டாப்-5 சம்பள லிஸ்ட்டில் இடம் இல்லை... பதவி விலகிய டொயோட்டா சிஇஓ.,

கவுரவமான சம்பளம் இல்லை என்று கூறி டொயோட்டா சிஇஓ அகியோ டொயோடா(Akio Toyoda) பதவியை ராஜினாமா செய்த சம்பவம் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் டொயோட்டா நிறுவனரின் பேரன்தான் அகியோ டொயோட்டா.

கடந்த 2009ம் ஆண்டு நிறுவனங்களின் பொறுப்புகளை தன் வசம் எடுத்துக் கொண்டு மிக திறம்பட டொயோட்டா நிறுவனத்தை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியவர் இவர். கடந்த ஆண்டு உலகின் டாப்-5 கார் விற்பனை லிஸ்ட்டில் டொயோட்டா இடம்பெறுவதற்கான வியூகங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுத்தவர் அகிடோ.

இந்த நிலையில், இவர் டொயோட்டா தலைவர் பதவியிலிருந்து விலகியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் சம்பளம்தான். முன்னணி கார் நிறுவனங்களின் தலைவர்களின் சம்பளத்தோடு இவரது சம்பளத்தை ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இதை காரணம் காட்டியே தனது பதவியை விட்டு விலகியுள்ளார். ஸ்லைடரில் முன்னணி கார் நிறுவனங்களின் சிஇஓ.,க்களின் சம்பள விபரத்தையும், கூடுதல் தகவல்களையும் பார்க்கலாம்.

ஃபோர்டு சிஇஓ

ஃபோர்டு சிஇஓ

அதிகம் சம்பளம் வாங்கும் கார் நிறுவனங்களின் டாப்-5 சிஇஓ.,க்களின் லிஸ்ட்டில் முதலிடத்தில் அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் தலைவரான ஆலன் முலாலி இடம்பெற்றுள்ளார். இவர் 21 மில்லியன் டாலரை ஆண்டு சம்பளமாக பெறுகிறார். புளூம்பெர்க் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன்

ஜெர்மனியை சேர்ந்த மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தின் சிஇஓ மார்ட்டின் வின்டெர்கார்ன் ஆண்டுக்கு 19 மில்லியன் டாலரை சம்பளமாக பெறுகிறார்.

 ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ்

ஃபோர்டு போன்றே மற்றொரு அமெரிக்க பிராண்டான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் டான் அகெர்சன் ஆண்டுக்கு 11 மில்லியன் டாலர் சம்பளமாக பெறுகிறார்.

டெய்ம்லர் ஏஜி

டெய்ம்லர் ஏஜி

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான டெய்ம்லர் ஏஜி நிறுவனத்தினஅ தலைவர் டெய்டர் ஸெட்சே ஆண்டுக்கு 10.6 மில்லியன் சம்பளமாக பெறுகிறார்.

நிசான் மோட்டார்

நிசான் மோட்டார்

ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனியின் சிஇஓ.,வாக இருக்கும் கார்லோஸ் கோஸ்ன் ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார்.

 டொயோடாவுக்கு எவ்வளவு

டொயோடாவுக்கு எவ்வளவு

கடந்த ஆண்டு ஜப்பான் நிதி அமைச்சகத்திடம் அகியோ டொயோடா அளித்த தகவல்படி அவருக்கு வெறும் 1.9 மில்லியன் டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிற கார் நிறுவனங்களின் கார் நிறுவனங்களின் சிஇஓ.,க்களை விட குறைந்த சம்பளம் என்ற கவுரவ பிரச்னையால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேவேளை, டொயோட்டா நிறுவனத்தின் 0.13 சதவீத பங்குகள் இவர் வசம் உள்ளது. இதன் மதிப்பு 256 மில்லியன் டாலர். இதுதவிர, கடந்த மார்ச்சில் முடிந்த நிதியாண்டின்படி அவரிடம் இருக்கும் பங்குகள் மூலம் 4.2 மில்லியன் டாலர் டிவிடென்ட் தொகை கிடைத்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
If you own a Toyota, you certainly know the value and efficiency of these cars. Over the years this Japanese car manufacturer has build up an unique reputation on the value and efficiency of its cars. Our focus for the moment, is on the chief executive who is earning a similar reputation for his compensation.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X