ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வித்தை காட்டிய டாப்-10 கார்கள்

ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் விரைவில் ஸ்கை ஃபால் சினிமா இன்னும் சில தினங்களில் இந்தியாவில் ரிலீசாக உள்ளது. இதனால், தற்போதே சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜேம்ஸ்பாண்ட் ஃபீவர் பற்றிக்கொண்டுவிட்டது. ஜேம்ஸ்பான்ட் படங்களில் கதாநாயகனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு இணையான முக்கியத்துவம் அவர் பயன்படுத்தும் கார்களுக்கும் இருப்பது கண்கூடு.

குறிப்பாக, ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மயிர்க்கூச்செரிய செய்யும் கார் சேஸிங் காட்சிகளுக்கு ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும். அந்த வகையில், ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தை மையமாக வைத்து வந்த படங்களில் பயன்படுத்தப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை காணலாம். பொதுவாக, ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அஸ்டன் மார்ட்டின் கார்களே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த செய்தி தொகுப்பில் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பயன்படுத்தப்பட்ட பிற கார் மாடல்களையும் காணலாம்.

 அஸ்டன் மார்ட்டின் டிபி-5

அஸ்டன் மார்ட்டின் டிபி-5

கோல்டு ஃபிங்கர், தண்டர்பால், கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், கேஸினோ ராயல் ஆகிய படங்களில் அஸ்டன் மார்ட்டின் டிபி வரிசை கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் இருப்பது அஸ்டன் மார்ட்டின் டிபி-5.

1947-72 வரை அஸ்டன் மார்ட்டின் தலைவராக இருந்த டேவிட் பிரவுனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் சுருக்கம்தான் டிபி. இரட்டை எரிபொருள் டேங்க், எலக்ட்ரிக் விண்டோஸ், லெதர் பினிஷிங் ஆகியவை இதன் அம்சங்கள். இந்த கார் மணிக்கு 233 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

லோட்டஸ் எஸ்பிரிட் எஸ்-1

லோட்டஸ் எஸ்பிரிட் எஸ்-1

'தி ஸ்பை ஊ லவ்டு மி' படத்தில் பயன்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர் லோட்டஸ் எஸ்பிரிட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதில், 160 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 222 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருந்தது.

லோட்டஸ் எஸ்பிரிட் எஸ்-1

லோட்டஸ் எஸ்பிரிட் எஸ்-1

1980 களில் கலக்கிய 'தி லிவிங் டேலைட்ஸ்' படத்தில் பயன்படுத்தப்பட்ட அஸ்டன் மார்ட்டின் கார் இதுதான். ஜேம்ஸ்பாண்ட் படத்துக்காக பல கஸ்டமைசேஷன் செய்யப்பட்டு படத்தில் பயன்படுத்தப்பட்டிந்தது. அதிகபட்சம் மணிக்கு இந்த கார் 270 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

பிஎம்டபிள்யூ 750ஐஎல்

பிஎம்டபிள்யூ 750ஐஎல்

'டுமாரோ நெவர் டைஸ்' படத்தில் பயன்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் இதுதான். படத்தின் சேஸிங் காட்சிகளில் அசத்திய இந்த காரில் 4.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த எஞ்சின் 282 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மெர்குரி காகர் எக்ஸ்ஆர்-7

மெர்குரி காகர் எக்ஸ்ஆர்-7

'ஆன் ஹர் மெஜஸ்ட்டி சீக்ரெட் சர்வீஸ்' படத்தில் பயன்படுத்தப்பட்ட கார். ஃபோர்டு நிறுவனத்தின் துணை பிராண்டான மெர்குரி பிராண்டில் வந்த கார். 200 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 எஞ்சின் கொண்ட பவர்ஃபுல் கார்.

லோட்டஸ் எஸ்பிரிட் டர்போ

லோட்டஸ் எஸ்பிரிட் டர்போ

'ஃபார் யுவர் அய்ஸ் ஒன்லி' படத்தில் பயன்படுத்தப்பட்ட கார். இந்த காரில் 218 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினுடன் சாகசங்களை காட்டியது.

டொயோட்டா 2000 ஜிடி ரோட்ஸ்டெர்

டொயோட்டா 2000 ஜிடி ரோட்ஸ்டெர்

'யு ஒன்லி லிவ் டுவைஸ்' என்ற படத்தில் பயன்பட்டிருந்தது. இது லிமிடேட் எடிசன் கார் என்பதுடன் யமஹாவுடன் இணைந்து டொயோட்டா தயாரித்த கார். ஜப்பானில் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்புக்கு வித்திட்ட கார் என்றும் கூறலாம். இந்த காரில் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. மணிக்கு அதிகபட்சம் 217 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

ஃபோர்டு முஸ்டாங் மாக்-1

ஃபோர்டு முஸ்டாங் மாக்-1

'டைமன்ட்ஸ் ஆர் ஃபார்எவர்' படத்தில் பயன்பட்டிருந்தது. ஃபோர்டு நிறுவனத்தின் பவர்ஃபுல் காராக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த காரில் 5.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

பிஎம்டபிள்யூ இசட்8

பிஎம்டபிள்யூ இசட்8

'தி வேர்ல்டு இஸ் நாட் எனஃப்' படத்தில் பயன்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ கார். இந்த காரில் 400 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.9 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ்

அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ்

டிபி வரிசையில் நவீன தலைமுறை அம்சங்கள் கொண்ட இந்த கார்கள் கேஸினோ ராயல் மற்றும் குவான்டம் ஆஃப் சொலேஸ் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 510 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் மணிக்கு அதிகபட்சம் 295 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

Most Read Articles
English summary
To be honest, we haven't watched all the James Bond movies listed out in this photo feature. However, we have reviewed the Bond cars to an extent to create this exclusive Top 10 James Bond cars photo feature.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X