இந்த விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு 3வது இடம் தான் முதல் 2 இடம் யாருக்குத் தெரியுமா?

இந்தியாவில் மொத்தம் 18 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாகவும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருப்பதாகவும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. முக்கியமாக ஸ்கூட்டர் மார்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது ஓலா, ஏத்தர், உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏகோபித்த வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றனர். மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவித்து வருகிறது.

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டிற்கு 3வது இடம் தான் முதல் 2 இடம் யாருக்குத் தெரியுமா?

பெட்ரோல்/ டீசல் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. இந்த மாசு உலக வெப்ப மயமாகுதலுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இதனால் உலகில் உள்ள அத்தனை நாடுகளும் தங்கள் நாட்டிலிருந்து எவ்வளவு மாசு வெளியேறுகிறது எனக் கணக்கிட்டு அதைக் குறைப்பதற்கான வழிமுறைகளைச் செய்து வருகிறது. இந்தியாவில் 20 சதவீதமான மாசு வாகனங்களால் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுவது ஒரு நல்ல முறையாக இருக்கும்.இதனால் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பாராளுமன்றத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாகப் பதில் ஒன்றை சம்ர்பித்தார். அதன்படி இந்தியாவில் மொத்தம் 18 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்திலும், டில்லி இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்திலும் இருப்பதாகக் கூறினார்.

இதே போல இந்தியாவில் மொத்தம் 5151 பொது சார்ஜிங் ஸ்டேஷன் மையங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறினார். இதில் எந்த இவி வாகனத்திற்கும் சார்ஜிங் ஏற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமாக 660 இவி சார்ஜிங் ஸ்டேஷன்களுடன் முதலிடத்திலும், 539 இவி சார்ஜிங் ஸ்டேஷன் உடன் டில்லி இரண்டாம் இடத்திலும், 439 சார்ஜிங் ஸ்டேஷன் உடன் தமிழகம் மூன்றாம் இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து தனியாக வேறு ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதின்கட்கரி இந்தியா முழுவதும் எலெக்ட்ரானிக் முறையில் டோல்கேட் கட்டணங்களை வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்து டோல்கேட்டில் டிராஃபிக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளார். அதற்கும் முன்னதாக பெரியர் இல்லாத டோல் கேட் கட்டண வசூல் முறையைக் கொண்டு வர பல நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தவுள்ளதாகவும் கூறினார். இது குறித்து ஆய்வு செய்யத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு ஏஜென்ஸியை நியமித்துள்ளதாகவும், அவர்கள் ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் ரீடிங் தொழிற்நுட்பத்தை எப்படி டோல்கேட்களில் பயன்படுத்து என்பது குறித்து ஆய்வு செய்துவருவதாகவும் கூறினார்.

இதற்கான சோதனை கட்ட திட்டம் டில்லி மீரட் சோதனை சாவடியில் நம்பர் பிளேட் ரீடிங் தொழிற்நுட்பத்தை பொருத்தி அதன் மூலம் முதல் கட்டமாகத் தகவல்களை எடுத்து அது எந்த அளவிற்கு பாஸ்ட் டேக் தகவல்களுடன் ஒத்துப் போகிறது என்பதைச் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். என மத்திய நிதியமைச்சர் நிதின்கரி தெரிவித்துள்ளார். மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர் தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையில் மொத்தம் 719 புரோஜெக்டர்கள் நடந்து வருகிறது என்றும் இது பருவ நிலை மற்றும் கொரோனா தொற்று காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சார்ஜிங் ஸ்டேஷன்கள் விவகாரத்தில் தமிழகம் இந்தியாவிலேயே மூன்றாவது அதிகமான பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது. ஆனால் இங்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறைவாக இருக்கிறது. முதல் 3 இடங்களில் தமிழகம் இல்லை. தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மற்ற ஒரு சில மாநிலங்களை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகமாவது எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்பதற்கு நல்ல சிக்னலாக இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Union Transport minister says 18 lakh evs registered in India
Story first published: Saturday, December 10, 2022, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X