அரசுக்கு ட்வீட் அனுப்பும் சாலையிலிருக்கும் வினோத குழிகள் - இந்தியாவிற்கும் தேவையா?

Written By:

பனாமா நகரில், சாலைகளில் உள்ள குழிகளின் பிரச்னைகளை தீர்க்க, நூதன ஏற்பாடு ஒன்றை அந்நாட்டு செய்தித் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது.

குண்டு குழிகள் கொண்ட சாலைகளால் பிரச்னைகளை சந்திக்கும் அவல நிலை உலக அளவில் ஏராளமான நாடுகளில் உள்ளது. நமது இந்தியாவில், குறிப்பாக அதுவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த பிரச்னைகள் சற்று அதிகமாகவே உள்ளது. தற்போது பெய்து வரும் மழையும் நிலைமை மோசமாக்கியிருக்கிறது.

இந்த பிரச்னைகளை தீர்க்க உலகின் சில நாடுகளில் சில வினோதமான முயற்சிகளை மேற்கொண்டு, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். இப்படி தான், பனாமாவின் தலைநகரமான பனாமா சிட்டியிலும், சாலைகளில் குழிகளின் பிரச்னை மிக அதிகமாக இருந்தது.

இந்த பிரச்னையை தீர்க்கும் ஒரு முயற்சியாக, அங்கு ஒளிபரப்பாகும் டெலிமெட்ரோ ரிப்போர்டா என்ற ஒரு தொலைகாட்சி நிறுவனம் நூதன முயற்சியில் களம் இறங்கியது. பனாமா சிட்டி மிக அதிக அளவிலான உயர்ந்த கட்டிடங்கள் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஏராளமான சாலை குழிகளும் கொண்ட நகரமாக உள்ளது.

எனவே, குண்டு குழி சாலைகளை செப்பனிடுவதற்காக, பனாமா சிட்டியில் எங்கெல்லாம் குழிகள் இருந்ததோ, அங்கெல்லாம் ஒரு விசேஷ கருவி நிறுவப்பட்டது. வாகனங்கள் இந்த கருவி மீது ஏறிச் செல்லும்போது, ஆட்டோமேட்டிகாக அந்த கருவி பனாமா அரசாங்கத்தின் பொதுப் பணி துறையின் ட்விட்டர் கணக்கிற்கு ஒரு ட்வீட்டை அனுப்பிவிடும்.

இதன் முலம், சாலைகளில் இருக்கும் குழிகள் குறித்த புகார்களும் அரசாங்கத்திற்கு தெரியபடுத்தப்படதுடன், எங்கு எங்கு குழிகள் உள்ளது என்ற தகவல்களும் அரசுக்கு தெரியபடுத்தப்பட்டது. நாளடைவில், புகார்கள் குவிய குவிய, வேறு வழிகளின்றி, அந்நாட்டு அரசாங்கமும் இந்த குழிகள் நிறைந்த சாலைகளை சீர் செய்ய துவங்கினர். இதனால், பனாமா சிட்டி சாலைகளின் நிலைமை சீரானதுடன் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த உதாரணம், உலக அளவில் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது என்றால் அது மிகையாகாது என்றே கூறலாம். இதையடுத்து, சாலை குழிகள் பிரச்னைகளுக்கு, இத்தகைய தீர்வுகள் அவரவர் நாடுகளில் வந்தால் எப்படி இருக்கும் என மக்கள் யோசிக்க துவங்கியுள்ளனர்.

மழையினாலும், தரம் இல்லாத முறையில் சாலைகள் போடப்படுவதாலும், நமது நாட்டிலும் இந்த சாலைக்குழிகள் பிரச்னை மக்களை பெரும் அளவில் பாதித்து வருகிறது.

இப்படி ஒரு தீர்வு, நமது நாட்டிற்கும் வந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை நமக்கும் உள்ளது தானே?

ஆனால், நமது நாட்டில் மேலும் ஒரு பிரச்னை உள்ளது. நமது நாட்டில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில், பல இடங்களில் சாலைகளே இல்லையே...அதற்கு என்ன செய்வது ???

இதற்கு யாரிடமாவது, ஏதேனும் தீர்வுகள் உள்ளதா ???

இந்த செய்தி குறித்து மேலும் அறிந்து கொள்ள, #elhuecotwitero என்று கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

#elhuecotwitero-pothole-tweeting-Twitter-Account-page
English summary
Video of The Tweeting Pothole installed by Telemetro Reporta in Panama City released. These Tweeting Potholes tweets complaints to the government's Department Of Public Works twitter account, every time when a vehicle lands on the Tweeting Potholes. Slowly, the government started fixing up these potholes in the roads of Panama City.
Story first published: Saturday, November 21, 2015, 15:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark