பிஎம்டபிள்யூ கார்களின் ஹெட்லைட்டுகளும், கிட்னி கிரில்களும்...!!

Written By:

ஒவ்வொரு கார் நிறுவனங்களும் ஒரு பிரத்யேக டிசைன் அம்சத்தை கடைபிடிப்பது வழக்கம். குறிப்பாக, காரின் முகப்பை எடுப்பாக காட்டுவதில், ஹெட்லைட்டும், கிரில் அமைப்பும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

அதில், பிஎம்டபிள்யூவின் ஹெட்லைட் டிசைனும், கிட்னி கிரில்லும் மிகவும் பிரத்யேகமான, எளிமையான வடிவமைப்பு மூலம் அனைவரையும் கவரும் விஷயம். அதிலும், குறிப்பிட்டு சில பிஎம்டபிள்யூ கார்களின் ஹெட்லைட் டிசைனும், கிரில் அமைப்பும் அனைவரையும் கவர்ந்ததாக உள்ளது. அதில், மிகச்சிறந்த ஹெட்லைட் வடிவம் மற்றும் கிரில் அமைப்பு கொண்ட பிஎம்டபிள்யூ கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முதலில் டாப் 5 ஹெட்லைட் டிசைன் பற்றியும், அடுத்து 5 சிறந்த கிட்னி கிரில் அமைப்பு பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

05. பிஎம்டபிள்யூ ஐ3

05. பிஎம்டபிள்யூ ஐ3

பிஎம்டபிள்யூ ஐ3 காரின் ஹெட்லைட் வடிவம் மிகவும் கவர்ச்சியானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த குட்டிக் காருக்கு நச்சென்ற முக அழகை இந்த ஹெட்லைட் டிசைன் கொடுக்கிறது.

 04.பிஎம்டபிள்யூ இ30 எம்3

04.பிஎம்டபிள்யூ இ30 எம்3

சாதாரண பிஎம்டபிள்யூ இ30 காரிலிருந்து பிஎம்டபிள்யூ இ30 எம்3 பெர்ஃபார்மென்ஸ் மாடலை வேறுபடுத்தும் அம்சங்களில் ஹெட்லைட்டும் ஒன்று. மிக எளிமையாகவும், அதேநேரத்தில் கவர்ச்சியாகவும் இருக்கிறது. வட்ட வடிவ ஹெட்லைட்டுகளுடன் வந்த கார்களின் காலத்தில் இந்த மாடல் மிகவும் சிறப்பான டிசைன் கொண்டது.

03. பிஎம்டபிள்யூ எம்4

03. பிஎம்டபிள்யூ எம்4

ஒரு மிரட்டலையும், நாகரீக டிசைன் அமைப்பையும் இந்த ஹெட்லைட் டிசைன் வழங்குகிறது. அத்துடன் இரட்டை கிட்னி கிரில்லுடன் இணைக்கப்பட்டிருப்பது போன்ற இதன் டிசைன் நிச்சயம் ஆட்டோமொபைல் துறையினரால் பெரிதும் ரசிக்கப்படும் விஷயமாக கூறலாம்.

02. பிஎம்டபிள்யூ ஐ8

02. பிஎம்டபிள்யூ ஐ8

இந்திய சாலைகளில் சமீபத்தில் களம் புகுந்துவிட்ட பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் ஹெட்லைட்டின் டிசைனும் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. எல்இடி கம்பிவடம் ஹெட்லைட் கீழே இழைந்தோடி ஹெட்லைட்டின் பொலிவுக்கு அழகு சேர்க்கிறது.

01. பிஎம்டபிள்யூ 3.0 சிஎஸ்எல்

01. பிஎம்டபிள்யூ 3.0 சிஎஸ்எல்

கிட்னி கிரில் ஒடுக்கப்பட்டு ஹெட்லைட்டுகள் பிரதானமாக காட்சி தருகிறது. பிஎம்டபிள்யூவின் கார் மாடல்களில் மிகவும் சிறப்பான ஹெட்லைட் டிசைன்களில் இதுவும் ஒன்றாக குறிப்பிடலாம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் பற்றி பார்க்கலாம்.

05. 1938 பிஎம்டபிள்யூ 328

05. 1938 பிஎம்டபிள்யூ 328

இது பிஎம்டபிள்யூதான் என்று சொல்லவைப்பதற்கான பிரத்யேக அம்சம்தான் இரட்டை சிறுநீரக வடிவ கிரில் அமைப்பு. தலைமுறை மாற்றங்களுடன் இந்த நவீன யுகத்திலும் பிஎம்டபிள்யூ கார்களுக்கு முத்தாய்ப்பான விஷயமாக இருக்கிறது. இந்த கிரில் அமைப்பு கொண்ட மாடல்களில் சிறந்த மாடல்களில் ஒன்று 1938 பிஎம்டபிள்யூ 328 மாடல். காரின் முகப்புக்கு தனி அடையாளத்தை தருவதை காண முடியும்.

04. பிஎம்டபிள்யூ 3.0 லி சிஎஸ்எல்

04. பிஎம்டபிள்யூ 3.0 லி சிஎஸ்எல்

பிஎம்டபிள்யூ கார்களில் பெரிதும் விரும்ப்பபடும் மாடல்களில் ஒன்றான சிஎல்எல் மாடலின் ரேஸ் மாடல்தான் 3.0 லி சிஎஸ்எல். கார் பந்தய வீரர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூவின் அந்தஸ்தை உயர்த்திய மாடல். இந்த காரின் ஹெட்லைட்டும் ரேஸ் பிரியர்கள், வீரர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

 03. பிஎம்டபிள்யூ எஃப்30 3 சீரிஸ்

03. பிஎம்டபிள்யூ எஃப்30 3 சீரிஸ்

பிஎம்டபிள்யூவின் புதிய டிசைன் தாத்பரியத்தில் கிட்னி கிரில் ஹெட்லைட்டுடன் இணைந்த வகையில் வடிவமைக்கப்பட்ட மாடல். பிஎம்டபிள்யூ பிரியர்களை பெரிதும் கவர்ந்த கிரில் அமைப்பு இது.

02. பிஎம்டபிள்யூ 507

02. பிஎம்டபிள்யூ 507

பிஎம்டபிள்யூ தயாரித்த மிக அழகான கார் மாடல்களில் ஒன்றாக சிலாகிக்கப்படும் மாடல்தான் பிஎம்டபிள்யூ 507. இந்த காரின் அழகுக்கு இந்த கிரில்தான் முக்கிய காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

01. பிஎம்டபிள்யூ ஐ8

01. பிஎம்டபிள்யூ ஐ8

பிஎம்டபிள்யூவின் புதிய தலைமுறை இரட்டை கிட்னி கிரில் அமைப்பு இந்த காரின் மூலமாகவே வெளிப்பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்ப சிறப்பாக வந்திருக்கும் இந்த காரின் கிரில் அமைப்பும் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

 

English summary
let’s take a look at the top five best BMW kidney grilles and Headlight designs.
Story first published: Friday, April 17, 2015, 13:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark