கன்வெர்ட்டிபிள், ரோட்ஸ்டெர், கேப்ரியோலெட், ஸ்பைடர்... குழப்பமா?

By Saravana

கன்வெர்ட்டிபிள், ரோட்ஸ்டெர், கேப்ரியோலெட், ஸ்பைடர் என கூரை இல்லாத கார்களை அழைக்கின்றனர். இவை அனைத்திற்கும் இடையில் என்ன வேறுபாடு என்பது குழப்பத்தை தருவதாகவே இருக்கும். பொதுவாக பார்க்கப்போனால், அனைத்தும் ஒரே அர்த்தத்தை கொண்டவையே. ஆம், கூரை இல்லாத அல்லது மடக்கி விரிக்கும் வசதி கொண்ட கூரையுடைய கார்களை மேற்கண்ட சொற்களை கொண்டு அழைக்கின்றனர். சிறிய வித்தியாசங்கள் மூலம் அவை வேறுப்படுத்தப்படுகின்றன.

சாதாரண 4 சீட்டர் கார மாடல்களின் கூரை இல்லாத வெர்ஷனை கன்வெர்ட்டிபிள் அழைக்கின்றனர். கன்வெர்ட்டிபிள் காரை ஜெர்மானியர்கள் கேப்ரியோலெட் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். ரோட்ஸ்டெர், ஸ்பீட்ஸ்டெர் என்பது 2 கதவுகள் கொண்ட கண்ணாடி ஜன்னல் மற்றும் கூரை இல்லாத மாடலாக குறிப்பிடப்படுகிறது. ஸ்பைடர் மாடல்கள் சாஃப்ட் டாப் கொண்ட மாடல்களாக அறியப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் மார்க்கெட்டிங் யுக்திக்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகள்தான். இதில் வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றும் சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

சரி, உலகின் சில பிரபலமான கன்வெர்ட்டிபிள் கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம் வாருங்கள்.

பட்டியல்

பட்டியல்

இந்தியாவில் கன்வெர்ட்டிபிள் மாடல்கள் அந்தளவு பிரபலமடையவில்லை. நம் நாட்டு சீதோஷ்ண நிலையும், விலையும் அதற்கு இடம்கொடுக்கவில்லை என கூறலாம். இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளில் பிரபலமான 10 கன்வெர்ட்டிபிள் கார் மாடல்களை காணலாம்.

 10. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கேப்ரியோலெட்

10. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கேப்ரியோலெட்

மேற்கத்திய நாடுகளில் பிரபலமான கன்வெர்ட்டிபிள் மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரும் ஒன்று. மிக ஸ்டைலான இந்த மாடல் 22,000 பவுண்ட் விலை முதல் கிடைக்கிறது. மிக ஸ்டைலான 4 சீட்டர் கேப்ரியோலெட் மாடலான இதில் 122 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

9 லோட்டஸ் எலிஸ்

9 லோட்டஸ் எலிஸ்

உலகின் சிறந்த கையாளுமை கொண்ட கார் மாடல்களில் முதன்மையானதாக இந்த ரோட்ஸ்டெர் மாடல் குறிப்பிடப்படுகிறது. 2 சீட்டர் கார் மாடலான லோட்டஸ் எலிஸ் கார் 1.6 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கிறது. மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 35,000 பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

8.ஆடி டிடி

8.ஆடி டிடி

ஆடி டிடி ரோட்ஸ்டெர் மாடலை ஆடி கார் நிறுவனத்தின் கலிஃபோர்னியா டிசைன் சென்டர் வடிவமைத்தது. 1995ம் ஆண்டு பிராஃங்க்பர்ட் மோட்டார் ஷோவில் முதல்முறையாக தரிசனம் தந்தது. இதன் வித்தியாசமான டிசைன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட உலகின் முதல் வலது பக்க டிரைவிங் கொண்ட கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 28,000 பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் ஹார்டு டாப் கொண்ட கூபே மாடல் கிடைக்கிறது.

7. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

7. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல் மிக ஸ்டைலான மாடல். இதன் ஹார்டு டாப் கூரை 23 வினாடிகளில் மூடி திறக்கும். இந்த காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். 35,765 பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6. ஃபெராரி கலிஃபோர்னியா

6. ஃபெராரி கலிஃபோர்னியா

ஃபெராரி கலிஃபோர்னியா ஸ்பைடர் மாடலில் 453 பிஎச்பி பவரை அளிக்கும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆற்றல் வாய்ந்த இந்த கார் மடல் 1.20 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 5.மஸ்தா எம்எக்ஸ் -5

5.மஸ்தா எம்எக்ஸ் -5

இரண்டு சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார்களில் மிக அதிக எண்ணிக்கையிலான விற்பனையை பதிவு செய்த மாடல். 124 பிஎச்பி பவரை அளிக்கும் 1.8 லிட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ரோட்ஸ்டெர் மாடல் 18,495 பவுண்ட் விலையில் கிடைக்கிறது.

4.போர்ஷே 911

4.போர்ஷே 911

போர்ஷே 911 கேப்ரியோலெட் மாடல் பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கு ஏற்றதாக குறிப்பிடப்படுகிறது. இந்த காரில் 400 பிஎச்பி பவரை அளிக்கும் எஞ்சின் கொண்ட இந்த கேப்ரியோலெட் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். மேனுவல் மற்றும் பிடிகே கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 296 கிமீ வேகம் வரை செல்லும். 92,204 பவுண்ட் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

 3. ஜாகுவார் எக்ஸ்கே

3. ஜாகுவார் எக்ஸ்கே

கடந்த ஜூலை மாதத்துடன் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. 2 டோர் கன்வெர்ட்டிபிள் மாடலான இந்த காரில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0 -97 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 254 கிமீ வேகம் வரை செல்லும் வல்மலை கொண்டது. இதற்கு மாற்றாக புதிய மாடல் இல்லாமலேயே இந்த காரின் உற்பத்தியை ஜாகுவார் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. 50,410 பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

2. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்

2. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்

1954ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இந்த கார் மிக அழகான கார் மாடலாக வரவேற்பை பெற்றுள்ளது. முற்றிலும் அலுமினியம் கட்டமைப்புக்கு மாற்றப்பட்டிருக்கும் இந்த புதிய மாடலில் 306 பிஎஸ் பவரை அளிக்கும் 3.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் ஏஎம்ஜி வெர்ஷனிலும் கிடைக்கிறது. மிகச்சிறப்பான கையாளுமை கொண்டதாக கூறப்படும் இந்த கார் 72,500 பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1.அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ்

1.அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ்

ஸ்டைல், செயல்திறன் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல் இது. இந்த காரில் 430 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 4.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்ப்டிரக்கிறது. 0 -100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 305 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. 1.31 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Here is the list of Top 10 most Popular Convertible Cars In The World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X