உலகின் டாப் 15 பைக் பந்தய வகைகள் - சிறப்புத் தொகுப்பு!

மோட்டார் பந்தய ரசிகர்களுகக்கு த்ரில்லையும், விறுவிறுப்பையும் தருவதில் பைக் பந்தயங்களுக்கு இணையானது ஏதுமில்லை. ஆரம்ப காலங்களில் ஒன்றிரண்டு நண்பர்களுக்கு இடையில் நடந்த பைக் பந்தயங்கள் இன்று உலகளாவிய நிலையில் நடத்தப்படுகிறது. மேலும், யார் பைக் சிறந்தது, யார் சிறந்த ஓட்டுனர் என்பதை காட்டுவதற்காக சிலருக்கு இடையில் நடந்த இந்த பைக் பந்தயம் தற்போது பைக் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் அணிகளுக்கு இடையிலான யுத்த களமாக மாறியிருக்கிறது.

தற்போது பைக் பந்தயங்கள் பல்வேறு வகைகளில் நடத்தப்படுகிறது. மேலும், சிறப்பான பந்தய களம், சிறந்த தொழில்நுட்பத்துடன் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரத்யேக பந்தய பைக் மாடல்களுடன் பைக் பந்தயங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளன. இந்த நிலையில், உலக அளவில் பல்வேறு வகைகளில் நடத்தப்படும் பிரபலமான முதல் நிலை பைக் பந்தய வகைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


முக்கிய வகைகள்

முக்கிய வகைகள்

மோட்டார்சைக்கிளில் பொதுவாக மூன்று முக்கிய வகைகளை குறிப்பிடலாம். முதலாவது, சாதாரண சாலைகளில் நடத்தப்படும் ரோடு ரேஸ். இரண்டாவது, பந்தய களங்களில் நடத்தப்படும் சர்க்யூட் ரேஸ். மூன்றாவது, ஆஃப்ரோடு ரேஸ். இவற்றை தவிரவும், டிராக் ரேஸ் உள்பட வேறு சில வகை பைக் ரேஸ் பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பைக் பந்தய வகைகள், அதன் பிரபலமான பைக் பந்தய போட்டிகளை காணலாம்.

1.மோட்டோ ஜீபி

1.மோட்டோ ஜீபி

சுருக்கமாக மோட்டோ ஜீபி எனப்படும் இந்த பந்தயம் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் சர்க்யூட்டில் நடத்தப்படுகிறது. இந்த பைக் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் மாடல்கள் இந்த போட்டிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன. இந்த பந்தயத்தில் 1000சிசி ரேஸ் பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மோட்டோ2 என்று அழைக்கப்படும் இதற்கு அடுத்த நிலை பந்தயத்தில் 600சிசி ரேஸ் பைக்குகளும், மோட்டோ 3 பைக்கில் 250சிசி ரேஸ் பைக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.

2. சூப்பர்பைக் ரேஸிங்

2. சூப்பர்பைக் ரேஸிங்

இதுவும் சர்யூட் ரேஸ் வகையை சேர்ந்தது. பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றும் இடமாக இதனை பயன்படுத்துகின்றன. இந்த பந்தயத்தில் 4- ஸ்ட்ரோக் எஞ்சின் பைக்குகள் மட்டுமே பயன்படுத்த முடியும். 4 சிலிண்டர் பைக் என்றால் 750சிசி முதல் 1000சிசி வரையிலும், 2 சிலிண்டர் எஞ்சின் பைக் என்றால் 800சிசி முதல் 1200சிசி வரையிலான பைக்குளும் அனுமதிக்கப்படும். இவை சாதாரண மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் தயாரிப்பு நிலை பைக்குகளை பந்தயத்திற்காக பல்வேறு மாறுதல்களை செய்து தயாரிப்பாளர்கள் களமிறக்குகின்றனர். இதன்மூலம், சம்பந்தப்பட்ட பைக்கின் திறனை வாடிக்கையாளர்களிடத்தில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த போட்டி அமைவதால், தயாரிப்பாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

 3. சூப்பர் ஸ்போர்ட் ரேஸிங்

3. சூப்பர் ஸ்போர்ட் ரேஸிங்

சூப்பர் பைக் ரேஸிங் போன்றே சாதாரண மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் மாறுதல்களை செய்து பயன்படுத்துகின்றனர். இந்த போட்டியில் 400சிசி முதல் 750சிசி வரையிலான பைக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. சூப்பர் பைக் ரேஸிங்கைவிட இதன் விதிமுறைகள் மிகவும் கடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

 4. மோட்டோகிராஸ்(MX)

4. மோட்டோகிராஸ்(MX)

இது ஆஃப்ரோடு வகை பைக் பந்தயம். மணல், சேறு, கற்கள் நிறைந்த சர்க்யூட்டில் போட்டி நடத்தப்படுகிறது. எந்தவொரு காலநிலையிலும் இந்த போட்டியை நடத்துகின்றனர். கேடிஎம், ஹோண்டா, யமஹா, கவாஸாகி மற்றும் சுஸுகி ஆகிய 5 பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த போட்டியில் தவறாமல் பங்கேற்கின்றன.

5. சூப்பர் கிராஸ்(எஸ்எக்ஸ்)

5. சூப்பர் கிராஸ்(எஸ்எக்ஸ்)

மோட்டோகிராஸ் போன்றே இதுவும் ஆஃப்ரோடு பைக் பந்தயம்தான். உள்ளரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் குறுகிய தூர பந்தய களத்தில் போட்டி நடைபெறும். கடினமான தடைகள், இடையூறுகளை சமாளித்து முன்னேறும் வகையிலான போட்டி இது. இந்த பந்தயத்தில் பயன்படுத்தப்படும் பைக்கின் சஸ்பென்ஷன் லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டிருக்கும். எடையும் குறைவாக இருக்கும்.

6. ட்ரூ ரோடு ரேஸிங்

6. ட்ரூ ரோடு ரேஸிங்

பொது சாலைகளில் போக்குவரத்தை நிறுத்திவைத்து நடத்தப்படும் ட்ரூ ரோடு ரேஸிங் வகையில் இந்த பந்தயத்தை ஏற்பாட்டாளர்கள் நடத்துகின்றனர். இந்த வகையில் உலகின் பாரம்பரியமும், பெருமதிப்பும் மிக்க பந்தயமாக ஐல் ஆஃப் மேன் டிடி போற்றப்படுகிறது. ஐல் ஆஃப் மேன் டிடி தவிர்த்து பல்வேறு நாடுகளில் இந்த ட்ரூ ரோடு ரேஸிங் பந்தயங்கள் நடத்தப்படுகிறது. நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, செக் குடியரசு, நியூசிலாந்து மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளில் இதேபோன்ற ட்ரூ ரோடு ரேஸிங் பந்தயங்கள் மிகவும் பிரபலம்.

7. என்டியூரன்ஸ் ரேஸிங்

7. என்டியூரன்ஸ் ரேஸிங்

பைக் பந்தயம் என்றாலே வேகம்தான் நினைவுக்கு வரும். ஆனால், வேகத்தை பின்பற்றாமல் கடுமையான சாலை நிலைகளில் பைக் மற்றும் பைக்கை ஓட்டும் வீரரின் தாக்குப்பிடிக்கும் திறனை சோதிக்கும் வகையில், பல கட்டங்களாக நடத்தப்படும் பைக் பந்தயம். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி பல வீரர்களை பயன்படுத்தி இலக்கை அடைய வேண்டும்.

8.சூப்பர்மோட்டோ

8.சூப்பர்மோட்டோ

மோட்டோகிராஸ் பந்தயத்தின் அடிப்படையிலான பந்தயம். மோட்டோகிராஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் பைக்குகளில் சாதாரண டயர்களை பொருத்தி தார் சாலை மற்றும் மண் நிறைந்த சாலைகளின் வழியாக நடத்தப்படும் பந்தயம் இது. வளைவுகளில் வீரர்கள் பைக்குகளை டிரிஃப்ட் செய்து திருப்பிச் செல்வதும் ரசிகர்களை குதூகலிக்கச் செய்யும் விஷயம்.

9. கிராஸ்கன்ட்ரி ராலி ரேஸிங்

9. கிராஸ்கன்ட்ரி ராலி ரேஸிங்

உலகின் மிக சவாலான பந்தயமாக மோட்டார் பந்தயமாக இது கருதப்படுகிறது. ஜிபிஎஸ் உதவியுடன் பல நாடுகளை கடந்து சென்று இலக்கை அடையும் வகையில் நடத்தப்படுகிறது. பல கட்டங்களாக நடத்தப்படும் இந்த பந்தயத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்து, ஒட்டுமொத்த தர வரிசையில் முதலிடம் பிடிப்பவர் வெற்றி பெறுவார். டக்கார் ராலி பந்தயம் சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம்.

10. ஸ்பீடு வே ரேஸிங்

10. ஸ்பீடு வே ரேஸிங்

முட்டை வடிவ மணல் படர்ந்த சிறிய ரேஸ் டிராக்கில் நடத்தப்படும் இந்த போட்டி பார்வையாளர்களை சிலிர்ப்பூட்டும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 6 வீரர்கள் பங்கேற்கலாம். பொதுவாக 4 வீரர்கள் ஒரே நேரத்தில் போட்டியிடுவர். ஒரு கியர் கொண்ட இந்த பைக்குகளில் பிரேக் இருக்காது. வளைவுகளில் திரும்பும்போது வீரர்கள் சறுக்கிச் செல்வதுடன், விரைவாக இலக்கை அடைய வேண்டியது அவசியம்.

 11. டிரையல்ஸ் ரேஸிங்

11. டிரையல்ஸ் ரேஸிங்

இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளில் பிரபலமான பைக் பந்தயம் இது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர். ஏற்ற, இறக்கமான தடுப்புகள் வழியாக காலை கீழே ஊன்றாமல் இலக்கை அடைய வேண்டியது நிபந்தனை. சில இடங்களில் அந்தரத்தில் இருந்து பைக்கில் குதித்து செல்ல வேண்டியிருக்கும். இந்த பைக்குகள் எடை குறைவானது என்பதுடன், இருக்கை கிடையாது.

12. டிராக் ரேஸிங்

12. டிராக் ரேஸிங்

வேக விரும்பிகளுக்கான பைக் பந்தயமாக கூறலாம். 1500 பிஎச்பி வரை பவரை அளிக்கும் அதிசக்தி வாய்ந்த பைக்குகளில் இரண்டு வீரர்களுக்கு இடையிலான பந்தயம். கால் மைல் தூரத்தை குறுகிய நேரத்தில் கடப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். 60 அடி தூரத்தை அரை வினாடியில் கடக்கும் வல்லமை பொருத்திய இந்த மோட்டார்சைக்கிள் ஏராளமான சிறப்பம்சங்கள் கொண்டதாக பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன.

 13. ஹில் கிளைம்ப்

13. ஹில் கிளைம்ப்

ஏற்றமான மலைச்சாலைகளில் நடத்தப்படும் மோட்டார் பந்தய போட்டிதான் ஹில் கிளைம்ப். அதிக மாறுதல்கள் செய்யப்பட்ட டர்ட் பைக்குகள் இந்த போட்டியில் பயன்படுத்தப்படுகின்றன. செங்குத்தான மலைச்சாலைகளில் விரைவாக இலக்கை அடைய வேண்டும். சில பைக்குகளில் நைட்ரோ மீத்தேன் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

16. பாக்கெட் பைக் ரேஸிங்

16. பாக்கெட் பைக் ரேஸிங்

இதுவும் ஜப்பானில் பிரபலமான பைக் பந்தயம். ரேஸ் பைக்குகள் அடிப்படையிலான மினியேச்சர் எனப்படும் சிறிய மாதிரி பைக் மாடல்களை வீரர்கள் பயன்படுத்துவர். இந்த பந்தயத்தில் 40சிசி முதல் 500சிசி வரையிலான 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பைக்குகள் பயன்படுத்தலாம். இவை 2.4 பிஎச்பி முதல் 17 பிஎச்பி இடையில் சக்தியை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். இவை மணிக்கு 126 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டதாக இருக்கின்றன. ஒரு பைக் வெறும் 23 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். சிறுவர்களும், பெரியவர்களும் இந்த பந்தயத்தில் பங்கேற்கலாம்.

Most Read Articles
English summary
Let's take a look at the top forms of motorcycle sports that are held in different parts of the world. Some are well known, some are nothing short of punishment, whereas a few look like a waste of cash and time, but are equally important for one reason—it's motorcycle racing!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X