ஐஎஸ்ஐஎஸ் ('ISIS') போன்ற வடிவம் உடைய நம்பர் பிளேட் கொண்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Written By:

ஐஎஸ்ஐஎஸ் ('ISIS') என்பது போன்ற பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் கொண்டுள்ள கார் உரிமையாளரை போலீஸ் மும்முரமாக தேடி வருகின்றனர்.

ஃபேன்சி நம்பர் பிளேட்கள் கொண்டிருப்பது உலகம் முழுவதும், பொதுவான விஷயமாக உள்ளது. எனினும், இந்தியர்கள் இந்த ஃபேன்சி நம்பர் பிளேட்கள் விஷயத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதில் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.

பதிவு எண்கள் கொண்ட சில நம்பர் பிளேட்கள் வினோத பிரமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிபடுத்தும் வகையில் உள்ளன. சில நம்பர் பிளேட்கள் வேடிக்கையானதாவும், முட்டாள்தனமானதாகவும் இருக்கிறது. ஒரு சில நம்பர் பிளேட்கள் நமது முகத்தில் புன்னகை வரவைக்கும் வகையிலும் உள்ளன.

இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் உள்ள கார் ஒன்று, இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அன்ட் சிரியா ('ISIS' - Islamic State of Iraq & Syria) என்ற தீவிரவாத அமைப்பை குறிக்கும் வகையிலான 'ISIS' என்பது போன்ற பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் கொண்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒருவர், உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு தீவிரவாத அமைப்பை ஆதரிக்கும் வகையிலான நம்பர் பிளேட் கொண்டிருப்பது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

'ISIS' என்பது போலவே காட்சியளிக்கும் இது, உண்மையில் '1515' என்ற பதிவு எண் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரில் தான், ஃபேன்சியாக காட்சியளிக்கும் இத்தகைய நம்பர் பிளேட் பொருத்தபட்டுள்ளது. இந்த மாருதி சுஸுகி எர்டிகா காரின் முழுமையான பதிவு எண், UP 32 HA 1515 என்றும், இது உத்திர பிரதேசத்தின் தலை நகரான லக்னோவில் பதிவு செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vehicle-owner-having-isis-style-fancy-number-plate-being-searched-by-police

வாஹன் (VAHAN) எனப்படும் இ-வெஹிகிள் ரெஜிஸ்ட்ரேஷன் சர்வீஸ் (e-vehicle registration service) வழங்கும் அமைப்பு, 'ISIS' என்பது போலவே காட்சியளிக்கும் பதிவு எண் கொண்ட மாருதி சுஸுகி எர்டிகா கார், ஷபானா பானோ என்பவருக்கு சொந்தமானது என உறுதி செய்துள்ளது.

ஃபேன்சி நம்பர் பிளேட்கள் பிரயோகம் மற்றும் நம்பர் பிளேட்களில், பதிவு எண்களை வார்த்தைகள் போல் காட்சி அளிக்கும் வகையில் மாற்றி அமைத்து கொள்வது, ஆர்.டி.ஓ எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lucknow Police is now on the lookout for private vehicle, which has number plate that has 'ISIS' (Islamic State of Iraq & Syria) written on it. This number, which looks like 'ISIS' is most likely to be 1515. This fancy number is seen on Maruti Suzuki Ertiga. It is confirmed that, this vehicle's complete registration is UP 32 HA 1515, which is registered in Lucknow, Uttar Pradesh...
Story first published: Wednesday, May 25, 2016, 12:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark