ராணுவத்திற்கு செலவிடுவதில் உலகின் டாப் 10 நாடுகள்... இந்தியாவை வாயடைக்க வைத்த சீனா!

Written By:

ராணுவத்திற்கு செலவிடுவதில் உலகின் டாப் - 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், ரஷ்யாவை கீழே தள்ளி சவூதி அரேபியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்ற ஆய்வு நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. உலகில் அதிகம் செலவிடும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்று இருக்கிறது. பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

10. தென்கொரியா

10. தென்கொரியா

வடகொரியாவால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தென்கொரியா ராணுவத்திற்கு பெரும் தொகையை கொட்டி வருகிறது. ராணுவத்திற்கு செலவிடுவதில் உலகின் டாப் 10 நாடுகளில் தென்கொரியா 10வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அந்நாடு ராணுவத்திற்காக 36.4 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ராணுவ பலத்தில் 7வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவங்களைவிட வலு மிக்க ராணுவமாக குறிப்பிடப்படுகிறது.

 09. ஜெர்மனி

09. ஜெர்மனி

இந்த பட்டியலில் 9வது இடத்தில் ஜெர்மனி உள்ளது. கடந்த ஆண்டில் ஜெர்மனி 39.4 பில்லியன் டாலர்களை செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே பொருளாதார நிலை கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, ராணுவத்திற்கு மிக குறைவாக செலவிடும் நாடாக ஜெர்மனி இருப்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. உலக அளவில் ராணுவ பலத்தில் 8வது பெரிய நாடு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது.

08. ஜப்பான்

08. ஜப்பான்

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் எப்போதுமே ராணுவ பலத்தை பெருக்குவதறகு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ராணுவத்திற்கு அதிகம் செலிவிட்ட நாடுகளில் 8வது இடத்தை ஜப்பான் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு அந்நாட்டு ராணுவத்திற்காக 40.9 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறதாம். உலக அளவில் ராணுவ பலத்தில் இந்த நாடு 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

07. பிரான்ஸ்

07. பிரான்ஸ்

கடந்த ஆண்டு ராணுவத்திற்காக 50.9 பில்லியன் டாலர்களை பிரான்ஸ் அரசு செலவிட்டிருக்கிறதாம். ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பங்களை பெற்றிருப்பதன் மூலமாக, உலகின் 6வது பெரிய ராணுவ பலம் கொண்ட நாடாக விளங்குகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், பிரான்ஸ் நாட்டிடம் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

 06. இந்தியா

06. இந்தியா

தீவிரவாதிகள் மற்றும் அண்டை நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் கொண்ட நாடு இந்தியா. இதற்காக, ராணுவ பலத்தை சிறப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பரந்து விரிந்த பிரதேசமாக விளங்கும் இந்தியா ராணுவ பலத்தில் உலகின் 4வது பெரிய நாடு. அதேநேரத்தில், ராணுவத்திற்காக செலவிடுவதில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 51.3 பில்லியன் டாலர்கள் ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிடம் 13,25,000 ராணுவ வீரர்கள், 6,464 பீரங்கிகள், 1,905 போர் விமானங்கள், 15 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள், 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

05. இங்கிலாந்து

05. இங்கிலாந்து

இந்த பட்டியலில் 5வது இடத்தை பெற்றிருக்கும் இங்கிலாந்து கடந்த ஆண்டு 55.5 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக செலவிட்டிருக்கிறதாம். இது இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டைவிட அதிகம். மேலும், ராணுவ பலத்திலும் 5வது இடத்தில் உள்ளது.

04. ரஷ்யா

04. ரஷ்யா

ராணுவத்திற்காக செலவிடுவதில் நீண்ட காலமாக மூன்றாவது இடத்தில் இருந்த ரஷ்யா 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு 66.4 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக ரஷ்யா ஒதுக்கீடு செய்திருக்கிறதாம். ராணுவ பலத்தில் உலகின் 2வது பெரிய நாடாக விளங்கும் ரஷ்யா செலவிடுவதில், 4வது இடத்தில் உள்ளது.

03. சவூதி அரேபியா

03. சவூதி அரேபியா

ஏமன் உள்நாட்டு போர், சிரியாவிற்கான ராணுவ ஒத்துழைப்பு போன்ற காரணங்களும், உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் காரணமாக, சவூதி அரேபியா ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 87.2 பில்லியன் டாலர்களை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது சில ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

 02. சீனா

02. சீனா

உலகிலேயே ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ராணுவத்திற்காக அந்நாட்டு அரசு 215 பில்லியன் டாலர்களை வாரி வழங்கியிருக்கிறது. இது நிச்சயமாக இந்தியாவுக்கு சவாலான விஷயமாகவே பார்க்கலாம். ஏனெனில், இந்தியாவைவிட சீனா பன்மடங்கு கூடுதல் நிதியை ராணுவத்திற்கு வாரி வழங்கி வருகிறது. மேலும், ராணுவ பலத்தில் மூன்றாவது பெரிய நாடு சீனா.

 01. அமெரிக்கா

01. அமெரிக்கா

உலகிலேயே மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடாக விளங்கி வரும் அமெரிக்கா 2014ம் ஆண்டிலிருந்து ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும், அந்நாட்டு ராணுவ நிதி ஒதுக்கீடு பிற நாடுகளை காட்டிலும் பன் மடங்கு அதிகம். கடந்த ஆண்டு 596 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக அமெரிக்கா செலவிட்டிருக்கிறது. மற்றொரு விஷயம், உலகின் அனைத்து நாடுகளும் ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை ஒப்பிடும்போது, மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்யும் நாடாக அமரிக்கா இருக்கிறது. புதிய ராணுவ திட்டங்கள்,ஆயுத தயாரிப்பு மட்டுமின்றி, இப்போது இருக்கும் ஆயுதங்கள், போர் தளவாடங்களை பராமரிப்பதற்கு பெரும் தொகையை கட்டாயம் ஒதுக்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது உலக நாட்டாமை என்று குறிப்பிடப்படும் அமெரிக்கா.

போர் அச்சம்

போர் அச்சம்

இந்த பட்டியலை தயாரித்த ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆய்வு நிறுவன அதிகாரி சாம் பெர்லோ கூறுகையில்," கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பல நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியிருக்கின்றன. இதன்மூலமாக, பல நாடுகள் போர் அபாயத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது," என்று தெரிவித்துள்ளார்.

உலகின் டாப் - 10 போர் விமானங்கள்: சிறப்புத் தொகுப்பு Read more at: /off-beat/top-10-fighter-jets-the-world-006963.html

உலகின் டாப் - 10 போர் விமானங்கள்: சிறப்புத் தொகுப்பு

 
மேலும்... #ராணுவம் #military
English summary
Top Military Spenders In The World 2015.
Story first published: Thursday, April 7, 2016, 15:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark