எதிரிகள் எந்த ரூட்டில் வந்தாலும் சமாளிக்கும் இந்தியாவின் டாப் 7 ஏவுகணைகள்!

Written By:

நாட்டின் பாதுகாப்புக்கு பலவிதமான படைகளையும், ஆயுதங்களையும் பெற்றிருந்தாலும், நவீன கால யுத்தத்தில் எதிரிகளின் சதியையும், தாக்குதல்களையும் முறியடிப்பதில் ஏவுகணைகள்தான் முக்கிய பங்கு வகிக்கும்.

அணு ஆயுத நாடுகளை அருகில் வைத்துக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏவுகணை தொழில்நுட்பத்தில் வல்லரசுகளுக்கு சவால் விடும் நிலையில், அதற்கு உறுதுணையாக இருக்கும் இந்தியாவின் சில முக்கிய ஏவுகணைகளை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

07. பிரம்மோஸ் ஏவுகணை

07. பிரம்மோஸ் ஏவுகணை

இந்தியாவின் ஆற்றல் வாய்ந்த ஏவுகணை. 200 முதல் 300 கிலோ எடையுடைய வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது க்ரூஸ் மிசைல் எனும் குறைந்த தூர ரகத்தை சேர்ந்தது. அதிகபட்சமாக 290 கிமீ தூரம் வரை சென்று இலக்கை தாக்கும்.

பிரம்மோஸ் வேகம்

பிரம்மோஸ் வேகம்

பிரம்மோஸ்-1 மேக் 3.0 வேகத்திலும், பிரம்மோஸ்-2 என்ற ஹைப்பர்சானிக் வகையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய ஏவுகணை மேக் 7.0 வேகத்தில் பறந்து செல்லும். அதாவது, ஒலியைவிட 7 மடங்கு அதிக வேகத்தில் செல்லும். கப்பல், நீர்மூழ்கி, போர் விமானம் மற்றும் தரையிலிருந்து டிரக் லாஞ்சர்கள் மூலமாக ஏவ முடியும். இது இந்திய ரஷ்ய கூட்டணியில் உருவாகிறது.

06. மஸ்கிட் ஏவுகணை

06. மஸ்கிட் ஏவுகணை

இந்த ஏவுகணை கொசுவை குறிக்கும் மஸ்கிட்டோ என்ற ஆங்கில வார்த்தையை தழுவி பெயரிடப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட எதிரி கப்பல்களை தாக்குவதற்கான சிறப்பம்சங்களை கொண்டது. 120 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும். அதிகபட்சமாக 320 கிலோ வெடிபொருளை வைத்து ஏவ முடியும். அதிக உயரத்தில் செல்லும்போது மேக் 3.0 வேகத்திலும், தாழ்வாக பறக்கும்போது மேக் 2.2 என்ற வேகத்திலும் பறந்து செல்லும். கப்பல், நீர்மூழ்கி, விமானம் மற்றும் தரையிலிருந்து ஏவ முடியும்.

05. ஆகாஷ் ஏவுகணை

05. ஆகாஷ் ஏவுகணை

அதிகபட்சமாக 30 கிமீ தூரம் வரை பறந்து சென்று வான் இலக்கை தாக்கும் ரகத்தை சேர்ந்தது. 60 கிலோ எடையுடைய வெடிபொருளை வைத்து ஏவ முடியும். மேக் 2.5 என்ற வேகத்தில் பறக்கும். இந்திய தரைப்படை, வான் படையின் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவான விலை கொண்டது. இதனால், மலேசியா இந்த ஏவுகணையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

 04. நாக் ஏவுகணை

04. நாக் ஏவுகணை

பீரங்கி எதிர்ப்பு ரகத்தை சேர்ந்த இந்த ஏவுகணையை 500 மீட்டர் முதல் 10 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை தாக்குவதற்கு பயன்படுத்த முடியும். 8 கிலோ வெடிபொருளை வைத்து ஏவ முடியும். எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர், எச்ஏஎல் லைட் காம்பேட் ஹெலிகாப்டரில் வைத்து ஏவ முடியும்.

03. கே15 சகரிகா ஏவுகணை

03. கே15 சகரிகா ஏவுகணை

அதிகபட்சமாக 700 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும். 1000 கிலோ எடையுடன் 700 கிமீ தூரம் வரையிலும், 180 கிலோ எடையுடன் 1900 கிமீ தூரம் வரையிலும் பறக்கும். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவ முடியும். அணு ஆயுதத்தையும் ஏவ முடியும் என்பது இதன் சிறப்பு.

02. பிருத்வி ஏவுகணை

02. பிருத்வி ஏவுகணை

அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது. பிருத்வி-1 ஏவுகணை 150 கிமீ தூரம் வரையிலும், பிருத்வி 2 ஏவுகணை 250 முதல் 350 கிமீ தூரம் வரையிலும், பிருத்வி 3 ஏவுகணை 500 கிமீ தூரம் வரையிலும் செல்லும். வினாடிக்கு 2.5 கிமீ தூரம் என்ற வேகத்தில் பயணிக்கும். தரையிலிருந்து டாடா டிரான்ஸ்போர்ட்டர் எரெக்டர் லாஞ்சர் மூலமாக ஏவ முடியும்.

01. அக்னி ஏவுகணை

01. அக்னி ஏவுகணை

நடுத்தர தூரம், கண்டம் விட்டு கண்டம் பாயும் வகை என அக்னி ஏவுகணை பல வகைகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அக்னி 1 ஏவுகணை 700 கிமீ முதல் 1,250 கிமீ தூரம் வரை செல்லும். அக்னி- 2 ஏவுகணை 3,000 கிமீ தூரம் வரையிலும், அக்னி- 3 ஏவுகணை 5000 கிமீ தூரம் வரையிலும், அக்னி- 4 ஏவுகணை 4,000 கிமீ தூரம் வரையிலும், அக்னி- 5 ஏவுகணை 8,000 கிமீ வரையிலும், அக்னி- 6 ஏவுகணை 10,000 கிமீ தூரம் வரையிலும் பறந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

அணு ஆயுத ஏவுகணை

அணு ஆயுத ஏவுகணை

அணு ஆயுதங்களை ஏந்தி சென்று இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடியது. ராணுவ பட்ஜெட்டிலிருந்து இந்த ஏவுகணை தயாரிப்பு தனித்திட்டமாக பிரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் சக்திவாய்ந்த டாப் 10 ஆயுதங்கள்!

போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் சக்திவாய்ந்த டாப் 10 ஆயுதங்கள்!

 
மேலும்... #ராணுவம் #military
English summary
Top 7 Powerful Missiles Of India.
Story first published: Monday, May 2, 2016, 10:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark