பாலைவன மணலில் சீறிய லம்போர்கினி அவென்டேடாரின் வீடியோ !

Written By:

பாலைவன மணலில் சீறிய லம்போர்கினி அவென்டேடாரின் வீடியோ வெளியாகியுள்ளது.

லம்போர்கினி அவென்டேடார் மிகவும் திறன்மிக்க கார்களில் ஒன்று என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். சமீப காலமாக, இது தீபிடித்து எரிவதிலும் பிரபலமாகி வருகிறது.

5.5 லிட்டர், வி12 கொண்ட லம்போர்கினி அவென்டேடாரின் இஞ்ஜின் 691 பிஹெச்பியையும், 691 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

நின்றநிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். இது அதிகப்படியாக மணிக்கு 349 கிலோமிட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

லம்போர்கினி அவென்டேடார் 4டபுள்யூடி அல்லது ஃபோர்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

சாலைகளில் இயக்குவதற்காக பிரத்யேகமாக தயாரிக்கபட்ட இந்த லம்போர்கினி அவென்டேடாரை, ஒருவர் மத்திய கிழக்கு நாடு பகுதியில் உள்ள பாலைவனத்தில் இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், இதனால் அவரது லம்போர்கினி அவென்டேடார் பெரிய அளவில் சேதம் அடைந்திருந்தாலும் ஆச்சர்யபடுவதிற்கு இல்லை. ஏனெனில், இப்படி செய்ததன் மூலம், அவரது லம்போர்கினி கார் அழுக்காவதோடு மட்டுமல்லாமல், இஞ்ஜின் உள்ளிட்ட பாகங்கள் பழுதடைந்திருக்க வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.

அறிவிழந்த பணக்காரரின் விபரீத விளையாட்டு !

English summary
Video of Lamborghini Aventador Off-Roading in desert sand released. A Lamborghini Aventador is fire breathing supercar. Lamborghini fitted it with a Four-wheel-drive system is for a spin in the sand. The rich idiot's game turns problematic for this Lamborghini Aventador.
Story first published: Friday, November 6, 2015, 12:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark