பெரும் விலை கொண்ட உலகின் டாப் 25 கோடீஸ்வர கார்கள்... !!

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து சாதனமாக இல்லாமல், மிகவும் தனித்துவத்துடன் வடிவமைக்கப்படும் கார் மாடல்கள் வியந்து போற்ற செய்கின்றன.

அவை, தொழில்நுட்பத் திறனிலும், பிரத்யேக அம்சங்களிலும் மட்டுமல்ல, அதன் விலையும் எம்மை வியக்க வைக்கின்றன. அவ்வாறு, சாதாரண சாலைகளிலும் செலுத்துவதற்கான சட்ட அனுமதியுடன் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட உலகின் காஸ்ட்லி கார்களின் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

25. 2017 ரிமாக் கான்செப்ட் ஒன்

25. 2017 ரிமாக் கான்செப்ட் ஒன்

விலை: ரூ.6.25 கோடி

கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த ரிமாக் கான்செப்ட் ஒன் சூப்பர் கார் முழுவதும் பேட்டரியில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் சூப்பர் கார். இந்த காரில் இருக்கும் 4 மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 1,088 பிஎச்பி பவரையும், 1,600என்எம் டார்க்கையும் அளிக்கும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிடுமாம். மணிக்கு 355 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது.

24. அப்போலோ ஆரோ

24. அப்போலோ ஆரோ

விலை: ரூ.7.32 கோடி

இந்திய மதிப்பில் ரூ.7.32 கோடி மதிப்புடைய இந்த காரும் ஜெனிவா மோட்டார் ஷோவில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் இருக்கும் 4.0 லிட்டர் இரட்டை டர்போசார்ஜர்கள் பொருத்தப்பட்ட எஞ்சின் அதிகபட்சமாக 986 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 360 கிமீ வேகம் வரை செல்லும். விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், 1.1 மில்லியன் டாலர்கள் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

23. 2017 மஸான்டே எவான்ட்ரா மில்லிகவாலி

23. 2017 மஸான்டே எவான்ட்ரா மில்லிகவாலி

விலை: ரூ.7.98 கோடி

கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் அறிமுகமான இந்த சூப்பர் காரில் செவர்லே நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 7.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 1,000 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டிவிடுமாம். மணிக்கு 402 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. அதிகாரப்பூர்வ விலை விபரம் வெளியிடப்படவில்லை. 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

 22. 2017 ஹென்னிஸி வேனோம் ஜிடி ஸ்பைடர் WRE

22. 2017 ஹென்னிஸி வேனோம் ஜிடி ஸ்பைடர் WRE

விலை: ரூ.8.65 கோடி

மணிக்கு 427 கிமீ வேகம் வரை பறந்து உலகின் அதிவேகத்தில் பயணித்த திறந்த கூரை அமைப்புடைய கார் என்ற சாதனையை ஹென்னிஸி வேனோம் ஜிடி ஸ்பைடர். இந்த காரில் இருக்கும் 7.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 1,451 பிஎச்பி பவரையும், 1,744 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் எட்டிவிடும்.

21. எஸ்சிஜி003 சிஎஸ்

21. எஸ்சிஜி003 சிஎஸ்

விலை: ரூ.8.66 கோடி

கடந்த ஆகஸ்ட் மாதம் மான்ட்ரே கார் வீக் கண்காட்சியில் இந்த காரை பெரும் பணக்காரரான ஜிம் கிளிக்கென்ஹாஸ் அறிமுகம் செய்தார். இந்த காரில் 800 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் உள்ளது. இந்த காரின் முக்கிய அம்சம், இதில் இருக்கும் 3.5 லிட்டர் வி6 எஞ்சின் உலகின் பல கார் பந்தயங்களுக்கு ஏற்ப வரைமுறைகளை கொண்டது. எனவே, உடனடியாக ரேஸ் காராகவும் பயன்படுத்த முடியும். 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. ஒரு கார் 1.3 மில்லின் டாலர் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாம்.

 20. நெக்ஸ்ட் இவி ஹைப்பர்கார்

20. நெக்ஸ்ட் இவி ஹைப்பர்கார்

விலை: ரூ.8.72 கோடி

இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாக இருக்கும் இந்த ஹைப்பர் காரில் ஒரு மெகாவாட் திறன் கொண்ட மின்சார ஹைப்பர் கார் மாடலாக வெளிவர இருக்கிறது. இன்னும் முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், 1.31 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோமொபைல் இணையதளங்கள் தகவல் வெளியிட்டு இருக்கின்றன.

 19. 2017 அராஷ் ஏஎஃப்10 ஹைபிரிட்

19. 2017 அராஷ் ஏஎஃப்10 ஹைபிரிட்

விலை: ரூ.10.45 கோடி

கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மாடலாக இப்போது வெளிவர இருக்கிறது. செவர்லே கார்வெட் சி7 காரில் பயன்படுத்தப்படும் அதே 6.2 லிட்டர் வி8 எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட இருக்கிறது. அதிகபட்சமாக 900 பிஎச்பி பவவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கு். மேலும், 4 எலக்ட்ரிக் மோட்டார்களும் இணைந்து செயலாற்றும்போது அதிகபட்சமாக 2,080 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்குமாம். 1.57 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 18. 2016 கோனிக்செக் அகேரா ஆர்எஸ்

18. 2016 கோனிக்செக் அகேரா ஆர்எஸ்

விலை: ரூ.10.65 கோடி

மொத்தம் 25 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இந்த அனைத்து கார்களுக்குமான முன்பதிவு ஏற்கனவே முடிந்து போய்விட்டது. எனவே, நீங்கள் மெனக்கெட வேண்டாம். 1.6 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 17. 2017 ஸென்வோ டிஎஸ்1

17. 2017 ஸென்வோ டிஎஸ்1

விலை: ரூ.11.98 கோடி

இதுவும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்தான். இந்த காரில் 5.2 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. சாதாரண டிரைவிங் மோடில் அதிகபட்சமாக 650 பிஎச்பி பவரையும், ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 850 பிஎச்பி பவரையும் அளிக்கும். 1.8 மில்லியன் டாலர் விலையில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 16. ஃபெனிர் சூப்பர்ஸ்போர்ட்

16. ஃபெனிர் சூப்பர்ஸ்போர்ட்

விலை: ரூ.12.31 கோடி

டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது சூப்பர் கார் மாடல். போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்களை ட்யூனிங் செய்து தருவதில் புகழ்பெற்ற ஆர்யுஎஃப் ஆட்டோமொபைல் மற்றும் மேக்னா ஸ்டெயிர் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பில் தயாராகி உள்ளது. இந்த காரில் இருக்கும் 4.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 900 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

15. கோனிக்செக் ரெகேரா

15. கோனிக்செக் ரெகேரா

விலை: ரூ.12.65 கோடி

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இது. கோனிக்செக் நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் கார் மாடல். மொத்தம் 80 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இதுவரை 40 கார்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாம். இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 1,822 பிஎச்பி பவரை அளிக்கும்.

14. லம்போர்கினி சென்டினாரியோ

14. லம்போர்கினி சென்டினாரியோ

விலை: ரூ.12.91 கோடி

லம்போர்கினி நிறுவனர் ஃபெருஷியோ லம்போர்கினியின் 100வது பிறந்தநாளையோட்டி அறிமுகம் செய்யப்பட்ட பிரத்யேக பதிப்பு மாடல். கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அவேன்டேடார் சூப்பர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 759 பிஎச்பி பவரை அளிக்கும். 20 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது. அனைத்து கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது.

 13. லம்போர்கினி சென்டினாரியோ ரோட்ஸ்டெர்

13. லம்போர்கினி சென்டினாரியோ ரோட்ஸ்டெர்

விலை: ரூ.14.71 கோடி

முந்தைய படத்தில் பார்த்த லம்போர்கினி சென்டினாரியோ சூப்பர் காரின் திறந்த கூரை அமைப்புடைய மாடல். கடந்த ஆகஸ்ட் மாதம் மானிட்டரி கார் வீக் கார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் 20 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

12. 2016 அஸ்டன் மார்ட்டின் வல்கன்

12. 2016 அஸ்டன் மார்ட்டின் வல்கன்

விலை: ரூ.15.13 கோடி

மொத்தமாகவே 24 வல்கன் கார்கள்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதுவரை அஸ்டன் மார்ட்டின் தயாரித்த மாடல்களிலேயே அதிக விலை கொண்டது. இந்த காரில் 800 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 7.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 11. கென் ஒகுயாமா கோட்57

11. கென் ஒகுயாமா கோட்57

விலை: ரூ.16.64 கோடி

ஃபெராரி என்ஸோ, மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே உள்பட பல சூப்பர் கார்களை வடிவமைத்த பிரபல டிசைனர் கென் ஒகுயாமா சொந்தமாக உருவாக்கிய மாடல் இது. இந்த காரில் இருக்கும் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 2.5 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வருகிறது.

10. பினின்ஃபரீனா எச்2 ஸ்பீடு

10. பினின்ஃபரீனா எச்2 ஸ்பீடு

விலை: ரூ.16.65 கோடி

இது ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் எரிபொருள் நுட்பத்தில் இயங்கும் ஹைப்பர் கார் மாடல். இந்த காரில் இருக்கும் இரண்டு மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரை வழங்கும். மொத்தம் 10 கார்களை உற்பத்தி செய்ய உள்ளதாக மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் பினின்ஃபரீனா நிறுவனம் தெரிவித்துள்ளது.

09. 2017 பகானி ஹூவைரா பிசி

09. 2017 பகானி ஹூவைரா பிசி

விலை: ரூ.16.65 கோடி

பகானி ஹூவைரா பிசி கார் உற்பத்தி நிறுத்தப்பட்ட பிறகு, அதன் அடிப்படையிலான மாடலாக வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 20 கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 750 பிஎச்பி பவரை அளிக்கும்.

08. மெக்லாரன் பி1 ஜிடிஆர்

08. மெக்லாரன் பி1 ஜிடிஆர்

விலை: ரூ.17.24 கோடி

மெக்லாரன் பி1 கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மட்டுமே இந்த புதிய பி1 ஜிடிஆர் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. பந்தய வகை பி1 ஜிடிஆர் கார் 2.59 மில்லியன் டாலர்கள் முதல் 3 மில்லியன் டாலர்கள் வரையிலும், சாதாரண சாலையில் இயக்குவதற்கான மாடல் 6 மில்லியன் டாலர்கள் விலையிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறதாம்.

07. புகாட்டி சிரோன்

07. புகாட்டி சிரோன்

விலை: ரூ.17.31 கோடி

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடலான புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடல்தான் சிரோன். இந்த காரில் டபிள்யூ16 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 1,500 பிஎச்பி வரையிலும் அளிக்க வல்லது. மணிக்கு 420 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது. 2.6 மில்லியன் டாலர் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

06. இகோனா வல்கானோ டைட்டானியம்

06. இகோனா வல்கானோ டைட்டானியம்

விலை: ரூ.17.97 கோடி

டைட்டானியம் கட்டமைப்பில் தயாரான உலகின் முதல் சூப்பர் கார். இத்தாலியிலுள்ள புகழ்பெற்ற இகோனா டிசைன் ஸ்டூடியோவின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது. ஃபெராரி பந்தய கார் எஞ்சினியராக பணிபுரிந்த கிளாடியோ லொம்பார்டி மற்றும் ரேஸ் கார் தயாரிப்பாளர் மரியோ கேவக்னெரோ ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. இந்த காரில் இருக்கும் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 670 பிஎச்பி பவரையும், 820 என்எம் டார்க்கையும் வழங்கும். மணிக்கு 355 கிமீ வேகத்தில் செல்லும். ரூ.2.7 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

05. 2018 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஆர்50

05. 2018 மெர்சிடிஸ் - ஏஎம்ஜி ஆர்50

விலை: ரூ.19.97 கோடி

மெர்சிடிஸ் - ஏஎம்ஜி தயாரிப்பில் உருவாகும் ஹைப்பர் கார் மாடல். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டான ஏஎம்ஜி நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தயாரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், 3 மில்லியன் டாலர் விலையில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 04. புகாட்டி விஷன் கிரான் டூரிஷ்மோ

04. புகாட்டி விஷன் கிரான் டூரிஷ்மோ

விலை: ரூ.20 கோடி

ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் வைப்பதற்காகவும், புகாட்டி சிரோன் காரின் அடிப்படை மாடலாகவும் கருதப்படும் இந்த விஷன் கிரான் டூரிஷ்மோ காரை சவூதி இளவரசர் வாங்கிவிட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த கார் 3 மில்லியன் டாலர் விலை மதிப்பில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த காருடன் சேர்த்து புகாட்டி சிரோன் காரையும் சவூதி இளவரசர் வாங்கியிருக்கிறார்.

03. 2017 மெக்லாரன் பி1 எல்எம்

03. 2017 மெக்லாரன் பி1 எல்எம்

விலை: ரூ.24.63 கோடி

மெக்லாரன் பி1 காரின் அதிசெயல்திறன் மிக்க மாடல். மெக்லாரன் எஃப்1 காரை போன்றே, இந்த காரையும் லேன்சான்ட்டே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. 3.7 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. 2017 ஃபெராரி லாஃபெராரி அபெர்ட்டா

02. 2017 ஃபெராரி லாஃபெராரி அபெர்ட்டா

விலை: ரூ.24.5 கோடி

திறந்து மூடும் வசதி கொண்ட லாஃபெராரி மாடல். இந்த காரில் இருக்கும் 6.2 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 950 பிஎச்பி பவரை அளிக்க வல்லது.

01. அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் ஏஎம்-ஆர்பி 001

01. அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் ஏஎம்-ஆர்பி 001

விலை: ரூ.25.96 கோடி

ஃபார்முலா ஒன் கார்களின் அடிப்படையிலான ஹைப்பர் கார் மாடலாக வருகிறது. அஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனமும், ரெட்புல் ரேஸிங் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதன் ஸ்கேல் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபார்முலா 1 கார் வடிவமைப்பில் புகழ்பெற்ற அட்ரியன் நிவே வடிவமைக்கும் சாதாரண சாலைக்கான முதல் கார் மாடலும்கூட. இந்த காரில் வி12 எஞ்சின் பயன்படுத்தப்படும். 3.9 மில்லியன் டாலர் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அதிக விலை கொண்ட டாப் - 25 கார்கள்!

உலகின் அதிவேக டாப்-10 சூப்பர் பைக்குகள்!

உலகின் காஸ்ட்லியான டாப் 10 ராணுவ வாகனங்கள்!!

மணிக்கு 600 கிமீ வேகத்தை தாண்டி மாக்லேவ் ரயில் புதிய சாதனை!

Most Read Articles
English summary
Top 25 Cars That You Can Never Afford To Buy. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X