Subscribe to DriveSpark

கார்களில் உபயோகிக்கபடும் 5 அதி நவீன தொழில்நுட்பங்கள் - முழு விவரங்கள்

Written By:

நமது உபயோகிக்கும் கார்கள் தான், பலரது வாழக்கையில் அனைத்துமானது போல் மாறிவிட்டது. காலத்திற்கு ஏற்றவாறு இவற்றை நீண்ட காலத்திற்கு உபயோகித்து கொண்டே இருப்பதை உறுதி செய்ய ஏராளமான தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யபட்டு கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் கார்களில் உபயோகிக்கபடும் சில முக்கியமான தொழில்நுட்பங்கள் என்ன என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

இவற்றில் சில நாம் பிரயோகித்து கொண்டிருக்கலாம். சில நமது கார்களில் விரைபில் அறிமுகம் செய்யபடலாம். இது குறித்த கூடுதல் தகவல்ககளை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
டர்போ இஞ்ஜின்;

டர்போ இஞ்ஜின்;

டர்போ இஞ்ஜின்கள் 1980-களில் மிக புகழ்மிக்க விஷயமாக இருந்தது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் கூட்டி கொண்டே இருக்க முயற்சித்து கொண்டிருந்தனர். இது இஞ்ஜினில் அதிக அளவிலான காற்றை செலுத்தி கொண்டே இருப்பதனால் சாத்தியமானது.

இப்போது டர்போ இஞ்ஜின்கள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. கார்கள் தான் நமது வாழ்வில் மிக முக்கியமான போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது. இந்த நிலையில், மாசு வெளிப்பாடை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

புதிய டர்போ இஞ்ஜின்கள் அதிக பவரை வெளிபடுத்துகின்றன. மேலும் மென்மையாக இருக்கும் இஞ்ஜின், குறைந்த அளவிலான மாசு வெளிப்பாடு செய்கிறது.

இரவிலும், பகலிலும் எல்இடி;

இரவிலும், பகலிலும் எல்இடி;

தற்போதைய நிலையில், எல்இடி-க்கள் டிஆர்எல் எனப்படுன் டேடைம் ரன்னிங் லைட்கள் என்ற வகையிலேயே பயன்படுத்தபடுகிறது. ஆனால், சில உயர்ந்த ரக கார்களில் எல்இடி-கள் முழுக்க முழுக்க ஹெட்லேம்களிலும் பயன்படுத்தபடுகிறது.

இந்த எல்இடி-க்கள், தற்போது உள்ள பிற லைட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில் எப்படி உள்ளன?

வழக்கமான ஹேலோஜன் விளக்குகளை காட்டிலும், எல்இடி-க்கள் குறைந்த அளவிலான சக்தியையே உபயோகிக்கிறது. மேலும், இவை நீண்ட நாட்களுக்கு நீடித்து வருவதுடன் சாலைகளில் அதிக ஒளியை வழங்குகிறது.

பாதுகாப்பு வலையம்;

பாதுகாப்பு வலையம்;

சாலைகளில் நடக்கும் பெரும்பாலான விபத்துகள், வாகனங்களில் செல்லும் நாம் 100% முழும்மையான கவனம் செலுத்தாதனால் தான் நிகழ்கிறது. எப்படியாகினும், மனிதர்களாகிய நமக்கு, நம்மை சுற்றி நடக்கும் ஏறக்குறைய அனைத்து விஷயத்தினாலும் கவனம் மாறிவிடுகிறது.

நல்ல படியாக, கார் உற்பத்தி நிறுவனங்கள், விபத்துகளை தடுக்கும் தொழில்நுட்பங்களான (கொல்லிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம்) எமெர்ஜென்சி ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷ்ன சிஸ்டம் உள்ளிட்ட நமது கார்களில் பொருத்தி வழங்குகின்றனர்.

துரதிர்ஷடவசமாக இந்த சிஸ்டம்களில் பொதுமக்களின் பிரயோகத்திற்கு அனுமதிக்கபட்ட அளவை தாண்டி ரேடார் உபயோகிக்கபடுகிறது. இதனால், இந்த வகையிலான பெரும்பாலான தொழில்நுட்பங்கள் நமது இந்தியாவில் தடை செய்யபட்டுள்ளது.

சலிக்காத மேனுவல்கள்;

சலிக்காத மேனுவல்கள்;

நீங்கள் உங்கள் காரின் ஓனர் மேனுவல்களை (கார் சொந்தகாரரின் கையேடுகள்) படித்து பார்த்துள்ளீர்களா?

நம்மில் பெரும்பாலானோர், இந்த முக்கியமான ஆவணங்களை புறக்கணித்து விடுகிறோம். அதன்பின், காரில் ஏதாவது பிரச்னை நிகழ்ந்தால் அதிர்ச்சி அடைந்து கவலை கொள்கிறோம்.

கார் உற்பத்தி நிறுவனங்கள் நம்மை நமது கார்களை பற்றி தெரிந்து கொள்ள வைப்பதற்கு யோசித்து வருகின்றனர். ஹூண்டாய் நிறுவனம், ஏற்கனவே ஆக்மெண்டட் ரியாலிட்டி ஆப் என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த ஆக்மெண்டட் ரியாலிட்டி ஆப், உங்களை கார்களுடன் ஊடாட வைத்து, என்ன என்ன அம்சங்கள், உங்கள் கார்களில் உள்ளது என தெரிந்து கொள்ள வைக்கிறது. இது போன்ற ஏற்பாடுகள் கட்டாயம் உங்களை ஈர்க்கும் படி செய்யும் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை.

காரை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்;

காரை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்;

கார்கள் சொந்தமாக வைத்திருப்பது, அவற்றை வெரும் இயக்குவதற்காக மட்டும் அல்ல. அவை நமது வாழ்வின் விரிவாக்கம் செய்யபட்ட அங்கமாக விளங்குகின்றன. நமது ஃபோன்கள் நமது கார்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை.

உங்கள் காருக்கு கூகிள் நிறுவனம் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆப்-பையும், ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை உங்களின் ஃபோனை கொண்டு கட்டுபடுத்த வேண்டும் என கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் விரும்புகின்றன.

மேலும், உங்கள் ஃபோனை கொண்டு, மேப்கள், ஸ்பாடிஃபை மற்றும் பிற மியூசிக் தடங்களை இயக்க முடியும்.

ஆப்பிள் கார்பிளே இந்தியா கொஞ்ச காலமாகவே வழங்கபட்டு வருகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற கார்கள் இந்த ஆப்பிள் கார்பிளே போன்ற வசதியுடன் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்ட் ஆட்டோ தற்போது தான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. எனினும், இந்தியா போன்ற ஸ்மார்ட்ஃபோன் மோகம் கொண்ட நாட்டில் இத்தகைய தொழில்நுட்பங்கள், நமது காரின் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Our cars are slowly becoming inseparable part of our lives. There are lots of latest technologies, which are being integrated into Cars, which are added, integrated with our Cars. For example, latest technologies like Android Auto, Apple CarPlay, Augmented Reality App etc. To know more about lates technologies fitted with our cars, check here...
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark