மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

Written By:

மாண்டரே கார் வீக் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட கார் இமாலய விலைக்கு விற்பனையானது.

உலக அளவில் ஆங்காங்கே, பல்வேறு இடங்களில் வெவ்வேறு பேர்களில் கார் திருவிழாக்கள் நடை பெறுவது வழக்கம். அந்த வகையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பெப்பில் பீச் என்ற இடத்தில் கன்கூர்ஸ் தி'எலிகன்ஸ் (Pebble Beach Concours d'Elegance) என்ற பெயரில் மாண்டரே கார் வீக் 2016 திருவிழா நடைபெற்றது.

மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், குட்டிங் அண்ட் கம்பெனி (Gooding and Company) நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஞாயிற்றுகிழமை வரை மொத்தம் 43 கார்கள் விற்பனை செய்யபட்டது.

இந்த மாண்டரே கார் வீக் திருவிழாவில், 1933 ஆல்ஃபா ரோமியோ என்ற மாடல், சுமார் 12 மில்லியன் டாலர்கள் என்ற மாபெரும் தொகைக்கு ஏலம் போனது. இதில், ஆச்சரியம் அளிக்கும் வகையில், ஃபெராரி கார் மாடலானது, உலகின் 5-வது விலை உயர்ந்த மாடலாகவே விலை போனது.

அதிக விலைக்கு ஏலம் போன கார்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

பெப்பில் பீச் கன்கூர்ஸ் தி'எலிகன்ஸ்...

பெப்பில் பீச் கன்கூர்ஸ் தி'எலிகன்ஸ்...

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பெப்பில் பீச் என்ற இடத்தில் கன்கூர்ஸ் தி'எலிகன்ஸ் என்ற கார் திருவிழா நடைபெற்று வருகிறது.

பெப்பில் பீச் கன்கூர்ஸ் தி'எலிகன்ஸ் என்ற நிகழ்ச்சி தான், உலகின் மிக அருமையான கார்களுக்கான சிறந்த ஷோ-வாக கருதப்படுகிறது. இதில், உலகில் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கார்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

பெப்பில் பீச் கன்கூர்ஸ் தி'எலிகன்ஸ் நிகழ்ச்சியில் கைவினை திறன் மற்றும் சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட கார்களை காடனும் வாய்ப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 200 கார்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்த கார் திருவிழாவில், கார்களின் வேகத்தை காட்டிலும், அவற்றின் பழமை மற்றும் சரித்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி கார் சேகரிப்பாளர்களுக்கு சிறந்த நிகழ்ச்சியாக அமைகிறது.

10) 1956 ஃபெராரி 250ஜிடி போனோ கூபே;

10) 1956 ஃபெராரி 250ஜிடி போனோ கூபே;

மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், 1956 ஃபெராரி 250ஜிடி போனோ கூபே, 10-வது இடத்தில் உள்ளது.

1956 ஃபெராரி 250ஜிடி போனோ கூபே, 1,485,000 டாலர்கள் என்ற தொகைக்கு ஏலம் போனது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

ஃபெராரி நிறுவனத்தின் மிகவும் புராதன மாடல்களில் ஒன்றான இந்த கார், 1.5 மில்லியன் டாலர்களுக்கு சற்று குறைவான விலை விற்பனையானது.

8) (tie) - 1971 மஸராட்டி கிப்லி 4.9 எஸ்எஸ் ஸ்பைடர்;

8) (tie) - 1971 மஸராட்டி கிப்லி 4.9 எஸ்எஸ் ஸ்பைடர்;

மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில் 1971 மஸராட்டி கிப்லி 4.9 எஸ்எஸ் ஸ்பைடர் மாடலும், 1960 ஃபெராரி 250ஜிடி சீரிஸ் 2 கேப்ரியோலே சமமான விலைக்கு விற்பனையானது.

1971 மஸராட்டி கிப்லி 4.9 எஸ்எஸ் ஸ்பைடர், 1,500,000 டாலர்கள் என்ற விலைக்கு விற்பனையானது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

குட்டிங் அண்ட் கம்பெனி நிறுவனத்தின் கணக்குப்படி, இது 250,000 டாலர்கள் என்ற அளவில் குறைவான மதிப்பில் ஏலம் போனது.

8) (tie) 1960 ஃபெராரி 250ஜிடி சீரிஸ் 2 கேப்ரியோலே;

8) (tie) 1960 ஃபெராரி 250ஜிடி சீரிஸ் 2 கேப்ரியோலே;

மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில் 1960 ஃபெராரி 250ஜிடி சீரிஸ் 2 கேப்ரியோலே, 1971 மஸராட்டி கிப்லி 4.9 எஸ்எஸ் ஸ்பைடர் மாடலும் சமமான விலைக்கு விற்பனையானது.

1960 ஃபெராரி 250ஜிடி சீரிஸ் 2 கேப்ரியோலே, 1959 முதல் 1962-ஆம் காலகட்டத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

அந்த காலக்கட்டத்தில், 1960 ஃபெராரி 250ஜிடி சீரிஸ் 2 கேப்ரியோலே மாடலில் வெறும் 200 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

1960 ஃபெராரி 250ஜிடி சீரிஸ் 2 கேப்ரியோலே, 1,500,000 டாலர்கள் என்ற விலைக்கு ஏலம் போனது.

7) 1932 ரோல்ஸ்-ராய்ஸ் ஃபேன்டம் 2 காண்டினெண்டல் பெர்லின்

7) 1932 ரோல்ஸ்-ராய்ஸ் ஃபேன்டம் 2 காண்டினெண்டல் பெர்லின்

1932 ரோல்ஸ்-ராய்ஸ் ஃபேன்டம் 2 காண்டினெண்டல் பெர்லின் (1932 Rolls-Royce Phantom II Continental Berline) என்ற கார், மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், 7-வது இடத்தில் உள்ளது.

1932 ரோல்ஸ்-ராய்ஸ் ஃபேன்டம் 2 காண்டினெண்டல் பெர்லின், 1,760,000 டாலர்கள் என்ற விலைக்கு விற்பனையானது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

1932 ரோல்ஸ்-ராய்ஸ் ஃபேன்டம் 2 காண்டினெண்டல் பெர்லின் மாடல், ஹென்றி ராய்ஸ் ஆவர்களால் டிசைன் செய்யப்பட்ட கடைசி சீரிஸ் சேஸி கொண்டுள்ளது.

6) 1985 ஃபெராரி 288 ஜிடிஓ;

6) 1985 ஃபெராரி 288 ஜிடிஓ;

ஃபெராரி நிறுவனம் தயாரித்த 1985 ஃபெராரி 288 ஜிடிஓ மாடல், மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், 6-வது இடத்தை பெற்றது.

1985 ஃபெராரி 288 ஜிடிஓ, 2,420,000 டாலர்களுக்கு விற்பனையானது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

என்சோ ஃபெராரி, இந்த ஃபெராரி 288 ஜிடிஓ மாடலில், வெறும் 200 கார்களை மட்டுமே தயைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5) 1968 ஃபெராரி 330ஜிடிஎஸ்;

5) 1968 ஃபெராரி 330ஜிடிஎஸ்;

1968 ஃபெராரி 330ஜிடிஎஸ் காரானது, ஃபெராரி டிரேட்மார்க் வி12 மாடல்களில் ஒன்றாகும்.

1968 ஃபெராரி 330ஜிடிஎஸ் மாடல், மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், 5-வது இடத்தை பெற்றது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

1968 ஃபெராரி 330ஜிடிஎஸ் மாடல், 2,502,500 டாலர்கள் விலைக்கு விற்பனையானது.

4) 1954 அஸ்டன் மார்ட்டின் டிபி2/4 பெர்டோன் ஸ்பைடர்;

4) 1954 அஸ்டன் மார்ட்டின் டிபி2/4 பெர்டோன் ஸ்பைடர்;

அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த 1954 அஸ்டன் மார்ட்டின் டிபி2/4 பெர்டோன் ஸ்பைடர் (1954 Aston Martin DB2/4 Bertone Spider), மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், 4-வது இடத்தை பெற்றது.

1954 அஸ்டன் மார்ட்டின் டிபி2/4 பெர்டோன் ஸ்பைடர், 3,080,000 டாலர்கள் என்ற விலைக்கு விற்பனையானது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

1954 அஸ்டன் மார்ட்டின் டிபி2/4 பெர்டோன் ஸ்பைடர், டிடேச்சபில் டாப் எனப்படும் தனியே பிரிக்ககூடிய வகையிலான டாப் கொண்டுள்ளது.

3) 1957 மஸராட்டி ஏ6ஜி/54 ஸ்பைடர்;

3) 1957 மஸராட்டி ஏ6ஜி/54 ஸ்பைடர்;

மஸராட்டி நிறுவனம் தயாரித்த 1957 மஸராட்டி ஏ6ஜி/54 ஸ்பைடர் (1957 Maserati A6G/54 Spider) மாடல், மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், 3-வது இடத்தை பெற்றது.

1957 மஸராட்டி ஏ6ஜி/54 ஸ்பைடர், 3,300,000 டாலர்களுக்கு விற்பனையானது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

1957 மஸராட்டி ஏ6ஜி/54 ஸ்பைடர் மாடல், 1947-ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது தான், மஸராட்டி நிறுவனம் தயாரித்த, சாலையில் இயக்கக்கூடிய முதல் கார் ஆகும்.

2) 1932 புகாட்டி டைப் 55 ரோட்ஸ்டர்;

2) 1932 புகாட்டி டைப் 55 ரோட்ஸ்டர்;

புகாட்டி நிறுவனம் தயாரித்த 1932 புகாட்டி டைப் 55 ரோட்ஸ்டர், மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், 2-வது இடத்தை பிடித்தது.

1932 புகாட்டி டைப் 55 ரோட்ஸ்டர், 10,400,000 டாலர்களுக்கு விலை போனது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

1932 புகாட்டி டைப் 55 ரோட்ஸ்டர் தான், எந்த ஒரு புகாட்டி காரும் பெறாத சாதனை மதிப்பிற்கு விலை போன கார் என குட்டிங் அண்ட் கம்பெனி நிறுவனம் தெரிவித்தது.

1) 1933 ஆல்ஃபா ரோமியோ 8சி 2300 மோன்ஸா;

1) 1933 ஆல்ஃபா ரோமியோ 8சி 2300 மோன்ஸா;

1933 ஆல்ஃபா ரோமியோ 8சி 2300 மோன்ஸா (1933 Alfa Romeo 8C 2300 Monza) தான், மாண்டரே கார் வீக் 2016 திருவிழாவில், அதிக விலைக்கு ஏலம் போன கார்களில், முதலாவது இடத்தை பிடித்தது.

1933 ஆல்ஃபா ரோமியோ 8சி 2300 மோன்ஸா, 11,990,000 டாலர்கள் என்ற விலைக்கு ஏலம் போனது.

மாண்டரே கார் வீக் திருவிழாவில் இமாலய விலைக்கு ஏலம் போன டாப் - 10 கார்கள்!!

1933 ஆல்ஃபா ரோமியோ 8சி 2300 மோன்ஸா, இன்-லைன், 8-சிலிண்டர்கள் உடைய இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 180 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2014ம் ஆண்டில் 9 ஃபெராரி கார்கள் 900 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை!

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களும்... அவர்களது அசத்தலான கார்களும்!

மும்பை- நியூயார்க் இடையே உலகின் அதிக கட்டண விமான சேவை அறிமுகம்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Gooding and Company hosted an auction at Monterey Car Week 2016, (Pebble Beach Concours d'Elegance) near Pebble Beach, California, America. Total of 43 cars were sold. The Car which brought highest revenue for Gooding was 1933 Alfa Romeo which was sold for whopping $12 million dollars. To know about Top 10 list of cars that were sold, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more