உலகின் காஸ்ட்லியான டாப்- 10 தனி நபர் பயன்பாட்டு விமானங்கள்!

இரண்டாம் உலகப் போருக்கு பின் விமான பயன்பாடு உலக அளவில் வெகுவாக அதிகரித்தது. பொதுமக்களும் எளிதாக விமான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன. இதன் எதிரொலியால் ஆண்டுக்கு ஆண்டு விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன. மறுபக்கம் பெரும் பணக்காரர்கள் குட்டி விமானங்களை சொந்தமாக வாங்கி பயன்படுத்துவதற்கும் ஆர்வம் காட்டினர்.

இன்று உலக அளவில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் சொந்த விமானங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்களுக்கு தகுந்தவாறு விமானங்களை சகல வசதிகளுடன் தயாரித்து கொடுப்பதற்கு பல விமான நிறுவனங்கள் களத்தில் காத்திருக்கின்றன. அந்த வகையில் இன்று உலகின் மிகவும் காஸ்ட்லியான தனிநபர் விமானங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்,

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விலையின் அடிப்படையில் உலகின் விலையுயர்ந்த தனிநபர் பயன்பாட்டு விமானங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 10. டஸ்ஸால்ட் ஃபால்கன்- 900 எல்எக்ஸ்

10. டஸ்ஸால்ட் ஃபால்கன்- 900 எல்எக்ஸ்

உலக பெரும் பணக்காரர்களில் பட்டியலில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரரான செர்ஜியோ மான்டிகஸா உள்ளிட்டவர்களிடம் டஸ்ஸால்ட் ஃபால்கன் - 900 எல்எக்ஸ் விமானம் உள்ளது. இந்த விமானம் 33 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொண்டது. தயாரிப்பாளரின் தகவலின்படி, இந்த விமானம் 4,750 நாட்டிக்கல் மைல் தூரம் இடைநில்லாமல் செல்லும் திறன் கொண்டது. மேலும், பிற விமானங்களை காட்டிலும் 50 சதவீதம் வரை குறைவான எரிபொருள் செலவீனம் கொண்ட மாடல் என்பதால் கார்பன் புகை வெளியிடும் மிக குறைவானதாக குறிப்பிடப்படுகிறது. மணிக்கு 950 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. படுக்கை வசதி, சொகுசான இருக்கைகள், நவீன தொடர்பு சாதனங்கள், அலுவல் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சகல வசதிகளுடன் இதன் கேபின் அலங்கரித்து கொடுக்கப்படுகிறது.

Photo Credit: Dassault Falcon Jet Corp.

9. எம்பரயர் இஎம்பி 190பிஜே லீனியேஜ் 1000

9. எம்பரயர் இஎம்பி 190பிஜே லீனியேஜ் 1000

மெக்சிகோ வர்த்தகரான ஜார்ஜ் வர்கரா உள்ளிட்ட பல பெரும் பணக்காரர்களிடம் இருக்கும் இந்த விமானம் பிரேசில் நாட்டு தயாரிப்பு. தனிநபர் பயன்பாட்டு மாடலில் கூடுதல் எரிபொருள் தொட்டி கொண்டதாக கட்டமைக்கப்படுகிறது. குறுக்குவாட்டிலும் கூடுதல் அகலம் கொண்டதால், கேபின் மிக தாரள இடவசதி கொண்டது. இதன் கேபினை படுக்கை அறை, குளியலறை, சரக்கு பகுதிக்கு நேரடியாக செல்லும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சங்கள். இந்த விமானம் இடைநில்லாமல் 8,149 கிமீ தூரம் பறக்கும். 40.95 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொண்டது.

Photo Credit: Noel Jones/Flickr

8. டஸ்ஸால்ட் ஃபால்கன் 7எக்ஸ்

8. டஸ்ஸால்ட் ஃபால்கன் 7எக்ஸ்

இந்த விமானம் 41 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொண்டது. மூன்று எஞ்சின் கொண்ட இந்த விமானம் மிக அதிக உயரத்திலும், வெப்பமான சீதோஷ்ண நிலையிலும் கூட சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். ஓடுதளத்தில் 2,070 அடி தூரத்திற்குள் நிறுத்திவிட முடியும். மணிக்கு 953 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த விமானத்தில் 8 பயணிகள் செல்ல முடியும். 11,000 கிமீ வரை இடைநில்லாமல் செல்லும்.

Photo Credit: Dassault Falcon Jet Corp

7. பம்பார்டியர் பிடி700 குளோபல் எக்ஸ்பிரஸ்

7. பம்பார்டியர் பிடி700 குளோபல் எக்ஸ்பிரஸ்

பம்பார்டியர் பிடி700 பயணிகள் விமானத்தின் அடிப்படையில் குளோபல் எக்ஸ்பிரஸ் தனிநபர் பயன்பாட்டு விமானம் கட்டமைத்து கொடுக்கப்படுகிறது. நியூயார்க்- டோக்கியோ இடையே இடைநில்லாமல் செல்லும் வல்லமை கொண்டது. இந்த விமானத்தில் 18 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் செல்லலாம். இந்த விமானத்தில் அலுவலக பயன்பாட்டு அறை, கூட்ட அரங்கம், சாப்பாட்டுக் கூடம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்டது. இதில், நிறுவனங்களின் ஆர்டரின் பேரில் 30 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 935 கிமீ வேகத்தில் பறக்கும். 11,390 கிமீ வரை இடைநில்லாமல் பறக்கும்.

Photo Credit:Bombardier

6. போயிங் பிசினஸ் ஜெட்

6. போயிங் பிசினஸ் ஜெட்

போயிங் பிசினஸ் ஜெட் வரிசையில் பல தனிநபர் பயன்பாட்டு விமான மாடல்களை போயிங் விற்பனை செய்கிறது. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடமும் உள்ளது. இந்த விமானம் 25 இருக்கைகள் முதல் 50 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில் சிறப்பு வசதிகளுடன் கட்டமைத்துக் கொடுக்கப்படுகிறது. சொகுசு படுக்கையறை, வாஷ் ரூம், கூட்ட அரங்கம், சாப்பாட்டு அறை போன்ற வசதிகள் கொடுக்கப்படுகிறது. நீண்ட தூர பயணங்களின்போது கூடுதல் எரிபொருள் நிரப்பும் வசதியையும் செய்துகொள்ள சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 890 கிமீ வேகத்தில் செல்லும். 8 பயணிகள் கொண்ட மாடல் 11,480 கிமீ வரையிலும், 25 பேர் செல்லும்போது 10,205 கிமீ தூரத்திற்கும் இடைநில்லாமல் செல்லும்.

Photo Credit: Boeing

5. கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-550

5. கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி-550

இந்திய வம்சாவளி தொழிலதிபரான லட்சுமி மிட்டல் உள்பட பல பெரும் பணக்காரர்களிடம் இருக்கும் இந்த கல்ஃப் ஸ்ட்ரீம் ஜி550 விமானமும் விலையுயர்ந்த மாடல். இந் விமானம் 59.9 மில்லியன் அமெரிக்க டாலர் விலை மதிப்பு கொண்டது. சேவைக்கு வந்து இரு வாரங்களில் தென்கொரியாவின் சியோல் நகரிலிருந்து, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு இடையிலான 13,521 கிமீ தூரத்தை 14.5 மணிநேரத்தில் இடைநில்லாமல் பறந்து சாதனை படைத்தது. இந்த விமானத்தில் 18 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தின் வைன்ட்ஷீல்டில் ஹெட் அப் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருப்பதால், மோசமான வானிலையிலும் பாதுகாப்பாக தரையிறக்க முடியும். இந்த விமானமும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கட்டமைத்து தரப்படுகிறது.

Photo Credit: Gulfstream Aerospace Corp.

4. ஏர்பஸ் ஏ319 கார்ப்பரேட் ஜெட்

4. ஏர்பஸ் ஏ319 கார்ப்பரேட் ஜெட்

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா உள்பட பல்வேறு தொழிலதிபர்களிடம் இருக்கும் இந்த விமானம் 80.7 மில்லியன் அமெரிக்க டாலர் விலை மதிப்பு கொண்டது. ஏர்பஸ் ஏ320 மாடலை அடிப்படையில் சற்று குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட மாடல் இது. காக்பிட் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள் அனைத்தும் ஒன்றே. இந்த விமானத்தில் 10 முதல் 39 பேர் வரை செல்லும் மாடல்களில் கிடைக்கிறது. 10 பயணிகளுடன் செல்லும்போது 11,650 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்லும்.

Photo Credit: Kuba Bozanowski/Flickr

3. போயிங் 767

3. போயிங் 767

கூகுள் நிறுவனர் லாரி பேஜ் உள்ளிட்ட பல பெரும் பணக்காரர்களிடம் இந்த விமானம் இருக்கிறது. இது 118 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது. 200 முதல் 300 இருக்கைகள் கொண்ட மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் இந்த மாடலை வாடிக்கையாளர் விருப்பம்போல் கற்பனைக்கும் எட்டாத வசதிகளுடன் போயிங் வடிவமைத்து கொடுக்ககிறது. இந்த விமானம் அதிகபட்ச பயணிகளுடன் 10,343 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்லும்.

Photo Credit: Airbus

2.போயிங் 747-8 விஐபி ஜெட்

2.போயிங் 747-8 விஐபி ஜெட்

நீண்ட தூர பயணங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் விமான மாடலான போயிங் 747 அடிப்படையிலான தனிநபர் பயன்பாட்டு மாடல் இது. மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கும் மாடல். ஆகாய அலுவலகமாக பயன்படுத்தும் அளவிற்கான வசதிகள், பொழுதுபோக்கு, சூட் அறைகளுடன் மிகச் சிறப்பாக கட்டமைத்து கொடுக்கப்படுகிறது. இது 153 மில்லியன் அமெரிக்க டாலர் விலை மதிப்பு கொண்டது. மணிக்கு 917 கிமீ வேகத்தில் பறக்கும். இது 4 எஞ்சின்களை கொண்ட மிக பிரம்மாண்டமான போயிங் படைப்பு.

Photo Credit: Boeing

1. ஏர்பஸ் ஏ380

1. ஏர்பஸ் ஏ380

உலகின் மிக பிரம்மாண்டமான விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தை சவூதியை சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான இளவரசர் அலாவலீத் பின் தலால் வாங்கி வைத்துள்ளார். 300 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொண்ட இந்த விமானம்தான் உலகின் மிக காஸ்ட்லியான மாடலாக கூறலாம். இந்த இரண்டடுக்கு தளம் கொண்ட விமானத்தில் 525 பேர் பயணிக்கலாம். ஆனால், சவூதி இளவரசர் என்னென்ன வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கியுள்ளார் என்பது பரம ரகசியமாக உள்ளது. தற்போது உலகின் மிகப்பெரிய வர்த்தக பயன்பாட்டு விமானமும் இதுதான். இந்த விமானம் நியூயார்க்கிலிருந்து ஹாங்காங் வரை இடைநில்லாமல் பறக்கும். மணிக்கு 900 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது.

Photo Credit: Airbus

 
Most Read Articles

Tamil
English summary
Here is a list of top 10 most expensive private jets in the World. Take a look.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more