ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் குழுவுடன் ஓர் உருப்படியான சந்திப்பு!

Posted By:

பெங்களூரில், கடந்த வார இறுதியில் நடந்த டஸ்கர் ஹார்லி டேவிட்சன் உரிமையாளர் குழு சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது.

மோட்டார்சைக்கிள் மீது தீராத பற்றுக் கொண்ட ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், உயிர்காக்கும் வழிமுறைகள் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியும் நடந்தது. இது உருப்படியான ஒன்றாக குறிப்பிடலாம். இந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு கண்ணோட்டத்தை ஸ்லைடரில் காணலாம்.

01. டஸ்கர் எச்.ஓ.ஜி குழு

01. டஸ்கர் எச்.ஓ.ஜி குழு

பெங்களூரில் உள்ள ஹார்லி டேவிட்சன் டீலரான டஸ்கர் இந்த குழுவுக்கு ஸ்பான்சராக உள்ளது. இந்த குழுவில் 350க்கும் மேற்பட்ட ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

02. குழுவின் செயல்பாடுகள்

02. குழுவின் செயல்பாடுகள்

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உரிமையாளர்கள் சாலை பாதுகாப்பு, மோட்டார்சைக்கிளை முறையாக ஓட்டுதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், அவ்வப்போது குழு பயணங்களும் மேற்கொள்ள முடியும். இதற்கான ஏற்பாடுகளை இந்த குழு செய்யும்.

03. உயிர்காப்பு முறைகள்

03. உயிர்காப்பு முறைகள்

இந்த நிகழ்ச்சியில், டஸ்கர் ஹார்லிடேவிட்சன் உரிமையாளர் குழுவில் இடம்பெற்றிருக்கும் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து செயல்விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது.

04. முதலுதவி சிகிச்சை முறைகள்

04. முதலுதவி சிகிச்சை முறைகள்

இந்த நிகழ்ச்சியில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றி விளக்கங்களை டாக்டர் தினகர் செய்து காண்பித்தார். விபத்தில் எலும்பு முறிவு, காயங்கள் ஏற்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் விளக்கமாக செய்து காட்டினார்.

05. புதிய நிர்வாகிகள்

05. புதிய நிர்வாகிகள்

டஸ்கர் ஹார்லி டேவிட்சன் குழுவின் புதிய இயக்குனர் ஃபரூக் அகமது, துணை இயக்குனர் வினாயக் நாயக், சாப்டர் மேனேஜர் பிரணம் விஸ்வநாத், செயலாளராக சுல்தான் நசூர், பொருளாளராக சிர்லே ஜார்ஜ், எடிட்டராக ஆரத்தி செல்லப்பா, செயற்பாட்டு அலுவலராக விஜய்குமார், ரோடு கேப்டன்களாக விஷால் வாசு, ரோமேஷ் காலா, அஜய் ஹண்டா, மெக்சூத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். படத்தில் டஸ்கர் ஹார்லி டேவிட்சன் டீலர்ஷிப் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, டஸ்கர் எச்.ஓ.ஜி குழுவின் உயிர் காப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்றுனராக டாக்டர் தினகர், டஸ்கர் எச்.ஓ.ஜி குழு இயக்குனர் ஃபரூக் அகமது ஆகியோவர் உள்ளனர்.

விழிப்புணர்வு வீடியோ

விழிப்புணர்வு வீடியோ

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் தினகர் வழங்கிய உயிர் காப்பு மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகள் பற்றிய வீடியோ விரைவில் ஹார்லி டேவிட்சன் குழுவினர் மற்றும் இதர மோட்டார்சைக்கிள் குழுவினருடன் பகிரப்பட உள்ளது.

 
English summary
Meet the Tusker H.O.G., a local chapter sponsored by Tusker Harley-Davidson, an authorised dealership in Bangalore, which is owned and operated by Srinivas Reddy (Srini), and a troop of high-adrenaline, tattooed Harley owners from Bangalore.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark