விராட் கோஹ்லி வாங்கியுள்ள புதிய காரின் விபரங்கள்

Written By:

இந்திய கிரெக்கெட் வீரர் விராட் கோஹ்லி மீண்டும் ஒரு ஆடி காரை வாங்கியுள்ளார்.

விளையாட்டு வீரர்களில் சிலர் இரு சக்கர வாகனங்கள் மீதும், நான்கு சக்கர வாகனங்கள் மீது அதிக விருப்பம் கொண்டுள்ளனர். கேப்டன் மஹேந்திர சிங் தோனி பைக்கள் மீது அதிக அளவில் ஆர்வம் கொண்டவர். விராட் கோஹ்லி கார்கள் மீது சற்று அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

மீண்டும் ஒரு ஆடி காரை வாங்கியுள்ள விராட் கோஹ்லி, இந்த முறை ஆடி ஏ8 எல் மாடலை தேர்வு செய்துள்ளார். இந்த காரை வாங்கும் போது, ஆடி இந்தியாவின் தலைமை அதிகாரி ஜோ கிங்-கை நேரில் சந்தித்து காரை பெற்று கொண்டார்.

கோஹ்லி வாங்கிய ஆடி ஏ8 எல் மாடல் விவரங்கள்;

கோஹ்லி வாங்கிய ஆடி ஏ8 எல் மாடல் விவரங்கள்;

கோஹ்லி தற்போது வாங்கிய ஆடி ஏ8 எல் மாடல், 6.3-லிட்டர், ட்புள்யூ12 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 494 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 625 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த ஆடி ஏ8 எல் கார் லிட்டருக்கு 4.7 கிலோமிட்டர் மைலேஜ் வழங்குகின்றது என ஆராய் அமைப்பின் சோதனைகள் மூலம் உறுதி செய்யபட்டுள்ளது. பேட்டல் ஷிஃப்டர்கள் உடன் 8-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த ஆல்-வீல் டிரைவ் ரக காரான ஆடி ஏ8 எல், அனைத்து சக்கரங்களுக்கும் திறன் டெலிவரி செய்யபடுகிறது.

கஸ்டமைசேஷன் வசதிகள்;

கஸ்டமைசேஷன் வசதிகள்;

ஆடி ஏ8 எல் மாடல் காருக்கு, ஆடி நிறுவனம் ஏராளமான கஸ்டமைசேஷன் வசதிகளை (வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கு ஏற்ப பிடித்தவற்றை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புகளை) வழங்குகிறது.

வண்ணங்களை தேர்வு செய்ய வாய்ப்பு;

வண்ணங்களை தேர்வு செய்ய வாய்ப்பு;

இந்த கஸ்டமைசேஷன் வசதி படி, வாடிக்கையாளர்கள் எக்ஸ்டீரியரில் (வெளிப்புற அமைப்பில்) 100 மேற்பட்ட நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இண்டீரியரில் (உட்புற) அமைப்பில் 23 நிறங்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்ப்படுகிறது. மேலும், 12 வகையான உட்டன் இன்சர்ட்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கபடுகிறது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஆடி ஏ8 காரை காட்டிலும், ஆடி ஏ8 எல் கார் நீண்ட வீல்பேஸ் (அதிகமான நீளம்) கொண்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட ஆடி மாடல் காரில், ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்ட் அம்சங்களாகவே கிடைக்கின்றது. ஏ8 எல் கார் ஆடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் சிஸ்டத்துடன் வருகின்றது.

விராட் கோஹ்லியை பற்றி...

விராட் கோஹ்லியை பற்றி...

விராட் கோஹ்லி, இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக திகழ்கிறார். மேலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.

ஐபில் என அழைக்கபடும் இந்தியன் பிரிமீயர் லீக்-கின் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடுகின்றார். ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூலம் வழங்கப்படும் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை, 2012-ஆம் ஆண்டில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கோஹ்லியிடம் உள்ள பிற ஆடி கார்கள்;

கோஹ்லியிடம் உள்ள பிற ஆடி கார்கள்;

கார்களை அதிகமாக விரும்பும் விராட் கோஹ்லியிடம், ஆடி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏராளமான கார்கள் உள்ளன. முன்னதாக, கோஹ்லி ஆடியின் மிக வேகமான மாடலான ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் காரை வாங்கி இருந்தார்.

இதை தவிர, விராட் கோஹ்லியிடம் பல்வேறு சூப்பர் கார்கள் உள்ளது. தற்போதைய நிலையில், விராட் கோஹ்லியிடம், க்யூ7 எஸ்யூவி, ஆர்8, ஆர்8 எல்எம்எக்ஸ் லிமிடெட் எடிஷன் மாடல் உள்ளிட்ட பல கார்கள்.

கோஹ்லி இப்போது வாங்கியுள்ள ஆடி ஏ8 எல் கார், அவர் வைத்துள்ள கார்களின் பட்டியலில் புதிய வரவாக சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.

English summary
Virat Kohli has bought another Audi Car once again. Captain of the Indian Test Cricket Team and leading ODI Cricket Player, Virat Kohli is very fond of Cars. Virat Kohli has now bought the Audi A8 L model Car from Audi.
Story first published: Tuesday, November 3, 2015, 18:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark