இளசுகளை இருக்கையில் கட்டிப் போட்ட டாப்- 10 ரேஸிங் வீடியோ கேம்ஸ்!

Posted By:

ஓடியாடி விளையாடிய சிறுவர்களை ஓரிடத்தில் கட்டிப் போட்ட பெருமை வீடியோ கேம்களையே சாரும். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக இருந்த வீடியோ கேம்கள் காலப் போக்கில் பல இளைஞர்களுக்கு முழு நேர தொழிலாகிப் போனது.

குறிப்பாக, இந்த வீடியோ கேம்களில் கார் மற்றும் பைக் ரேஸிங்கை வைத்து வெளியிடப்பட்ட வீடியோ கேம்கள் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களையும் கட்டி இழுத்தன. நேரடியாக கார், பைக் ரேஸில் பங்கு கொள்ள முடியாதவர்களுக்கு இந்த ரேஸிங் வீடியோ கேம்கள் மிகப்பெரிய உற்சாகத்தையும் அளித்தன.

80க்கு பிறகு பிறந்த தலைமுறையினரை வெகுவாக ஆட்கொண்டு விட்ட இந்த வீடியோ விளையாட்டுக்கென தற்போது தனி இடங்கள் கட்டணத்துடன் செயல்படும் அளவுக்கு பெரிய துறையாகவே மாறிவிட்டது. இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த 10 ரேஸிங் கேம்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி

இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் 3டி, 4 டி என வீடியோ கேம்களின் பரிணாமம் வெகுவேகமாக வளர்ச்சி பெற்றாலும், மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த இந்த ரேஸிங் வீடியோ கேம்களை அடுத்தடுத்த ஸ்லைடரில் காணலாம்.

1. என்டூரோ

1. என்டூரோ

கேம் டிசைனர்: லாரி மில்லர்

வெளியீட்டாளர்: ஆக்டிவிஷன்

பிளாட்ஃபார்ம்: அட்டாரி

வெளியீடு: 1983ம் ஆண்டு

என்டூரோ வீடியோ கேம்

என்டூரோ வீடியோ கேம்

ரேஸ் டிராக்கில் மட்டுமே ஓடக்கூடிய ஃபார்முலா- 1 காரை ஆஃப்ரோடு டிராக்கில் எளிமையாக ஓட்டிப் பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த வீடியோ கேம் 80 தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

2. ரோடு ராஷ்

2. ரோடு ராஷ்

வெளியீட்டாளர்: எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்

பிளாட்ஃபார்ம்: செகா மேகா டிரைவ்

வெளியீடு: 1991

ரோட் ராஷ்

ரோட் ராஷ்

சட்டவிரோதமாக சாலையில் பைக் ரேஸ் நடத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த பைக் வீடியோ விளையாட்டும் இளசுகளிடம் வெகுவாக ஈர்த்த ஒன்று. தனது போட்டியாளரை வன்முறை செயல்கள் மூலம் போட்டியிலிருந்து வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால், இளைஞர்களை ஈர்த்தது.

3. F1/Formula 1

3. F1/Formula 1

வெளியீட்டாளர்: டாமார்க்

பிளாட்ஃபார்ம்: செகா ஜெனிஸிஸ்/மெகா டிரைவ்/செகா கேம் கியர்

வெளியீடு: 1993

 F1/Formula 1

F1/Formula 1

ரேஸ் கார்களில் காக்பிட் எனப்படும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ஓட்டுவது போன்ற அனுபவத்தை தரும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ கேம் புதிய அனுபவத்தை விளையாடுபவருக்கு கொடுத்தது. உலகின் பிரபல கிரான்ட் ப்ரீ சர்க்யூட்களில் விளையாடுவது போன்ற அனுபவமும் கூடுதல் சுவையை சேர்த்தது.

4. Need For Speed 2 - Special Edition

4. Need For Speed 2 - Special Edition

வெளியீட்டாளர்: எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்

பிளாட்ஃபார்ம்: பிசி

வெளியீடு: 1997

Need For Speed 2 Special Edition

Need For Speed 2 Special Edition

இந்த வீடியோ கேமில் மெக்லாரன் எஃப்1, ஃபெராரி எஃப்50 போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களை வைத்து விளையாடும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் விரும்பும் தனது கனவு பிராண்டின் ஸ்போர்ட்ஸ் கார்களை வைத்து ரேஸ் ஆடுவது பெரும் உற்சாகத்தை தந்தது.

5. கிரான் டூரிஷ்மோ

5. கிரான் டூரிஷ்மோ

வடிவமைப்பாளர்: கசுனோரி யமயுச்சி

வெளியீட்டாளர்: சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட்

பிளாட்ஃபார்ம்: ப்ளேஸ்டேஷன்

வெளியீடு: 1997

கிரான் டூரிஷ்மோ

கிரான் டூரிஷ்மோ

கிரான் டூரிஷ்மோ அல்லது ஜிடி என்று அழைக்கப்படும் இந்த வீடியோ கேம் விளையாடுபவருக்கு நேரடியாக ரேஸ் செய்வது போன்ற உணர்வை வழங்கியதால் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வீடியோ கேமில் 140 கார் மாடல்கள் மற்றும் 11 ரேஸ் டிராக்குகளில் ஆடக்கூடிய வாய்ப்பை கொடுத்தது.மேலும், ப்ளேஸ்டேஷன் வரிசையில் புதிய வீடியோ கேம்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

6.காலின் மெக்ரே ராலி

6.காலின் மெக்ரே ராலி

வெளியீட்டாளர்: கோட்மாஸ்டர்ஸ்

பிளாட்ஃபார்ம்: பிசி/ப்ளேஸ்டேஷன்/நின்டென்டோ கேம் பாய் கலர்

வெளியீடு: 1998

 6.காலின் மெக்ரே ராலி

6.காலின் மெக்ரே ராலி

காலின் மெக்ரே ராலி வீடியோ விளையாட்டை விளையாடாத ரேஸிங் கேம் பிரியர்கள் இருக்கவே முடியாது எனும் அளவுக்கு பிரபலமானது. சவால்கள் நிறைந்த மூன்றுவிதமான கட்டங்களாக ஆடக்கூடிய ரேஸ் வீடியோ விளையாட்டு இது. Novice என்ற ஆப்ஷனில் சீட் இபிஸா போன்ற Forward drive கார்களையும், Intermediate ஆப்ஷனில் சுபாரு இம்பெரஸா போன்ற 4 வீல் டிரைவ் ராலி கார்களையும், Expert ஆப்ஷனில் ஆிட குவாட்ரோ எஸ்1, ஃபோர்டு ஆர்எஸ் 2000 போன்ற கார்களை போனஸாக பெற்று விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

7. Need For Speed Most Wanted

7. Need For Speed Most Wanted

வெளியீட்டாளர்: எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்

பிளாட்ஃபார்ம்; ப்ளேஸ்டேஷன் 2/எக்ஸ்பாக்ஸ்/பிசி

வெளியீடு: 2005

 Need For Speed Most Wanted

Need For Speed Most Wanted

ரேஸ் கார்களில் விருப்பம்போல் மெக்கானிக்கல் மற்றும் தோற்றத்தை மாற்றிக்கொண்டு விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த வீடியோ கேம் லட்சக்கணக்கானோரை ஈர்த்தது.

8. பர்ன்அவுட் பேரடைஸ்

8. பர்ன்அவுட் பேரடைஸ்

வெளியீட்டாளர்: எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ்

பிளாட்ஃபார்ம்: ப்ளேஸ்டேஷன் 3/எக்ஸ்பாக்ஸ் 360/பிசி

வெளியீடு: 2008

பர்ன்அவுட் பேரடைஸ்

பர்ன்அவுட் பேரடைஸ்

ரேஸின்போது படு மோசமாக கார்கள் மோதிக் கொள்வது போன்று வைத்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ கேம் முதல்முதலாக 2001ல் வெளியிடப்பட்டது. ஆனால், 2008ல் ப்ளேஸ்டேஷன் -3க்காக வடிவமைத்து வெளியிடப்பட்ட பர்ன்அவுட் பேரடைஸ் வீடியோ கேம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது.

9. எஃப்1 - 2013

9. எஃப்1 - 2013

வெளியீட்டாளர்: கோட்மாஸ்டர்ஸ்

பிளாட்ஃபார்ம்: ப்ளேஸ்டேஷன் 3/ எக்ஸ்பாக்ஸ் 360/பிசி

வெளியீடு: 2013

F1- 2013

F1- 2013

மோட்டார்ஸ்போர்ட்டின் உச்சமாக கருதப்படும் ஃபார்முலா - 1 ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ கேம் இளைஞர்கள் மத்தியிலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஏனெனில், இந்த வீடியோ கேம் 2013ம் ஆண்டில் ஃபார்முலா 1 சீசனில் இடம்பெற்ற 22 வீரர்கள் மற்றும் 19 ரேஸ் சர்க்யூட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

10. அஸ்பால்ட்

10. அஸ்பால்ட்

வெளியீட்டாளர்: கேம்லாஃப்ட்

பிளாட்ஃபார்ம்: ஐஓஎஸ்/ஆன்ட்ராய்டு/மைக்ரோசாஃப்ட்விண்டோஸ்/ப்ளேஸ்டேஷனஅ போர்ட்டபிள்

வெளியீடு: 2013

அஸ்பால்ட்

அஸ்பால்ட்

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வீடியோ கேம் இது. துல்லியம், வடிவமைப்பு மற்றும் எளிதாக ஆடுவதற்கான வசதிகள் என இளைஞர்களை கட்டிப் போட்ட வீடியோ கேம்களில் இதுவும் ஒன்று.

கடந்த 30 ஆண்டுகளில் பிரபலமான ரேஸ் வீடியோ கேம்கள்

கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான ரேஸிங் வீடியோ கேம்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். இது உங்களது இளமை காலத்தை இங்கே நினைவூட்டியிருக்கலாம். வீடியோ கேம் கன்சோல், சிமுலேட்டர், ஸ்மார்ட்போன் என பல தளங்களின் மூலமாக தொடர்ந்து பல புதிய பரிமாணங்களில் இந்த வீடியோ கேம் விளையாட்டுகள் வேகமாக தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கின்றன. உங்களை கவர்ந்த அல்லது உங்களது வீடியோ கேம் விளையாட்டு அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

  
English summary
In a small tribute to those who've stuck by racing in the virtual world (because after all, how many of us can afford to race in real life), we've put together a list of 10 games that we've played over the years, right from our childhood till today's smartphone age. Some of the titles here will have you reminiscing your glory days, especially if you're part of the 80s generation, so read on.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark