இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

Written By:

ஒரே இடத்தில் தொடர் விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. ஒரு கிராமத்தையே விதவையாக்கிய தேசிய நெடுஞ்சாலை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் இனம் காணப்பட்டு, அவை கருப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதில், அதிக கருப்புப் பகுதிகளை கொண்ட நம் நாட்டின் டாப்- 5 தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய விபரங்களை பார்க்கலாம். இந்த பட்டியலில் தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பது பேரதிர்ச்சியான விஷயம்.

05. சென்னை- தேனி

05. சென்னை- தேனி

சென்னையிலிருந்து தேனியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல் மொத்தம் 24 கருப்புப் பகுதிகள் உள்ளது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த சாலை ஓரத்தில் இருக்கும் 68 கிராமங்களுக்கு இந்த சாலையை பாதுகாப்பாக கடப்பதற்கும், சாலையில் செல்வதற்கும் எந்த ஒரு கட்டமைப்பு வசதியும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

இந்த சாலையில் ஆண்டுக்கு 3,000க்கும் அதிகமான விபத்துக்கள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டிலேயே அதிக விபத்து அபாயம் கொண்ட சாலைகளில் சென்னை- தேனி தேசிய நெடுஞ்சாலையும் ஒன்று என்பது அதிர்ச்சி தரும் விஷயம்தான்.

04. சென்னை - தானே

04. சென்னை - தானே

டெல்லியிலிருந்து மும்பை மற்றும் பெங்களூர் வழியாக சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48-ல் சென்னை- தானே இடையிலான தேசிய நெடுஞ்சாலை அதிக கருப்புப் பகுதிகள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

சென்னை- தானே இடையிலான 1,235 கிமீ தூர தேசிய நெடுஞ்சாலையில் 27 இடங்கள் கருப்புப் பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. அதிவேக வாகனங்களால் இந்த சாலையில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் தினசரி சம்பவங்களாக மாறி விட்டன.

03. நாங்ஸ்டாயின்- சப்ரூம் சாலை

03. நாங்ஸ்டாயின்- சப்ரூம் சாலை

மேகாலயாவில் உள்ள நாங்ஸ்டாயின் என்ற இடத்திலிருந்து திரிபுராவில் உள்ள சப்ரூம் என்ற இடத்தை இணைக்கும் 622 கிமீ தூரமுடைய தேசிய நெடுஞ்சாலையில் 38 கருப்புப் பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

இந்த சாலையில் அமைந்துள்ள பெட்டகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்த 35 குடும்பங்களை சேர்ந்த 38 ஆண்கள் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனவே, கிராமத்தை 'விதவைகளின் கிராமம்' என்று குறிப்பிடுகின்றனர். இன்றளவும் இந்த சாலையில் அதிக விபத்துக்கள் நடைபெறும் இடமாக பெட்டகுண்டா இருப்பது வேதனை அளிக்கும் விஷயம்.

04. டெல்லி- மும்பை தேசிய நெடுஞ்சாலை

04. டெல்லி- மும்பை தேசிய நெடுஞ்சாலை

நாட்டின் தலைநகர் டெல்லியிலிருந்து வர்த்தக தலைநகர் மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையிலும் அதிக விபத்துக்கள் நடைபெறும் கருப்புப் பகுதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் 45 கருப்புப் பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

ஆண்டுக்கு சராசரியாக 3,000க்கும் மேற்பட்ட விபத்துக்களும், 200 உயிரிழப்புகளும் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஆட்கொல்லி தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

01. டெல்லி- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை

01. டெல்லி- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை

டெல்லி- கொல்கத்தா இடையிலான தேசிய நெடுஞ்சாலைதான் நாட்டிலேயே அதிக கருப்புப் பகுதிகளை கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் 59 கருப்புப் பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு பெறுகிறது. இந்த சாலையில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் தினசரி வாடிக்கையாகி இருக்கிறது.

தமிழகம் முதலிடம்

தமிழகம் முதலிடம்

நாட்டிலேயே விபத்துக்கள் நடைபெறும் அதிக கருப்புப் பகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 100 இடங்கள் கருப்புப் பகுதிகளாக கணக்கிடப்பட்டு இருக்கின்றன. அடுத்து, 99 கருப்புப் பகுதிகள் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது.

இதர மாநிலங்கள்

இதர மாநிலங்கள்

கர்நாடகாவில் 86 கருப்புப் பகுதிகளும், தெலங்கானாவில் 71 கருப்புப் பகுதிகளும், ராஜஸ்தானில் 50 கருப்புப் பகுதிகளும் இருப்பதாக புள்ளிவிபரங்கள் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் மிக குறைவான கருப்புப் பகுதிகள் உள்ள மாநிலமாக ஆந்திரா உள்ளது. இங்கு வெறும் 8 இடங்கள் மட்டுமே கருப்புப் பகுதிகளாக உள்ளன.

 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கருப்புப் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.11,000 கோடி திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது எவ்வாறு நடைமுறை செய்யப்படுகிறது என்பது குறித்த தகவல் இல்லை.

 இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் கருப்புப் பகுதிகளில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, அங்கு உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே உயிரிழப்புகளை தவிர்க்க வழிகோலும்.

இதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், காவல் துறையும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 5 Dangerous National Highways In India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark