்டதுதான் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்.

2.பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன்

2.பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன்

வளைவுகளில் திரும்பும்போது அல்லது காரை பார்க்கிங் செய்யும்போது ஓட்டுனரின் பார்வை படாத இடங்களில் வரும் வாகனங்கள் மற்றும் பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்வதுதான் பிளைட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம். இருக்கை அல்லது ஸ்டீயரிங் வீலில் அதிர்வுகளை ஏற்படுத்தி எச்சரிக்கும். இல்லையெனில், எச்சரிக்கை விளக்கு ஒளிர்வதை வைத்தும் அல்லது எச்சரிக்கை ஒலி மூலமும் கண்டுபிடிக்கலாம்.

3. லேன் டிபார்ச்சர் வார்னிங்

3. லேன் டிபார்ச்சர் வார்னிங்

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது தடம் மாறும்போது பின்னால் வேகமாக வரும் வாகனங்களுடன் மோதும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்கக்கும் விதத்தில் தடம் மாறுவதை எச்சரிக்கும் வசதிதான் இது. கவனக்குறைவாக தடம் மாறிவிடும் நிலையில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் எச்சரிக்கையை வழங்குவதை தவிர்த்து பேராபத்துக்களை தவிர்க்க முடியும். சில சமயங்களில் அசதி ஏற்பட்டு தூக்கம் வரும்போதும் தடம் மாறிவிடும் ஆபத்து இருப்பதையும் இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம் கண்டறிந்து ஆபத்துக்களையும், விபத்துக்களையும் தவிர்க்க உதவுகிறது.

4. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

4. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

டயரில் காற்றழுத்தம் சரியாக இல்லாதபோது விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை உணர்ந்து கொண்டு பல மேலைநாடுகளில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. டயரில் காற்றழுத்தும் குறையும்போது சக்கரங்களில் இருக்கும் சென்சார்கள் மூலமாக ஓட்டுனருக்கு எச்சரிக்கும் வசதிதான் இது.

5.ரோல்ஓவர் பிரிவென்ஷன் சிஸ்டம்

5.ரோல்ஓவர் பிரிவென்ஷன் சிஸ்டம்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டத்தின் மேம்பட்ட தொழில்நுட்பம்தான் இது. வளைவுகளில் வேகமாக திரும்பும்போது காரின் சமநிலை குறைந்து கவிழும் நிலை ஏற்பட்டால், உடனடியாக த்ராட்டிலை குறைத்து, பிரேக் பிடித்து காரை கட்டுக்குள் கொண்டு வரும் தொழில்நுட்பம்தான் இது. விலையுயர்ந்த கார்களில் இது நிரந்தர பாதுகாப்பு தொழில்நுட்பமாக வழங்கப்படுகிறது.

6. டியூவல் ஸ்டேஜ் ஏர்பேக்

6. டியூவல் ஸ்டேஜ் ஏர்பேக்

ஓட்டுனர்களின் உருவ அமைப்பு மற்றும் எடை ஆகியவை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது அல்லவா. எனவே, விபத்து சமயங்களில் ஏர்பேக் பொருத்தியிருந்தாலும் போதிய பாதுகாப்பை வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில் ஓட்டுனரின் சீட் பெல்ட் பொருத்தியிருக்கும் நிலை, எடை மற்றும் அமரும் நிலை ஆகியவற்றை உணர்ந்து சிறப்பான பாதுகாப்பை வழங்கும் வசதியை தருவதுதான் டியூவல் ஸ்டேஜ் ஏர்பேக்.

7.எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட்

7.எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட்

எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்திலிருந்து இது சற்று வித்தியாசமான தொழில்நுட்பம். அவசர சமயத்தில் ஓட்டுனர் பதட்டமாக பிரேக் பிடிப்பதை உணர்ந்து கொண்டால், உடனடியாக கூடுதல் பிரேக் பவரை செலுத்தி காரை குறுகிய தூரத்தில் நிறுத்துவதுதான் எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட தொழில்நுட்பம். சில கார்களில் க்ரூஸ் கன்ட்ரோல் அல்லது ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது.

8. நைட் விஷன் அசிஸ்ட்/ அடாப்டிவ் ஹெட்லைட்ஸ்

8. நைட் விஷன் அசிஸ்ட்/ அடாப்டிவ் ஹெட்லைட்ஸ்

சாலையில் முன்னால் இருக்கும் மரங்கள், பாதசாரிகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் குறித்து முன்கூட்டியே ஓட்டுனருக்கு எச்சரிக்கும் வசதிதான் நைட்விஷன் அசிஸ்ட். தெர்மல் இமேஜிங் கேமரா மூலம் 1,000 அடிக்கு முன்னால் இருக்கும் பொருட்களை சென்டர் கன்சோலில் இருக்கும் திரையில் உருவத்தை ஹைலைட் செய்து காட்டும். இதன்மூலம், முன்கூட்டியே நாம் எச்சரிக்கையாக செல்ல முடியும். அடாப்டிவ் ஹெட்லைட்டுகள் என்பது வளைவுகளில் திரும்பும்போது, நேராக ஒளியை பாய்ச்சாமல், முகப்பு விளக்குளும் கார் திரும்பும் திசையில் ஒளியை பாய்ச்சும். சில விலையுயர்ந்த மாடல்களில் வேகத்திற்கு தகுந்தவாறு ஹெட்லைட் பிரகாசத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.

9. ரியர் வியூ கேமரா

9. ரியர் வியூ கேமரா

பார்க்கிங் செய்யும்போது அல்லது ரிவர்ஸ் எடுக்கும்போது ரியர் வியூ கண்ணாடிகள் மூலமாக பின்னால் இருக்கும் பொருட்களை துல்லியமாக காண முடியாது. குழந்தைகள் இருந்தால் பெரும் பிரச்னைதான். எனவே, பின்னால் இருக்கும் சிறிய பொருட்கள், விலங்குகள், குழந்தைகள் போன்றவற்றை துல்லியமாக பார்ப்பதற்கு உதவுவதுதான் ரியர் வியூ கேமரா. தற்போது நேவிகேஷன் சிஸ்டத்துடன் இணைந்து துல்லியமாக பின்னால் இருக்கும் பொருட்களை காட்டும் ரியர் வியூ கேமராக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.

10.எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ்

10.எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ்

விபத்தில் சிக்கும்போது கார்களில் தானியங்கி முறையில் இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிர விடுவது, பயணிகள் வெளியேறுவதற்கு எளிதாக தானியங்கி முறையில் கதவுகள் திறப்பது, ஏர்பேக் விரிவடையும்போது எஞ்சினுக்கு எரிபொருள் செல்வதை தடை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் தொழில்நுட்ப வசதிதான் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ். மேலும், விபத்து குறித்து சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்களின் அவசர உதவி மையம் மற்றும் இதர உதவி மையங்களுக்கு தகவல் அனுப்பும் பணியையும் இந்த தொழில்நுட்பம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் வேறு வேறு, ஆனால், தொழில்நுட்பம் ஒன்றுதான்

பெயர் வேறு வேறு, ஆனால், தொழில்நுட்பம் ஒன்றுதான்

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்களை ஒவ்வொரு கார் நிறுவனமும் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன. ஆனால், அதன் தொழில்நுட்பம் மற்றும் அதன் நோக்கமும் ஒன்றாகவே இருக்கின்றன.

Most Read Articles
English summary
Here are the top 10 high-tech safety technologies for cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X