அழகு ரசம் சொட்டும் டிரையம்ஃப் போனிவில் கஸ்டமைஸ் பைக்!

Written By:

புதிய வீடியோ கேம் அறிமுகத்திற்காக, ஒரு அட்டாகாசமான ஒரு கஸ்டமைஸ் பைக் மாடலை டிரையம்ஃப் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

டிரையம்ஃப் பைக் நிறுவனத்தின் டிசைன் குழுவினர் பார்த்து பார்த்து மிக நேர்த்தியாக மாற்றப்பட்டிருக்கும் இந்த புதிய கஸ்டமைஸ் பைக் மாடலின் சொக்க வைக்கும் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

01. கஸ்டமைஸ் மாடல்

01. கஸ்டமைஸ் மாடல்

கொனாமியின் மெட்டல் கியர் சாலிட் 5: தி ஃபான்டம் பெயின் என்ற புதிய வீடியோ கேம் வெளியீட்டை கொண்டாடும் விதத்தில் இந்த புதிய கஸ்டமைஸ் பைக்கை டிரையம்ஃப் உருவாக்கியிருக்கிறது. அந்த வீடியோ கேமின் முக்கிய கதாபாத்திரத்திற்காக இந்த பைக்கை டிரையம்ஃப் உருவாக்கியிருக்கிறது.

02. பைக் விபரம்

02. பைக் விபரம்

டிரையம்ஃப் போனிவில் டி100 பைக் மாடலில் மாறுதல்களை செய்து இந்த கஸ்டமைஸ் பைக்கில் மாறுதல்களை செய்துள்ளனர். டிரையம்ஃப் போனிவில் வேனோம் என்று இந்த கஸ்டமைஸ் பைக்கிற்கு பெயரிட்டிருக்கின்றனர். இந்த பைக்கை வீடியோ கேமின் முக்கிய கதாபாத்திரமான வேனோம் ஸ்னேக் பயன்படுத்துவதாகவும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

03. கஸ்டமைஸ் அம்சங்கள்

03. கஸ்டமைஸ் அம்சங்கள்

கருப்பு- சிவப்பு வண்ணத்தின் மீது எப்போதுமே பலருக்கு கவர்ச்சியுண்டு. அதன்படியே, இந்த பைக்கின் பெரும்பான்மையான பகுதி கருப்பு நிறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. எஞ்சின் சிலிண்டர் ஹெட், பிரேக் காலிபர்கள், கைப்பிடி க்ரிப் கவர்கள் போன்றவை சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் கருப்பு - சிவப்பு அலங்காரம் மெய்மறக்கச் செய்கிறது.

 04. ஹெட்லைட்

04. ஹெட்லைட்

இந்த கஸ்டமைஸ் பைக் மாடலில் மஞ்சள் வண்ணத்திலான ஜேவிபி ரம்ப்ளர் ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹெட்லைட் பைக்கிற்கு தனித்துவத்தை அதிகரிக்கிறது.

05. சூப்பர்ப் ஃபினிஷிங்...

05. சூப்பர்ப் ஃபினிஷிங்...

ராணுவ பைக் மாடல்களில் இருப்பது போன்ற சாடில் பேக் ஒன்றும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டிரையம்ஃப் போனிவில் வேனோம் பைக்கின் ஒவ்வொரு பகுதியும் ரசிக்கும் விதத்தில் மாற்றியுள்ளனர். நின்று பார்த்து ரசிக்கும் விதத்தில் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து மாற்றியுள்ளனர்.

06. புகைப்போக்கிக் குழாய்

06. புகைப்போக்கிக் குழாய்

குறைவான நீளம் கொண்ட புகைப்போக்கிக் குழாய் பொருத்தப்பட்டிருக்கிறது. புகைப்போக்கிக் குழாய் உறை சுற்றப்பட்டு அதுவும் மிகவும் தனித்துவமான அழகையும், பழமையும், பாரம்பரியமும் மிக்க உணர்வை தருகிறது.

07. இங்கிலாந்தில் உலா

07. இங்கிலாந்தில் உலா

இங்கிலாந்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிரையம்ஃப் போனிவில் வேனோம் கஸ்டமைஸ் பைக் பல்வேறு இடங்களில் நடைபெற நிகழ்ச்சிகளில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக டிரையம்ஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
English summary
Triumph Motorcycles has now unveiled a one of a kind custom Bonneville christened ‘Venom'.
Story first published: Monday, May 25, 2015, 7:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark