உலகின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் - தகவல்கள்!!

By Saravana

நாட்டின் பெருநகரங்களில் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் தற்போது போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பிரச்னையாகி வருகிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்து நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருவதால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சரியான உள்கட்டமைப்பு இல்லாமல் அதிகரித்து வரும் இந்த போக்குவரத்து நெரிசலால் பல்லாயிரம் கோடி மதிப்புடைய எரிபொருளும், நேரமும் விரயமாகி வருகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுவதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது. சில நிமிடங்கள் மற்றும் மணிக்கணக்கில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் தினசரி அவதிப்படுகிறோம். அதுபோன்று, பல்வேறு நாடுகளின் தலைநகரங்களிலும் நிலவும் போக்குவரத்து நெரிசல் பற்றியும், அந்நகர மக்கள் கூறும் தகவல்களையும் பார்க்கலாம்.

பேங்காக் (தாய்லாந்து)

பேங்காக் (தாய்லாந்து)

பேங்காக் நகரில் முதல் முறை கார் வாங்குபவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்ததுதான் தாமதம். கார் விற்பனை விர்ரென்று ராக்கெட் வேகத்தில் சூடுபிடித்தது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பாதும் பகுதியிலிருந்து சென்ட்ரல் பேங்காக் இடையிலான 50 கிமீ தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடக்க முடியும். ஆனால், தற்போது இந்த தூரத்தை கடக்க சில சமயங்களில் 4 முதல் 5 மணி நேரம் ஆகிறதாம்.

ஜகார்த்தா (இந்தோனேஷியா)

ஜகார்த்தா (இந்தோனேஷியா)

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலும் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. 2 கிமீ தூரத்தை கடப்பதற்கு அரை மணி நேரமும், 20 கிமீ தூரத்தை கடப்பதற்கு குறைந்தது இரண்டரை மணி நேரம் பிடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நைரோபி(கென்யா)

நைரோபி(கென்யா)

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு கென்ய தலைநகர் நைரோபியும் பெயர்பெற்றுள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் விட்டுச் சென்ற தொல்லைகளில் ஒன்று இந்த போக்குவரத்து நெரிசல் என்று அந்நகர மக்கள் அங்கலாய்க்கிறார்கள். நைரோபி சாலைகளில் பிரிட்டிஷார் அமைத்த ரவுண்டானாக்களால்தான் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டுமானால் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக கிளம்பி விடுங்கள் என்று அட்வைஸ் கொடுக்கின்றனர். குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாதாம். ஒரு பெரிய தூக்கத்தையே போட்டுவிடலாம் என்கின்றனர்.

மணிலா (பிலிப்பைன்ஸ்)

மணிலா (பிலிப்பைன்ஸ்)

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவும் போக்குவரத்து நெரிசலால் திக்கி திணறி வருகிறது. இதுகுறித்து அந்நகரத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்," மாலை 5.30 மணிக்கு ஒரு இடத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டேன். நள்ளிரவு 1.30 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்," என்று தன்னுடைய அனுபவத்தை கூறுகிறார். மணிலாவில் ஒரு புதுமையான போக்குவரத்து விதி அமலில் உள்ளது. அதாவது, 1,2 என்று முடியும் கார்களை திங்கட்கிழமை சாலையில் இயக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோன்று, 3,4 என முடியும் கார்கள் செவ்வாய்க்கிழமைகளில் இயக்க அனுமதிக்கப்படுவதில்லை. வார இறுதியில் மட்டும் அனைத்து கார்களும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அப்படியிருந்தும், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லையாம்.

 சியோல் (தென்கொரியா)

சியோல் (தென்கொரியா)

தென்கொரிய தலைநகர் சியோலிலும் போக்குவரத்து நெரிசலால் பெரும் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான். மணிக்கு 2 கிமீ வேகம் முதல் அதிகபட்சம் 15 கிமீ வேகம் வரையில் மட்டுமே செல்ல முடிகிறதாம். அரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை பிடிப்பதற்கு 4 மணி நேரம் ஆவதாக அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

டாக்கா (வங்கதேசம்)

டாக்கா (வங்கதேசம்)

வங்கதேச தலைநகர் டாக்கா உலகின் மிக அதிக ஜனநெருக்கடி நகரங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இங்கு 15 தூரத்தை ஆட்டோரிக்ஷாவில் சென்றடைவதற்கு சில சமயங்களில் மூன்று மணி நேரம் பிடிப்பதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

 லெக்சிங்டன் (அமெரிக்கா)

லெக்சிங்டன் (அமெரிக்கா)

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரிலும் போக்குவரத்து நெரிசலால் கசங்குவதாக அந்நகரத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். அதாவது, 15 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்தை எட்டிப் பிடிக்க ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகிறது என்று அவர் குமுறுகிறார்.

சியோல் (தென்கொரியா)

சியோல் (தென்கொரியா)

தென்கொரிய தலைநகர் சியோலிலும் போக்குவரத்து நெரிசலால் பெரும் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான். மணிக்கு 2 கிமீ வேகம் முதல் அதிகபட்சம் 15 கிமீ வேகம் வரையில் மட்டுமே செல்ல முடிகிறதாம். அரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை பிடிப்பதற்கு 4 மணி நேரம் ஆவதாக அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

 பீஜிங் (சீனா)

பீஜிங் (சீனா)

சீனத் தலைநகர் பீஜிங்கும் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரம்தான். கடந்த 2010ம் ஆண்டு பீஜிங் - திபெத் நெடுஞ்சாலையில் உலகிலேயே மிக நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 10 நாட்களுக்கு நீடித்த இந்த போக்குவரத்து நெரிசலின்போது 180 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

டெல்லி

டெல்லி

நம் நாட்டு தலைநகர் டெல்லியிலும் போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கி வருகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் பல கிமீ வரை நீள்கிறது. 15 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்தை எட்டிப்பிடிக்க சில சமயம் பல மணி நேரம் ஆகிறது என்று எமது உறவினர் கூறுகிறார்.


Most Read Articles
Story first published: Thursday, November 7, 2013, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X