இந்தியர்களின் விருப்பமான டாப் 10 கார் பிராண்டுகள்!

Written By:

கார் மார்க்கெட்டில் எத்துனை பிராண்டுகள் இருந்தாலும், அதில் ஒரு சில பிராண்டுகள் வாடிக்கையாளர்களின் விருப்பமானதாகவும், ஈர்ப்பானதாகவும் இருந்து வருகின்றன.

சந்தைப் போட்டிகளை எல்லாம் தாண்டி இந்த கார் பிராண்டுகள் மீது பொதுவான ஆர்வம் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களிடம் காணப்படுகிறது.

அதாவது, மாருதி கார் வைத்திருந்தாலும், அவருக்கு வேறு ஒரு கார் பிராண்டின் மீது ஈர்ப்பு அதிகம் இருக்கும். அந்த வகையில், நம் நாட்டவர்களை கவர்ந்திழுத்த டாப் 10 கார் பிராண்டுகளை ஸ்லைடரில் காணலாம்.

10. ஸ்கோடா

10. ஸ்கோடா

என்னிடம் மாருதி கார்தான் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு கூட இந்த பிராண்டு மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். அலுவலக ரீதியில் பெரும் பொறுப்பில் உள்ளவர்களுக்கான பிராண்டாக இது மதிக்கப்படுகிறது. விரும்பப்படுகிறது. பில்டு குவாலிட்டி எனப்படும் கட்டுமானத் தரத்தில் சிறந்த கார்களை ஸ்கோடா வழங்குவதும் குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயம்.

 09. மாருதி சுஸுகி

09. மாருதி சுஸுகி

இந்த பட்டியலில் 9வது இடத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இருக்கிறது. பட்ஜெட் விலையில் கார் வாங்குவோர்க்கு நம்பிக்கையான பிராண்டு. மேலும், முதல் கார் வாங்குவோர்க்கு விற்பனைக்கு பிந்தைய சேவையில் நிம்மதியான அனுபவத்தை வழங்குவதும் இந்த நிறுவனத்தின் மீது அதிக ஈடுபாடு காணப்படுகிறது. அவற்றைவிட ஓரளவு நல்ல ரீசேல் மதிப்பும் மாருதி கார்களுக்கு இருப்பதும் காரணம்.

 08. ஆடி

08. ஆடி

இந்த பட்டியலில் 8வது இடத்தில் ஆடி சொகுசு கார் நிறுவனம் இருக்கிறது. சினிமாக்காரர்கள் மட்டுமின்றி, சமானிய வாடிக்கையாளர்களுக்கும் இது கனவு பிராண்டாக இருப்பதற்கு காரணம் ஆடி பிராண்டு கார்களின் டிசைன். எனவே, ஆடிக்கு ஒரு தனிமதிப்பு காணப்படுகிறது.

07. லேண்ட்ரோவர்

07. லேண்ட்ரோவர்

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான லேண்ட்ரோவர் தயாரிப்புகள் மீது இந்தியர்களுக்கு அதிக ஈடுபாடு உண்டு. சொகுசையும், அதி செயல்திறன் மிக்க எஞ்சின், மிரட்டலான தோற்றம், பாதுகாப்பான ஆஃப்ரோடு சாகசங்களுக்கு உகந்த தயாரிப்புகளை வெளியிடுவதால் லேண்ட்ரோவர் மீது நம்மவர்களுக்கு ஈர்ப்பும், விருப்பமும் அதிகம் காணப்படுகிறது.

 06. ஹூண்டாய் மோட்டார்ஸ்

06. ஹூண்டாய் மோட்டார்ஸ்

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இருக்கிறது. பட்ஜெட் விலையில் தரமான தயாரிப்புகளையும், மிகச் சிறந்த டிசைனிலான மாடல்களையும் தந்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

05. ஜாகுவார்

05. ஜாகுவார்

இதுவும் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த கார் நிறுவனம். சொகுசு கார் வாங்குவோரின் கனவு பிராண்டாகவும், சமூகத்தில் அந்தஸ்தை வழங்கும் மதிப்புமிக்க பிராண்டாகவும் போற்றப்படுகிறது.

04. டொயோட்டா

04. டொயோட்டா

குவாலிஸ் மூலம் நம்பகத்தன்மையையும், நீடித்த உழைப்பையும் காட்டி அசர வைத்த டொயோட்டா இன்றுவரை மார்க்கெட்டில் ஓர் தனி மதிப்பை தக்க வைத்து வருகிறது. பட்ஜெட் மார்க்கெட் மற்றும் சொகுசு கார் மார்க்கெட்டிற்கு இடையிலான செக்மென்ட்டில் டொயோட்டா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், வசதிகள், இடவசதி, சிறந்த எஞ்சின் ஆகியவை இந்த பிராண்டு மீது ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.

03. ஹோண்டா

03. ஹோண்டா

இந்த பட்டியலில் ஹோண்டாவுக்கு மூன்றாவது இடம். அதாவது, சிறந்த எஞ்சின் என்றால் அது ஹோண்டாதான் என்று கூறுமளுக்கு மக்களிடத்தும், வாடிக்கையாளர்களிடத்தும் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் பற்றி சிலாகித்து கூறாதவர்களே இருக்க முடியாது.

02. பிஎம்டபிள்யூ

02. பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ பிராண்டுக்கு இந்தியர்கள் மத்தியில் எப்போதுமே தனி இடம் உண்டு. அதாவது, பட்ஜெட் கார் வாங்கும் பலருக்கு பிஎம்டபிள்யூ என்பதுதான் அடுத்த கனவு காராக இருக்கின்றது. ஜெர்மனியின் சொகுசு கார் நிறுவனங்களில் அதிக ஈர்ப்பை கொண்டிருக்கும் மாடல்களில் இதுவும் ஒன்று.

01. மெர்சிடிஸ் பென்ஸ்

01. மெர்சிடிஸ் பென்ஸ்

பென்ஸ் கார்... நம் நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பிராண்டு. நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருப்பதும் இந்த பிராண்டு மீது அதிக ஈர்ப்பு இருந்து வருகிறது. இப்போது சொகுசு மார்க்கெட்டில் மிக குறைவான விலையில் கார் மாடல்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருவதும் பலரின் சொகுசு கார் கனவை நிறைவேற்றுவதாக இருக்கிறது.

 
English summary
Let's take a look at the top 10 most exciting four-wheeler brands in India
Story first published: Monday, May 18, 2015, 17:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark