உலகின் டாப்-10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!

Written By:

இன்றைய தேதியில் மிக மிக உயரிய தொழில்நுட்ப அம்சங்களை பெற்ற போர் விமானங்களையே ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் என்று அழைக்கின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், ஆயுதங்களை பொருத்திய பின்னரும் அவை எதிரிநாட்டு ரேடார்களால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. அதாவது, தாக்குதல் திறன், செயல்திறன், தொடர்பு வசதிகள் போன்றவற்றில் மிகவும் நவீனமானவை என்பதுடன், நான்காம் தலைமுறை அம்சங்களின் மேம்பட்ட வடிவமாக உருவாக்கப்படுகின்றன.

அமெரிக்காவிடம் மட்டுமே ஐந்தாம் தலைமுறை போர் விமானம் பயன்பாட்டில் உள்ளது. மற்றபடி, இந்தியா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகள் நான்காம் தலைமுறை போர் விமானங்கள்தான் பயன்பாட்டில் வைத்துள்ளன. இந்தநிலையில், இந்தியா உள்பட ராணுவ பலத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் அல்லது தயாரிப்பு நிலையில் உள்ள 10 சிறந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. எச்ஏஎல் ஏஎம்சிஏ- இந்தியா

10. எச்ஏஎல் ஏஎம்சிஏ- இந்தியா

ஒற்றை இருக்கை கொண்ட நடுத்தர வகை ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக உருவாகிறது. இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பன்முக பயன்பாட்டு வகை போர் விமான வகையை சேர்ந்தது. எதிரி பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது, எதிரி விமானங்களை வழிமறித்து தாக்குதல் நடத்தும் திறன் பெற்றதாக இருக்கும்.

சிறப்புகள்

சிறப்புகள்

14 டன் எடை கொண்ட இந்த விமானம் மணிக்கு 2,655 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 2,800 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். 2011ல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட வடிவமைப்புப் பணிகள் 2014ல் முடிவடைந்தது. வரும் 2018ல் முதல் மாதிரி தயாரிக்கப்பட்டு, 2023ல் பறக்கவிட்டு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Photo Source

09. சென்யாங் ஜே-31 [எஃப்-60], சீனா

09. சென்யாங் ஜே-31 [எஃப்-60], சீனா

கிர்ஃபால்கன் அல்லது ஃபால்கன் ஹாக் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த நவீன போர் விமானம் சீனாவின் சென்யாங் விமான நிறுவனத்தின் தயாரிப்பு. கடந்த 2012ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்தனர். இரண்டு ஜே-11 போர் விமானங்கள் அரணாக பின்தொடர, 10 நிமிடங்கள் பறக்கவிட்டு தரை இறக்கினர்.

சிறப்புகள்

சிறப்புகள்

இதுவும் ஒற்றை இருக்கை போர் விமானம். 17.6 டன் எடை கொண்ட இந்த விமானம் மணிக்கு 2,200 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 4,000 கிமீ தூரம் வரை பயணிக்கும். குறைந்த தூர மற்றும் நடுத்தர தூர வான் வழி இலக்குகளை அழிப்பதற்கான ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.

Photo Source

08. எச்ஏஎல் சுகோய் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்- இந்தியா மற்றும் ரஷ்யா

08. எச்ஏஎல் சுகோய் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்- இந்தியா மற்றும் ரஷ்யா

இந்திய - ரஷ்ய கூட்டணியில் உருவாகி வரும் இந்த ஐந்தாம் தலைமுறை விமானம் ரஷ்யாவின் PAK FB[T50] போர் விமானத்தில் 43 மாற்றங்களை செய்து மேம்பட்ட வடிவமாக உருவாக்கப்படுகிறது. இந்திய விமானப்படைக்காக உருவாக்கப்பட்டு வரும் மாடல். இதுவும் பன்முக பயன்பாட்டு வகை போர் விமானமாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இது இரண்டு இருக்கைகள் கொண்ட போர் விமானமாக உருவாகிறது. 18 டன் எடை கொண்ட இந்த போர் விமானம் 2,440 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 3,500 கிமீ தூரம் வரை பறந்து செல்வதற்கான எரிபொருள் டேங்க்கை பெற்றிருக்கும். 2022ல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 07. டிஏஐ டிஎஃப்எக்ஸ்/F-X- துருக்கி

07. டிஏஐ டிஎஃப்எக்ஸ்/F-X- துருக்கி

துருக்கி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம். 2010ம் ஆண்டு இந்த போர் விமானத்தின் வடிவமைப்புப் பணிகள் துவங்கப்பட்டன. இந்த விமானத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை சுவீடனை சேர்ந்த Saab AB நிறுவனம் வழங்குகிறது. ஆனாலும், இது முழுக்க முழுக்க சொந்த தயாரிப்பு என அந்நாடு அறிவித்தது. 2024ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு துருக்கி திட்டமிட்டிருக்கிறது.

06. மிட்சுபிஷி ஏடிடி-எக்ஸ் [சின்சின்] - ஜப்பான்

06. மிட்சுபிஷி ஏடிடி-எக்ஸ் [சின்சின்] - ஜப்பான்

ஜப்பான் உருவாக்கியிருக்கும் ஐந்தாம் தலைமுறை மாடல். இந்த விமானத்தை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்த விமானத்துக்கான முக்கிய ஒப்பந்ததாராக மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறது.

05. கேஏஐ கேஎஃப்-எக்ஸ்- தென்கொரியா

05. கேஏஐ கேஎஃப்-எக்ஸ்- தென்கொரியா

இது போர் விமானம் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ஏன் தெரியுமா? இது ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக மட்டுமின்றி, பைலட் உதவியின்றி இயக்குவதற்கான தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. 2020ல் தென்கொரிய விமானப்படை மற்றும் இந்தோனேஷிய விமானப்படைகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

04. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங்-II, அமெரிக்கா

04. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங்-II, அமெரிக்கா

குறைவான செலவீனத்தில் சிறந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக அமெரிக்கா இதனை உருவாக்கியுள்ளது. தரை தாக்குதல், உளவு பார்த்தல், வான் பாதுகாப்பு என பன்முக பயன்பாடு கொண்டது. தற்போது இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளது. மணிக்கு 1,930 கிமீ வேகத்தில் பறக்கும் என்பதோடு, 2,220 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

03. சுகோய் பிஏகே எஃப்ஏ[டி-50]- ரஷ்யா

03. சுகோய் பிஏகே எஃப்ஏ[டி-50]- ரஷ்யா

இரட்டை எஞ்சின் கொண்ட போர் விமானத்தை ரஷ்ய விமானப்படைக்காக சுகோய் உருவாக்கியிருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. மணிக்கு 1,700 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த விமானம், 3,500 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் அடிப்படையிலேயே நம் நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் உருவாக்கப்பட்டு வருகிறது.

Photo Source

 02. செங்குடு ஜே-20- சீனா

02. செங்குடு ஜே-20- சீனா

கறுப்பு கழுகு என்று குறிப்பிடப்படும் சீனாவின் இந்த போர் விமானம் ஒற்றை இருக்கை கொண்டது. கடந்த 2011ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. 2018ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது.

 01. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராப்டர்- அமெரிக்கா

01. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராப்டர்- அமெரிக்கா

உலகின் முதல் ஐந்தாம் தலைமுறை போர் விமானம். 2005ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானம் ஒற்றை இருக்கை அமைப்பு கொண்டது. 187 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. மணிக்கு 2,410 கிமீ வேகத்தில் பறக்கும் என்பதோடு, 2,960 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

 
மேலும்... #military #ராணுவம்
English summary
Top 10 Fifth Generation Fighter Jet Aircrafts List.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark