உலகின் டாப் - 20 அதிவேக சூப்பர் படகுகள்!

By Saravana

சொகுசு வசதிகள் ததும்பும் படகுகள் வேகத்தில் சிறப்பாக இராது. பெரும்பாலான ஆடம்பர படகுகளின் சராசரி வேகம் 20 முதல் 25 நாட்டிக்கல் மைல்களாக இருக்கின்றன.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்பேரில், பல முன்னணி படகு தயாரிப்பு நிறுவனங்கள் அதிவேக ஆடம்பர படகுகளை தயாரித்து விற்பனை செய்கின்றன. சராசரி வேகத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட உலகின் டாப் 20 அதிவேக படகுகளின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


டாப் - 20 பட்டியல்

டாப் - 20 பட்டியல்

உலகின் டாப் 20 அதிவேக ஆடம்பர படகுகளின் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

20.தங்கா -II

20.தங்கா -II

அதிகபட்ச வேகம்: 46 நாட்டிக்கல் மைல்

இத்தாலியை சேர்ந்த ஓவர்மரைன் நிறுவனத்தின் தயாரிப்பான தங்கா - II ஆடம்பர படகு மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த அதிவேக ஆடம்பர படகை ஆன்ட்ரியா பாசிகலுப்போ மற்றும் ஸ்டெஃபானோ ரிகினி ஆகியோர் இணைந்து டிசைன் செய்தனர். 36.2 மீட்டர் நீளம் கொண்ட இந்த படகில் இரண்டு எம்டியூ டீசல் எஞ்சின்களும், லைகம்மிங் நிறுவனத்தின் டர்பைன்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை இணைந்து 7,700 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

19. ஜி. விஷ்

19. ஜி. விஷ்

வேகம்: 46 நாட்டிக்கல் மைல்

ஜி. விஸ் என்று பெயரிடப்பட்டு தற்போது மேரிடோம் என்று அழைக்கப்படும் 54 மீட்டர் நீளம் கொண்ட இந்த சூப்பர் படகு 1989ல் கட்டப்பட்டது. இதனை க்ரீஸ் நாட்டை சேர்ந்த கப்பல் அதிபர் லூகாஸ் ஹாஜி லோயன்னாவ் 1992ல் வாங்கினார். இந்த படகை ஜான் பேனர்பெர்க் என்பவர் வடிவமைத்தார். இந்த படகில் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டை எஞ்சின்கள் இணைந்து 7,000 எச்பி பவரை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 49 நாட்டிக்கல் மைல் வேகம், அதாவது மணிக்கு 90 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

18. ஃபார்ச்சூனா

18. ஃபார்ச்சூனா

வேகம்: 46 நாட்டிக்கல் மைல்

1979ல் கட்டப்பட்ட பால்மர் ஜான்சன் என்பவரால் கட்டப்பட்ட இந்த படகு ஸ்பெயின் நாட்டு அரசர் ஜுவான் கார்லோஸுக்காக தயாரிக்கப்பட்டது. இந்த படகினை டான் ஷெட் என்பவர் வடிவமைத்தார். 30.48 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகு, 1981ல் படகின் நீளம் 4.5 மீட்டர் அதிகரிக்கப்பட்டது. கட்டிங் எட்ஜ் டர்பைன் வாட்டர்ஜெட் புரொப்பல்சன் சிஸ்டம் கொண்டது. 7,800எச்பி பவரை அளிக்கும் எஞ்சின்கள் கொண்ட இந்த படகு மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும்.

17. சுசுர்ரோ

17. சுசுர்ரோ

அதிகபட்ச வேகம்: 46 நாட்டிக்கல் மைல்

டான் ஷெட் மற்றும் டி ஊட் என்ற நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்த அதிவேக படகு மாடல். அலுமினிய பாடி கொண்ட இந்த அதிவேக படகில் பாக்ஸ்மேன் டீசல் எஞ்சின்களும், லைகம்மிங் டர்பைன்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 15,400 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. 49.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகு மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும்.

16.மிராஜ்

16.மிராஜ்

அதிகபட்ச வேகம்: 46 நாட்டிக்கல் மைல்

ஆசியாவை சேர்ந்த ஒருவருக்காக 1991ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த படகு எல் கார்சாரியோ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. 1988ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில் உலகின் அதிவேக படகாக இருந்த ஆக்டோபஸ்ஸி படகுக்கு அடுத்தகா கட்டப்பட்ட படகு இது. இதில், பொருத்தப்பட்டிருக்கும் மூன்று எம்டியூ டீசல் எஞ்சின்கள் இணைந்து 10,440 எச்பி பவரை அளிக்கும். 40.26 மீட்டர் நீளம் கொண்ட இந்த படகு மணிக்கு 48 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும்.

15.ஒன் ஹன்ட்ரடு

15.ஒன் ஹன்ட்ரடு

அதிகபட்ச வேகம்: 50 நாட்டிக்கல் மைல்

பாயாவின் வெற்றிகரமான ஒன் ஹன்ட்ரடு சீரிஸ் மாடல் உலகின் அதிவேக படகு மாடல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. 31 மீட்டர் நீளம் கொண்ட இந்த படகில் மூன்று எம்டியூ டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்சின்கள் அதிகபட்சமாக 7,290 எச்பி பவரை அளிக்கும். மணிக்கு 92 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது.

14. பட்டர்ஃப்ளை

14. பட்டர்ஃப்ளை

அதிகபட்ச வேகம்: 50 நாட்டிக்கல் மைல்

டேனிஷ் யாட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த அதிவேக படகு 380 மீட்டர் நீளம் கொண்டது. 2011ல் சூட்டிங் ஸ்டார் என்ற பெயரில் அறிமுகமான இந்த அதிவேக படகு தற்போது பட்டர்ஃப்ளை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அகலமான கண்ணாடிகள், திறந்து மூடும் கூரை உள்ளிட்ட வசதிகள் கொண்ட அதிவேக படகில் ட்வின் வாட்டர்ஜெட் புரொப்பல்லர்கள் உள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 92 கிமீ வேகம் வரை செல்லும்.

13.அட்லெர்

13.அட்லெர்

அதிகபட்ச வேகம்: 50 நாட்டிக்கல் மைல்

வெக்டர்வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆடம்பர படகு 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2 பாக்ஸ்மேன் எஞ்சின்கள், வாட்டர்ஜெட்டுகளுடன் இணைந்து 10,500 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த படகை கேரி கிராண்ட் டிசைன் செய்தார். 41.45 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகு அதிகபட்சமாக மணிக்கு 92 கிமீ வேகத்தில் செல்லும்.

12. பெர்ஷிங் 115

12. பெர்ஷிங் 115

அதிகபட்ச வேகம்: 52 நாட்டிக்கல் மைல்

பெர்ஷிங் நிறுவனம் 115 வரிசையில் வெளியிட்ட 10 அதிவேக படகுகளும் வெற்றிகரமானவையாக குறிப்பிடப்படுகின்றன. இந்த படகை ஃபுல்வியோ டி சிமோனி என்ற டிசைனர் வடிவமைத்தார். சென்டர் பூஸ்டருடன் இணைக்கப்பட்ட வேரிகோர் டர்பைன்கள் அதிகபட்சமாக 12,500 எச்பி பவரை வெளிப்படுத்தும். 35.07 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகு அதிகபட்சமாக மணிக்கு 96 கிமீ வேகத்தில் செல்லும்.

11 மூன் காடெஸ்

11 மூன் காடெஸ்

அதிகபட்ச வேகம்: 53 நாட்டிக்கல் மைல்

2006ல் டேனிஷ் யாட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 35.05 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆடம்பர படகு கார்பன் ஃபைபர், கெவ்லர், எபாக்ஸி பாகங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த படகில் பொருத்தப்பட்டிருந்த 7,400எச்பி பவரை அளிக்கும் இரண்டு எம்டியூ 4000 சீரிஸ் எஞ்சின்கள் ட்வின் ஹாமில்டன் வாட்டர்ஜெட்டுகளின் உதவியுடன் மணிக்கு 98 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

10.சன் ஆர்க்

10.சன் ஆர்க்

அதிகபட்ச வேகம்: 54 நாட்டிக்கல் மைல்

1995ல் ஹீசென் நிறுவனம் தயாரித்த சன் ஆர்க் என்ற அதிவேக படகும் உலகின் அதிவேக படகுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ஃப்ராங்க் முல்டரால் டிசைன் செய்யப்பட்டது. 36.58 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகின் எஞ்சின் 9,520 எச்பி பவரை அளிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

9.டலோலி

9.டலோலி

அதிகபட்ச வேகம்: 54 நாட்டிக்கல் மைல்

1995ல் ஹீசென் நிறுவனம் தயாரித்த டலோலி படகு புருனே சுல்தானுக்காக வடிவமைத்து கொடுக்கப்பட்டது. இந்த படகையும் பிரபல டிசைனர்ர ஃப்ராங்க் முல்டர்தான் டிசைன் செய்து கொடுத்தவர். 36.58 மீட்டர் நீளம் கொண்ட இந்த படகின் எஞ்சின்கள் 9,520 எச்பி பவரை அளிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

8. நோபடி

8. நோபடி

அதிகபட்ச வேகம்: 55 நாட்டிக்கல் மைல்

ஆன்ட்ரியா மற்றும் ஸ்டெஃபானோ ரிக்னி வடிவமைப்பில் உருவான இந்த படகு ஓவர்மரைன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இநத் படகில் பொருத்தப்பட்டிருந்த லைகம்மிங் கேஸ் டர்பைன்கள் வாட்டர்ஜெட்டுகளுடன் இணைந்து 8,770 எச்பி பவரை வழங்க வல்லது. மணிக்கு 101.86 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

7. எர்மிஸ்2

7. எர்மிஸ்2

அதிகபட்ச வேகம்: 57 நாட்டிக்கல் மைல்

ராப் ஹம்ப்ரேஸ் வடிவமைத்த இந்த அதிவேக படகு கார்பன் ஃபைபர் பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதால், இலகு கொண்டது. ஒவ்வொரு பாகமும் எடை குறைவாக இருக்க வேண்டும் என்று கவனத்துடன் வடிவமைத்தனர். இந்த படகில் மூன்று எம்டியூ16வி 4000 எம்90 சீரிஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்சின்கள் 11,000 எச்பி பவரை அளிக்கும். மணிக்கு 105 கிமீ வேகம் வரை செல்லும்.

6. பிரேவ் சேலஞ்சர்

6. பிரேவ் சேலஞ்சர்

அதிகபட்ச வேகம்: 60 நாட்டிக்கல் மைல்

ஆரம்பத்தில் மெர்குரி என்ற அழைக்கப்பட்ட இந்த படகை க்ரீஸ் நாட்டு கோடீஸ்வரர் ஸ்டாவ்ரோஸ் நியார்கோஸுக்காக தயாரித்து கொடுக்கப்பட்டது. 31.4 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகில் 13,620 எச்பி பவரை அளிக்கும் எஞ்சின்கள் பொருத்துப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 111 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது.

5. 118 வாலிபவர்

5. 118 வாலிபவர்

அதிகபட்ச வேகம்: 60 நாட்டிக்கல் மைல்

இத்தாலியின் மரெனெல்லோவில் உள்ள ஃபெராரி ஆலையில் விண்ட் டயூனல் சோதனை, சுவீடனில் உள்ள எஸ்எஸ்பிஏ சோதனை மையத்தில் வைத்து தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட இந்த அதிவேக படகு மணிக்கு 111 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. 36 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று வேரிகோர் டிஎஃப்50 கேஸ் டர்பைனகள் 16,800 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

4. ஜென்ட்ரி ஈகிள்

4. ஜென்ட்ரி ஈகிள்

அதிகபட்ச வேகம்: 64 நாட்டிக்கல் மைல்

டாம் ஜென்ட்ரியால் வடிவமைக்கப்பட்ட இந்த அதிவேக படகு ஏற்கனவே இருந்த அனைத்து அதிவேக படகுகளின் சாதனகளையும் முறியடித்தது. 1989ல் 5 பேர் கொண்ட குழு இந்த படகில் 62 மணிநேரம் 7 நிமிடங்கள் பயணித்து புதிய சாதனை படைத்தனர். முந்தைய சாதனை நேரத்தை விட 30 சதவீதம் கூடுதல் நேரம் இது பயணித்தது குறிப்பிடத்தக்கது. 34.1 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகில்பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின்கள் 11,560 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. அதிகபட்சமாக மணிக்கு 118 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

3. அலம்ஷர்

3. அலம்ஷர்

அதிகபட்ச வேகம்: 65 நாட்டிக்கல் மைல்

எந்நேரமும் பாதுகாப்பு வசதியுடன் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகு 50 மீட்டர் நீளம் கொண்டது. 6 கேஸ் டர்பைன்கள் மற்றும் 3 வாட்டர்ஜெட்டுகள் கொண்ட இந்த அதிவேக படகு மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும். இந்த அதிவேக படகை கண்காணிக்க முடியாத இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும் வழக்கமாக உள்ளது.

2.ஃபார்னெர்ஸ்

2.ஃபார்னெர்ஸ்

அதிகபட்ச வேகம்: 68 நாட்டிக்கல் மைல்

2000ம் ஆண்டில் உலகின் அதிவேக படகு என்ற பெருமைக்கு சொந்தக்காரனாக இருந்த அதிவேக படகு மணிக்கு 123 கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்தது.

1. வேர்ல்டு ஈஸ் நாட் எனஃப்

1. வேர்ல்டு ஈஸ் நாட் எனஃப்

வேகம்: 70 நாட்டிக்கல் மைல்

1998ல் அமெரிக்க தொழிலதிபர் ஜான் ஸ்டாலுப்பி மற்றும் ஜான் ரோசட்டி ஆகியோரால் நிறுவப்பட்ட மில்லெனியம் சூப்பர்யாட் நிறுவனத்தின் தயாரிப்புதான் வேர்ல்டு ஈஸ் நாட் எனஃப். 42.4மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவேக படகை ஃப்ராங்க் முல்டர் என்ற வல்லுனர் டிசைன் செய்தார். மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட இந்த அதிவேக ஆடம்பர படகில் இரண்டு பாக்ஸ்மேன் டீசல் எஞ்சின்கள் மற்றும் இரண்டு லைகம்மிங் டர்பைன்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமாக இந்த எஞ்சின்கள் 20,600 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதிவேகம் மட்டுமின்றி, டிசைனிலும், சொகுசு வசதிகளிலும் சிறப்பான இந்த ஆடம்பர படகில் பணியாளர்களை தவிர்த்து 10 பேர் தங்க முடியும்.


Most Read Articles
English summary
Here is the list of fastest luxury yachts in the world.
Story first published: Thursday, November 20, 2014, 12:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X