இந்தியாவின் பரபரப்பு மிகுந்த டாப் 10 சர்வதேச விமான நிலையங்கள்!

Written By:

இந்தியாவின் மிகவும் பரபரப்பான டாப் 10 சர்வதேச விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. இதில், சென்னையும் இடம் பெற்றுள்ளது.

எந்தெந்த விமான நிலையங்கள் எந்த இடத்தை பிடித்திருக்கின்றன என்பதை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

முன்னுரை;

முன்னுரை;

ரயில் நிலையங்களும், பேருந்து நிலையங்களும் பல லட்சக்கணக்கான மக்களின் போக்குவரத்திற்கு உதவிகரமாக உள்ளதோ, அதேபோல், விமானங்களும் போக்குவரத்திற்கான முக்கியமான சாதனமாக விளங்கி வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போல் விமான நிலையங்களும் வரும் பரபரப்பாக மாறி வருகின்றன.

இந்தியாவில் எந்த விமான நிலையங்கள், மிகவும் பிஸியாக உள்ளது என எப்போதாவது நினைத்தது உண்டா?

உங்கள் நகரத்தில் உள்ள விமான நிலையம், எவ்வளவு பிஸியானது என்று உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் மிகவும் பிஸியான விமான நிலையங்கள் குறித்த பட்டியல் இதோ உங்களுக்காக வழங்கபடுகிறது.

குறிப்பு; இந்த தரவுகள் அனைத்தும் கடந்த நிதி ஆண்டின் அடிப்படையில் வெளியான தகவல்கள் ஆகும்.

10. பூனே சர்வதேச விமான நிலையம்;

10. பூனே சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில் பூனே சர்வதேச விமான நிலையம் 10-வது இடத்தில் உள்ளது. இந்த பூனே சர்வதேச விமான நிலையம் மூலமாக மொத்தம் 41.9 லட்சம் பயணியர்கள் பயணித்துள்ளனர்.

41.9 லட்சம் பயணியர்கள் என்ற இந்த மொத்த எண்ணிக்கையில், 40.67 பயணியர்கள் இந்தியாவிற்குள்ளேயே பயணித்த உள்நாட்டு பயணியர்கள் ஆவர். 1.22 லட்சம் பேர், சர்வதேச பயணியர்கள் ஆவர்.

10. பூனே சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

10. பூனே சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

பூனே சர்வதேச விமான நிலையம், 1939-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து, 592 மீட்டர் உயரத்தில் உள்ளது.

9. கோவா சர்வதேச விமான நிலையம்;

9. கோவா சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், கோவா சர்வதேச விமான நிலையம் 9-வது இடத்தில் உள்ளது.

சர்வதேச பயணியர்களுக்கு கோவா மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்குகிறது.அப்படி இருந்தும், கோவா சர்வதேச விமான நிலையம் மூலமாக, 6.13 லட்சம் சர்வதேச பயணியர்கள் மட்டுமே பயணித்துள்ளனர். மேலும், 39 லட்சம் உள்நாட்டு பயணியர்கள் ஆவர். ஆகவே, மொத்த பயணியர்களின் எண்ணிக்கை 45.1 லட்சம் என்ற அளவில் உள்ளது.

9. கோவா சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

9. கோவா சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

கோவா சர்வதேச விமான நிலையம், 1955-ஆம் ஆண்டில் நிறுவபட்டது. இது கடல் மட்டத்திலிருந்து, 56 மீட்டர் உயரத்தில் உள்ளது.

8. அஹ்மதாபாத் சர்வதேச விமான நிலையம்;

8. அஹ்மதாபாத் சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவில் மிக பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், அஹ்மதாபாத் சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. இந்த விமான நிலையம் மூலம், 50.5 லட்சம் பயணியர்கள் பயணித்துள்ளனர்.

அஹ்மதாபாத் சர்வதேச விமான நிலையம் மூலமாக, 12.16 லட்சம் சர்வதேச பயணியர்களும், 38.34 லட்சம் உள்நாட்டு பயணியர்களும் பயணித்துள்ளனர்.

Picture credit: Hardik jadeja/Wiki Commons

8. அஹ்மதாபாத் சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

8. அஹ்மதாபாத் சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

அஹ்மதாபாத் சர்வதேச விமான நிலையம், சர்தார் வல்லப்பாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் என்றும் பெயரிடபட்டுள்ளது. சர்தார் வல்லப்பாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் 1937-ஆம் ஆண்டில் நிறுவபட்டது. இங்கு சர்வதேச விமானங்களின் இயக்கம் 1992-ஆம் ஆண்டில் தான் துவங்கபட்டது.

இது கடல் மட்டத்திலிருந்து, 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Picture credit: Ahmedabad Life

7. கொச்சி சர்வதேச விமான நிலையம்;

7. கொச்சி சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், கொச்சி சர்வதேச விமான நிலையம் 7-வது இடத்தில் உள்ளது. காட்ஸ் ஓன் கண்ட்ரி என அழைக்கபடும் கேரளாவில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் மட்டும் தான், உள்நாட்டு பயணிகளை காட்டிலும், சர்வதேச பயணியர்கள் அதிகமாக பயணித்துள்ளனர்.

கடந்த ஆண்டில், கொச்சி சர்வதேச விமான நிலையம் மூலமாக, 37.51 லட்சம் சர்வதேச பயணியர்களும், 26.62 உள்நாட்டு பயணியர்களும் பயணித்துள்ளனர். இப்படியாக, இந்த விமான நிலையம் மூலம் பயணித்த மொத்த பயணியர்களின் எண்ணிக்கை 64.14 பயணியர்கள் என்ற அளவில் உள்ளது.

7. கொச்சி சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

7. கொச்சி சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

கொச்சி சர்வதேச விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து, வெரும் 9 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

6. ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம்;

6. ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம்;

மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில், இந்த விமான நிலையம் மூலமாக, மொத்தம் 1.04 கோடி பயணியர்கள் பயணித்துள்ளர்.

இதில் 27.98 சர்வதேச பயணியர்களும், 76.05 உள்நாட்டு பயணியர்களும் அடங்குவர்.

6. ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

6. ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கபடுகிறது.

இந்த ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், கமர்ஷியல் விமானங்களின் இயக்கம், 2008-ஆம் ஆண்டில் தான் துவங்கியது.

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து, 617 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

5. கொல்கத்தா சர்வதேச விமான நிலையம்;

5. கொல்கத்தா சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் 5-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில், இந்த விமான நிலையம் மூலமாக, 19.26 லட்சம் சர்வதேச பயணியர்களும், 89.9 லட்சம் உள்நாட்டு பயணியர்களும் பயணித்துள்ளனர்.

ஆகமொத்தம், இந்த விமான நிலையம் மூலமாக, 1.09 பயணியர்கள் பயணித்துள்ளனர்.

5. கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

5. கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் முன்னதாக, டம் டம் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்று அழைக்கபட்டது. பெயர் மாற்றம் செய்யபட்டபின் தற்போது, இது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கபடுகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து, வெரும் 5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

4. சென்னை சர்வதேச விமான நிலையம்;

4. சென்னை சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவில் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், நமது சென்னை சர்வதேச விமான நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இது தென் இந்திய அளவில் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

கடந்த ஆண்டு, சென்னை சர்வதேச விமான நிலையம் மூலமாக 47.07 லட்சம் சர்வதேச பயணியர்களும், 95.92 லட்சம் உள்நாட்டு பயணியர்களும் பயணித்துள்ளனர்.

மொத்தமாக, சென்னை சர்வதேச விமான நிலையம் மூலமாக பயணித்த பயணியர்களின் எண்ணிக்கை, 1.42 கோடி பேர் என்ற அளவில் உள்ளது.

5. சென்னை சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

5. சென்னை சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

சென்னை சர்வதேச விமான நிலையம், அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அல்லது அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கபடுகிறது.

அண்ணா பன்னாட்டு விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து, வெரும் 16 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

3) பெங்களூரு சர்வதேச விமான நிலையம்;

3) பெங்களூரு சர்வதேச விமான நிலையம்;

இந்திய அளவில் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 3-வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் மூலம், 29.32 லட்சம் சர்வதேச பயணியர்களும், 1.24 கோடி உள்நாட்டு பயணியர்களும் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு, இந்த விமான நிலையம் மூலமாக மொத்தம் 1.54 கோடி பயணியர்கள் பயணித்துள்ளனர்.

3) பெங்களூரு சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

3) பெங்களூரு சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

பெங்களூரு சர்வதேச விமான நிலையம், முறைப்படி கெம்பகௌடா இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்றும் அழைக்கபடுகிறது. கெம்பகௌடா இண்டர்நேஷனல் ஏர்போர்ட் கடல் மட்டத்திலிருந்து, 915 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

2. மும்பை சர்வதேச விமான நிலையம்;

2. மும்பை சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவில் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், மும்பை சர்வதேச விமான நிலையம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த விமான நிலையம் மூலமாக, 1.14 கோடி சர்வதேச பயணியர்களும், 2.52 கோடி உள்நாட்டு பயணியர்களும் பயணித்துள்ளனர்.

இந்த விமான நிலையம் மூலம், கடந்த ஆண்டு பயணித்த மொத்த பயணியர்களின் எண்ணிக்கை 3.66 கோடியாக உள்ளது.

2. மும்பை சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

2. மும்பை சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

மும்பை சர்வதேச விமான நிலையம், முன்னதாக சஹர் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்று அழைக்கபட்டது. தற்போது, இது சத்ரபதி சிவாஜி இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்ற பெயர் கொண்டும் அழைக்கபடுகிறது.

இது, கடல் மட்டத்திலிருந்து, வெரும் 11 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஒரு நாளில், இந்த சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 780 விமானங்களின் போக்குவரத்து நிகழ்கிறது.

1. டெல்லி சர்வதேச விமான நிலையம்;

1. டெல்லி சர்வதேச விமான நிலையம்;

இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில், டெல்லி சர்வதேச விமான நிலையம் தான் 1-வது இடத்தை பெற்றுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையம் மூலம், 1.35 கோடி சர்வதேச பயணியர்களும், 2.74 கோடி உள்நாட்டு பயணியர்களும் பயணித்துள்ளனர். ஆகமொத்தம், இந்த விமான நிலையம் மூலமாக கடந்த ஆண்டில், மொத்தம் 4.09 கோடி பயணியர்கள் பயணித்துள்ளனர்.

1. டெல்லி சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

1. டெல்லி சர்வதேச விமான நிலையம் - இதர தகவல்கள்;

டெல்லி சர்வதேச விமான நிலையம், இந்திராகாந்தி இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்றும் அழைக்கபடுகிறது.

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து, 237 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

கடந்து 2015-ஆம் ஆண்டு தான், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மத்திய ஆசியா / இந்தியாவின் சிறந்த விமான நிலையம் மற்றும் மத்திய ஆசியா / இந்தியாவின் சிறந்த விமான நிலைய பணியாளர்கள் கொண்ட விமான நிலையம் என்று 2 பதக்கங்களை பெற்றது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு புதிய ஜம்போ விமானம்!!

உலகின் மிகப் பெரிய விமான 'கல்லறைத் தோட்டம்"!

விமானம் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Airports are emerging as one of the most important modes of Transport in modern World. List of the Top 10 busiest Airports are released recently. The complete details of the Top 10 Busiest Airports are presented to you. Chennai International Airport has grabbed the 4-th Spot in this prestigious list of Top 10 Busiest International Airports.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark