சோஃபாவை இடமாற்ற ஃபெராரியை உபயோகித்த வினோதர்

Posted By:

தனது சோஃபாவை இடமாற்றம் செய்ய, ஒரு பணக்காரர் தனது ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரை உபயோகித்த வீடியோ வெளியாகியுள்ளது.

உலகின் மிக விலை உயர்ந்த கார்களில், ஃபெராரியும் ஒன்றாகும். ஃபெராரியை மக்கள் பல்வேறு விதமாக பயன்படுத்துகின்றனர். ஃபெராரி இஞ்ஜின் முதல் தோற்றம் வரை அனைத்தையும் உயர் ரகத்தில் கொண்டுள்ளது.

ஃபெராரி 458 மாடல் கொண்டுள்ள இந்த விடீயோவில் காணப்படும் இந்த பணக்காரருக்கு, தனது சோஃபாவை புதிய வீட்டிற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருந்த அவர், சோஃபாவை தனது ஃபெராரி 458 ஸ்பைடர் காரிலேயே வைத்து இடமாற்றம் செய்து கொண்டார்.

நல்ல வேளையாக, காரின் மீது சோஃபாவை வைத்து கொண்டு செல்லும் போது, அதன் கீழ் சில ஷீட்கள் இருந்ததால், ஃபெராரி 458 காரின் பெயிண்ட்டுக்கு எந்த பாதிப்பும் நிகழ வில்லை. இந்த பணக்காரரின் வினோத செயலின் வீடியோ பார்ப்போரை வியப்படைய செய்து வருகிறது.

English summary
Ferrari is one of the costliest and stylish Cars. A unique video of Ferrari 458, being used for transporting Sofa from one place to another is released. This video surprises its viewers one and all over the unique act done by this Rich guy.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark