மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

Written By:

இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஹூண்டாய் சான்ட்ரோ கார் புதிய தலைமுறை காராக மறுபிறப்பு எடுக்க இருப்பதாக ஆட்டோமொபைல் சந்தை தகவல்கள் பரபரக்கின்றன. புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வடிவமைப்பு பணிகள் முடிந்து புரோட்டோடைப் மாடலை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை மாடலாக இருந்தாலும், வடிவமைப்பு, வசதிகளில் புதிய சான்ட்ரோ முற்றிலும் புதிய காராக இருக்கும். ஆனாலும், சான்ட்ரோ பிராண்டை ஹூண்டாய் பயன்படுத்துவதற்கு பல காரணங்களை அடுக்கலாம். அந்தளவு அந்த கார் இந்தியர்களுடன் ஒன்றிப் போய்விட்ட ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

உலகின் மிகவும் தனித்துவம் நிறைந்த நகரங்களின் பெயர்களை தனது கார்களுக்கு பெயராக சூட்டும் வழக்கத்தை ஹூண்டாய் பின்பற்றி வருகிறது. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையை ஒட்டி இருக்கும் கேளிக்கை விருந்துகளுக்கு புகழ்பெற்ற செயின்ட் ட்ரோபெஸ் என்ற இடத்தின் பெயரையே இந்த காருக்கு தேர்வு செய்து வைத்தது ஹூண்டாய். அந்த பெயரையே இப்போது விட முடியாமல் புதிய காருக்கு மீண்டும் பயன்படுத்தப்போகிறது ஹூண்டாய்.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

முதல்முறையாக உலகளாவிய விற்பனைக்காக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் ஹூண்டாய் சான்ட்ரோதான். அதன்பின்னரே, உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் அதிகம் ஏற்றுமதியாகும் கார் மாடல் என்ற பெருமையையும் ஹூண்டாய் சான்ட்ரோ பெற்றிருந்தது. இதுவரை 1.9 மில்லியன் சான்ட்ரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதன் வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தவாறான வசதிகள், அம்சங்களுடன் பல நூறு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட மாடல்.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

டால்பாய் டிசைனில் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் கார் மாடல் சான்ட்ரோதான். அதாவது, பயணிகளுக்கு தலை இடிக்காதவாறு அதிக ஹெட்ரூம் இடவசதி கொண்டதாக டிசைன் செய்யப்பட்டது. தலைப்பாகை கட்டிய சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்கள் மத்தியிலும் இந்த டால்பாய் டிசைன் கொண்ட காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைக் கண்ட மாருதி நிருவனம், போட்டியாக வேகன் ஆர் காரை அறிமுகம் செய்தது.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

இதுவும் டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்ட மாடல். ஆனால், அதிக அளவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்யப்பட்டதால், மாருதி வேகன் ஆரின் விலை அதிகமாக இருந்தது. அதேநேரத்தில், ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு உள்ளூர் உதிரிபாகங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் விலை சவாலாக இருந்தது. இதையடுத்து, உள்ளூர் உதிரிபாகங்களை அதிக அளவில் பயன்படுத்தி வேகன் ஆரின் விலையை அதிரடியாக குறைத்தது மாருதி. அதுவரை மாருதிக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய மாடலாக இருந்தது வேகன் ஆர்.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

டீலர்களின் முன்பதிவு செய்வதற்கு தகுந்தவாறு முன்னுரிமை அடிப்படையில் கார்களை அனுப்பும் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் முதல் காரும் ஹூண்டாய் சான்ட்ரோதான். தற்போது இந்த சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் மூலமாகவே அனைத்து தயாரிப்பாளர்களும் கார்களை டீலர்களுக்கு அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

மல்டி பாயிண்ட் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஹேட்ச்பேக் ரக காரும் ஹூண்டாய் சான்ட்ரோ கார்தான். இது மட்டுமல்ல, பின்புறத்தில் டீஃபாகர், முன்புறத்தில் பனி விளக்குகள், பவர் விண்டோஸ், அட்ஜெஸ்ட்டபிள் ஹேட்ரெஸ்ட்டுகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளுடன் வந்த முதல் குட்டி கார் என்ற பெருமையும் சான்ட்ரோ காருக்கு உண்டு. ஏசி, பவர் ஸ்டீயரிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை நிரந்தரமாக பெற்று வந்த முதல் சிறிய காரும் ஹூண்டாய் சான்ட்ரோதான்.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

5 பயணிகளுடன், குறைந்த கியர்களில் இயக்குவதற்கு எளிதான நகர்ப்புற பயன்பாட்டு ரக காராக ஹூண்டாய் சான்ட்ரோ வந்தது. இந்த காரில் இருக்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வழங்கியதால் இந்தியர்கள் பெரிதும் விரும்பும் மாடலாக இருந்தது.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி லாபகரமான பாதையில் திரும்புவதற்கு இரண்டு தசாப்தங்களை எடுத்துக் கொண்டன. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்தை வெறும் 12 மாதங்களில் லாபத்தில் பயணிக்கச் செய்த பெருமை சான்ட்ரோவையே சாரும்.

மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

கடைசியாக, சான்ட்ரோ காரின் முதல் தலைமுறை மாடல் கடைசி தலைமுறை மாடலைப் போன்று அழகான கார் என்று கூற முடியாது. இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் அழகில்லாமல் வெற்றி பெற்ற கார் மாடல்களில் ஹூண்டாய் சான்ட்ரோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 மறக்க முடியாத ஹூண்டாய் சான்ட்ரோ கார் பற்றிய தெரியாத தகவல்கள்!

1997ல் ஹூண்டாய் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் ஆட்டோஸ் என்ற பெயரில் அறிமுகமான கார்தான் இந்தியாவில் ஹூண்டாய் சான்ட்ரோ என்ற நாமகரணத்துடன் வந்தது. 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது ஹூண்டாய் சான்ட்ரோ. 2014ம் ஆண்டு இறுதியில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில்தான் புதிய மாடல் வர இருப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

ஹூண்டாய் கார் நிறுவனம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

English summary
Top 10 unknown facts about Hyundai Santro Car. Read in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark