பயன்பாட்டில் இருக்கும் உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

பயன்பாட்டில் இருக்கும் உலகின் டாப் -5 விமானங்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகை சுருங்கச் செய்ததில் விமானங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. விரைவான பயணத்திற்கு விமான போக்குவரத்தே சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த சூழலில், கண்டம் விட்டு கண்டத்தை கூட சில மணி நேரத்தில் விமானங்கள் இணைத்து விடுகின்றன.

இந்த சூழலில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் உலகின் அதிவேகமான 5 பயணிகள் விமானங்களை இந்த செய்தியில் காணலாம். க்ரூஸ் வேகத்தின் அடிப்படையில் இந்த செய்தி அமைகிறது.

01. போயிங் 777 விமானம்

01. போயிங் 777 விமானம்

நீண்ட தூர பயணங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் விமான மாடல்தான் போயிங் 777. இது போன்ற பிரம்மாண்ட விமானங்கள் 4 எஞ்சின்களுடன் தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த விமானம் இரண்டு எஞ்சின்களில் இயங்குகிறது. மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு செலவு போன்றவை இதன் ஆகச் சிறந்த விஷயம். இதனால், கட்டணமும் மிக சரியாக நிர்ணயிக்க முடிகிறது.

Picture Credit: Boeing

உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

இந்த விமானம் 0.84 மேக் வேகத்தில் செல்லும் திறன் பெற்றிருக்கிறது. இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி, ஜிஇ மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 13,649 கிமீ தூரம் இடைநில்லாமல் பறக்கும் திறன் வாய்ந்தது. இரண்டு பைலட்டுகள் மூலமாாக இயக்க முடியும். இந்த விமானத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Picture Credit: Boeing

04. போயிங் 787 ட்ரீம் லைனர்

04. போயிங் 787 ட்ரீம் லைனர்

போயிங் 777 விமானத்தைவிட அதிக சிறப்பம்ங்கள் கொண்ட நவீன மாடல்தான் போயிங் 787 ட்ரீம் லைனர். இதுவும் மத்திய தொலைவு மற்றும் நீண்ட தூர தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் அதிகபட்சமாக 330 பயணிகள் வரை செல்லலாம். போயிங் 767 விமானத்தைவிட 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் சிறப்பு வாய்ந்தது.

Picture Credit:Boeing

உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானமானது 0.85 மேக் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. இந்த விமானத்தின் 787-10 மாடல் அதிகபட்சமாக 11,908 கிமீ தூரம் இடைநில்லாமல் பறக்கும் திறன் வாய்ந்தது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானம் ஜிஇ எலக்ட்ரிக் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Picture Credit: Boeing

Trending On Drivespark Tamil:

03. ஏர்பஸ் ஏ380

03. ஏர்பஸ் ஏ380

டாப்-5 பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஏர்பஸ் மாடல் இதுதான். உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானம் அதிவேகமான, சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் விமானம். இந்த இரண்டடுக்கு விமானத்தில் 544 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

Picture Credit:Airbus

உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

ஏர்பஸ் ஏ380 விமானம் மேக் 0.85 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை வாய்ந்தது. இந்த விமானம் எஞ்சின் அலையன்ஸ் ஜிபி7200 அல்லது ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் 900 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிகபட்சமாக 15,200 கிமீ தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்தது.

Picture Credit: Airbus

02. போயிங் 747-400

02. போயிங் 747-400

போயிங் 747-400 விமானமும் இரண்டடுக்கு விமானம்தான். இந்த விமானம் 4 எஞ்சின்களை கொண்டது. இந்த விமானத்தில் அதிகபட்சமாக 416 பயணிகள் செல்ல முடியும்.

picture Credit:Boeing

உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

இந்த விமானம் மேக் 0.855 வேகத்தில் செல்லக்கூடியது. இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி, ஜிடி மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஆகிய எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 7,585 கிமீ தூரம் வரை பயணிக்கும் வல்லமை கொண்டது.

Picture Credit: Boeing

01. போயிங் 747-8ஐ

01. போயிங் 747-8ஐ

போயிங் 747 விமானத்தின் மூனறாம் தலைமுறை மாடலாக 2005ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மாடல். அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் பயன்படுத்தும் மாடல்தான் இது. அதிகபட்சமாக 410 பேர் வரை பயணிக்க முடியும்.Picture Credit: Wiki Commons

Trending On Drivespark Tamil:

Picture Credit: Wiki Commons

உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

இந்த விமானம் மேக் 0.86 வேகத்தில் செல்லும். மேலும், மேக் 0.86 க்ரூஸ் வேகத்தில் செல்லும். இந்த விமானம் 16,436 கிமீ தூரம் பயணிக்கும் வல்லமை கொண்டது. இந்த விமானத்தில் 4 இஜி எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.


சதாப்தி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Most Read Articles
மேலும்... #டாப் 5 #top 5 #offbeat
English summary
The fastest passenger planes in the sky.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X