லோட்டஸ் எவோரா 400பிஎச்பி ஆளுமையை வெளிபடுத்தும் வீடியோ

Written By:

லோட்டஸ் கார் நிறுவனத்தின், லோட்டஸ் எவோரா 400 மாடல் கார் அதன் ஆளுமையை வெளிபடுத்தும் வீடியோ வெளியிடபட்டுள்ளது.

பிரித்தானிய கார் உற்பத்தி நிறுவனமான லோட்டஸ், ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் ரேசிங் கார்களின் உற்பத்திக்கு புகழ்வாய்ந்ததாக உள்ளது.

இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும், எஸ்பிரிட், எலான், யூரோப்பா மற்றும் எலீஸ் ஸ்போர்ட்ஸ் கார்கள், ஃபார்முலா ஒன் பந்தயங்களில் திறனை வெளிபடுத்தி வருகிறது.

இந்த லோட்டஸ் எவோரா 400, முதன் முதலில் ஃபிப்ரவரியில் அறிமுகம் செய்யபட்டது.

லோட்டஸ் எவோரா 400, 3.5 லிட்டர் சூப்பர்சார்ஜ்ட், வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. அது 400 பிஹெச்பி-யையும், 410 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை, 4 நொடிகளில் அடைந்துவிடும். இந்த லோட்டஸ் எவோரா 400, உச்சபட்சமாக, மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

லோட்டஸ் எவோரா 400 கார் அதன் முழு ஆளுமையை வெளிபடுத்தும் வீடியோ, பார்ப்போரை வியப்படைய செய்கின்றது.

 
English summary
Video of Lotus Evora 400 Showcasing Its Superiority released. The Lotus Evora 400 was first shown to the world in February. Now Lotus has showcased the Porshe baiting sports car's best features in a video showing a day in the life of the car.
Story first published: Monday, November 9, 2015, 9:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark