உலகின் மிகவும் பிரத்யேகமான டாப்- 10 மோட்டார்சைக்கிள்கள்

By Saravana

ஆண்டுதோறும் உலகில் பல மில்லியன் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில், சில மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே மிகவும் பிரத்யேகமான தொழில்நுட்பத்தை கொண்டு வருகின்றன.

அதுபோன்ற மிகவும் பிரத்யேகமான வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் இதுவரை உலகில் வெளியிடப்பட்ட டாப்- 10 மோட்டார்சைக்கிள்களை ஸ்லைடரில் காணலாம்.


பட்டியல்

பட்டியல்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்- 10 மோட்டார்சைக்கிள்களை காணலாம்.

 10. பிமோட்டா தேசி 3டி

10. பிமோட்டா தேசி 3டி

இத்தாலியின் பழமையான மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் நிறுவனமான பிமோட்டாவின் சமீபத்திய மாடல்தான் இந்த தேஸி 3டி. முன்பக்கம் ஃபோர்க்குகள் இல்லாமல், புல்போர்க் ஷாக்கில் முன்சக்கரம் இயங்குகிறது. இதேபோன்று, ஹேண்டில்பாரும் நேரடியாக சக்கரத்துடன் ஃபோர்க் ஸ்டெம் மூலம் இணைக்கப்படாதது இதன் தொழில்நுட்ப சிறப்பம்சம். இந்த மோட்டார்சைக்கிளில் டுகாட்டி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

9. யமஹா ஒய்இசட்எஃப்- ஆர்7

9. யமஹா ஒய்இசட்எஃப்- ஆர்7

பந்தயத்தில் பயன்படுத்துவதற்கான சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளில் 749சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரை மட்டுமே அளிக்கும். ஃப்யூவல் இன்ஜெக்டரை இயங்கும்போது அதிகபட்சமாக 135 பிஎச்பி பவரை அளிக்கும். இந்த எஞ்சின் டைட்டானியத்திலான 20 வால்வுகளும், நிக்கல் பூச்சு கொண்ட பிஸ்டன்களும் கொண்டது. மொத்தமாக 500 மோட்டார்சைக்கிள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

8.அப்ரிலியா ஆர்எஸ்250

8.அப்ரிலியா ஆர்எஸ்250

மோட்டோஜிபி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதை கொண்டாடும் வகையில், அப்ரிலியா வெளியிட்ட மாடல்தான் இது. பல வசதிகளை வழங்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில், இருக்கும் க்ரோனோமீட்டர் பந்தயத்தின்போது 40 சுற்றுகள் முடிவதை நினைவூட்டும் வசதி கொண்டது.

 7. ஹோண்டா ஆர்சி30

7. ஹோண்டா ஆர்சி30

ஹோண்டா விஎஃப்ஆர்750ஆர் என்ற இந்த மோட்டார்சைக்கிள் ஆர்சி30 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் 748சிசி வி4 எஞ்சின் 76 பிஎச்பி பவரை அளிக்கும். வேர்ல்டு சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் பந்தயங்களுக்காக ஹோண்டா ரேஸிங் கார்ப்பரேஷன் வடிவமைத்த மாடல் இது. குறைந்த கியர் ரேஷியோ கொண்ட இந்த பைக் மாடலின் செயல்திறன் வியக்க வைத்தது.

 6. மோட்டோ குஸ்ஸி வி8

6. மோட்டோ குஸ்ஸி வி8

1955- 1967ம் ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் பந்தயங்களுக்கான பிரத்யேக மாடலாக டிசைன் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளில் 499சிசி வி8 லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 78 பிஎச்பி பவரை அளிக்கும். மணிக்கு 280கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 5. டுகாட்டி டெஸ்மோசிடிஸி ஆர்ஆர்

5. டுகாட்டி டெஸ்மோசிடிஸி ஆர்ஆர்

மோட்டோஜிபி பைக்கின் அடிப்படையில் சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல் இது. வி4 டபுள் எல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இந்த மோட்டார்சைக்கிள் மொத்தமாக 1,500 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. டைட்டானியம் வால்வுகள் கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக 197 எச்பி பவரை அளிக்கும். மணிக்கு 307.03 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

5. டுகாட்டி டெஸ்மோசிடிஸி ஆர்ஆர்

5. டுகாட்டி டெஸ்மோசிடிஸி ஆர்ஆர்

மோட்டோஜிபி பைக்கின் அடிப்படையில் சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல் இது. வி4 டபுள் எல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இந்த மோட்டார்சைக்கிள் மொத்தமாக 1,500 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. டைட்டானியம் வால்வுகள் கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக 197 எச்பி பவரை அளிக்கும். மணிக்கு 307.03 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

4. வின்சென்ட் பிளாக் ஷேடோ

4. வின்சென்ட் பிளாக் ஷேடோ

மிகவும் பிரபலமான இந்த மாடலில் மொத்தம் 1,700க்கும் குறைவான மோட்டார்சைக்கிள்கள்தான் தயாரிக்கப்பட்டன. 1960களில் உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் மாடல் என்ற பெருமைக்கு சொந்தக்காரனாக வலம் வந்தது.

3. சுஸுகி ஆர்ஜி500 காமா

3. சுஸுகி ஆர்ஜி500 காமா

1985 முதல் 1987 வரை தயாரிக்கப்பட்ட இந்த மாடல் சுஸுகி ஆர்ஜி500 காமா கிரான்ட் பிரிக்ஸ் மோட்டார்சைக்கிள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இதில் பொருத்தப்பட்டிருந்த 498சிசி எஞ்சினஅ 93 எச்பி பவரை அளிக்கும்.

 2. பிஎம்டபிள்யூ ஆர்32

2. பிஎம்டபிள்யூ ஆர்32

விமான தயாரிப்பை நிறுத்தியவுடன் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை துவங்கிய பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்த முதல் மோட்டார்சைக்கிள் மாடல் இதுதான். பாக்ஸர் ட்வின்- ஷாப்ட் டிரைவ் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இன்றளவும் பாக்ஸர் ட்வின் எஞ்சின் நுட்பத்தை பிஎம்டபிள்யூ தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

 1. ஹோண்டா என்ஆர்

1. ஹோண்டா என்ஆர்

ஹோண்டாவின் நவீன டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட மாடல். கார்பன் ஃபைபர் பாடி கொண்ட இந்த மோட்டார்சைக்கிளின் எக்சாஸ்ட் பைக் இருக்கைக்கு கீழாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிசைனை காப்பியடித்துவிட்டதாக இன்றைக்கும் ஹோண்டா மீது டுகாட்டி புகார் கூறி புலம்பி வருகிறது. இது உற்பத்தி செய்யப்பட்டபோது, உலகின் மிகவும் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடல் என்ற பெருமைக்குரியதாக இருந்தது. ஒரு சிலிண்டருக்கு 8 வால்வுகள் வரை கொண்ட இதன் எஞ்சின் பிஸ்டன் ஒவ்வொன்றிற்கும் இரண்டு கனெக்டிங் ராடுகள் கொடுக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 வசீகரித்த மாடல்

வசீகரித்த மாடல்

உங்களை வசீகரித்த உலகின் பிரத்யேக மோட்டார்சைக்கிள் விபரங்களை கருத்துப் பெட்டியில் தெரிவிக்கலாம்.

Most Read Articles
English summary
Lets take a look at ten of the greatest motorcycles of all time.
Story first published: Wednesday, October 29, 2014, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X