நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனாலும் கவலைப்படாத வடகொரியா... ஏன் தெரியுமா?

Written By:

அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வடகொரியா அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை கிலி பிடிக்க செய்து வருகிறது. மேலும், அமெரிக்க- தென்கொரியா இடையிலான போர் பயிற்சியும் வடகொரியாவை எரிச்சலடையச் செய்துள்ளது.

அமெரிக்க- தென்கொரிய கூட்டு போர் பயிற்சிக்கு சூசகமாக எச்சரிக்கும் விதத்தில், நாங்கள் நினைத்தால் எதிரி நாடுகளை ஒரு மணி நேரத்தில் அழித்து விடுவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த பதட்டமான சூழலில், வடகொரியாவுக்கு சொந்தமான நீர்மூழ்கி போர்க்கப்பல் ஒன்று சமீபத்தில் காணாமல் போயுள்ளது. இதனை அமெரிக்காவின் ராணுவ வட்டாரங்களும், உளவு அமைப்புகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

அந்த நீர்மூழ்கி கப்பலின் கதி என்னவானது என்பது குறித்து இன்னும் உறுதியானத் தகவல் இல்லை. ஆனால், இதனை பற்றி வடகொரியா கவலைப்படவில்லை! ஏன் தெரியுமா? ஆம், வடகொரியாவிடம் ஏராளமான நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவிற்கு இணையான அளவில் நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் நாடும் வடகொரியாதான்."

எண்ணிக்கை

எண்ணிக்கை

ஆம், வடகொரியாவிடம் மொத்தமாக 70 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. எனவேதான், நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன சூழலில் கூட, அதனை பற்றி கவலைப்படாமல், அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் தனது மிரட்டலை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

வல்லமை

வல்லமை

இந்த நீர்மூழ்கி கப்பல்களில் பெரும்பாலானவை பழைமையானவை. குறைந்த தாக்குதல் திறன் கொண்டவைதான். ஆனாலும், போர் என்று வரும்போது இதன் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றிருக்கும். அதுவும் தனது எதிரியாக கருதும் தென்கொரியாவை இந்த நீர்மூழ்கி கப்பல்களை வைத்து ஒரு கை பார்க்க முடியும் என்று வடகொரியா நம்புகிறது.

Picture credit: RT

தென்கொரியா அச்சம்

தென்கொரியா அச்சம்

கடந்த ஆண்டு வடகொரியாவின் வசம் இருந்த 50க்கும் மேற்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், தனது துறைமுகங்களிலிருந்து மறைந்துவிட்டன. எனவே, அவை எந்தநேரத்திலும் போருக்கு ஆயத்தமான நிலையில், தென்கொரியாவிற்கு அச்சுறுத்தும் வண்ணம் நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் என தென்கொரியா சந்தேகம் தெரிவித்துள்ளது. சரி, போர் என்று வரும்போது நீர்மூழ்கி கப்பல்களும் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தநிலையில், நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் எண்ணிக்கை அடிப்படையில் டாப் 10 நாடுகளை தொடர்ந்து காணலாம்.

Picture credit: Craig P. Strawser/Wiki Commons

 10. க்ரீஸ்

10. க்ரீஸ்

அதிக நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் நாடுகளில் 10வது இடத்தில் க்ரீஸ் நாடு உள்ளது. இந்த நாட்டிடம் 11 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. மேலும், பல நீர்மூழ்கி கப்பல்களை க்ரீஸ் தயாரித்து வருவதுடன், அதில் பல கப்பல்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் தீவிரம் காட்டி வருகிறது.

09. துருக்கி

09. துருக்கி

உலகிலேயே அதிக நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் 9வது பெரிய நாடு துருக்கி. இந்த நாட்டின் கடற்படை வசம் 12 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. மேலும், அந்த நாட்டு கடற்படையிடம் 48,600 வீரர்கள் உள்ளனர்.

Picture credit: vovo.vn

08. இந்தியா

08. இந்தியா

ராணுவ பலத்தில் உலகின் 4வது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, உலக அளவில் அதிக நீர்மூழ்கிகளை வைத்திருக்கும் நாடுகளின் வரிசையில் 8வது இடத்தை பெறுகிறது. நம் நாட்டு கடற்படையிடம் 14 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. மேலும், அணுசக்தியில் இயங்கும் அகுலா ரக தாக்குதல் நீர்மூழ்கி கப்பலும் இந்தியாவிடம் உள்ளது.

07. தென்கொரியா

07. தென்கொரியா

வடகொரியாவால் எந்த நேரத்திலும் போர் பதட்டம் மிகுந்த தென்கொரியா பட்டியலில் 7வது இடத்தை பெறுகிறது. தென்கொரியாவிடம் 15 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. கப்பல்களையும், தரை இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் ஹா்பூன் வகை ஏவுகணைகளை இந்த நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்த முடியும்.

Picture credit: Craig P. Strawser/Wiki Commons

06. ஜப்பான்

06. ஜப்பான்

அதிக நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தை ஜப்பான் பிடிக்கிறது. இந்த நாட்டிடம் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அத நவீன ஏவுகணைகளுடன் ஜப்பான் கடற்பகுதிகளை கட்டி காப்பதிலும், உளவு பார்ப்பதிலும் இந்த நீர்மூழ்கி கப்பல்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

05. ஈரான்

05. ஈரான்

அதிக நீர்மூழ்கி கொண்ட நாடுகளில் ஈரான் 5வது இடத்தை பிடித்துள்ளது. இதில், 3 ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட கிலோ க்ளாஸ் நீர்மூழ்கி கப்பல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் மனதில் வைத்தே ஈரான் விவகாரத்தில் தற்போது அமெரிக்கா சற்று அடக்கி வாசிக்கிறது போலும்.

Picture credit: DoD photo./Wiki Commons

04. ரஷ்யா

04. ரஷ்யா

ராணுவ பலத்திலும், தொழில்நுட்பத்திலும் வல்லமை வாய்ந்த நாடான ரஷ்யாவிடம் 60 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. ரஷ்யாவின் ராணுவ பலத்திற்கும், கடல் சார் பாதுகாப்பிற்கும் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் உற்ற துணையாக இருந்து வருகின்றன.

 03. சீனா

03. சீனா

சீனாவிடம் 68 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில், டீசல்- எலக்ட்ரிக் என இரட்டை எரிநுட்பம் கொண்ட சாதாரண வகை நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமின்றி, அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளும் உள்ளன.

02. வடகொரியா

02. வடகொரியா

வடகொரியாவிடம் 70 நீர்மூழ்கி கப்பல்கள் இருந்தன. தற்போது ஒன்று நீரில் மூழ்கிவிட்டதாக சந்தேகப்படும் நிலையில், மீதம் 69 நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கின்றன. இதில், 50க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிகள் தற்போது போருக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

Picture credit: RT

01. அமெரிக்கா

01. அமெரிக்கா

உலகிலேயே அதிக நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. அந்த நாட்டின் கடற்படையிடம் 75 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றில் பல நீர்மூழ்கி கப்பல்கள் டீசல்- எலக்ட்ரிக் எரிசக்தி நுட்பத்திலும், மீதமுள்ளவை அணுசக்தியிலும் இயங்கும்.

Picture credit: U.S. Navy/Wiki Commons

ஸ்டார் ஹோட்டலாக மாறும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!

ஸ்டார் ஹோட்டலாக மாறும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!

 

மேலும்... #ராணுவம் #military
English summary
The submarine was operating off the North Korean coast earlier this week before reported missing. According to a report by CNN, US officials are not sure if the submarine is adrift or it has sunk. But officials believe that the submarine could have suffered a failure. The North Korean army has a fleet of 70 submarines. Think that is a lot for one country? Here's a list of top 10 countries with the largest submarine fleets.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more